Wednesday, June 9, 2010

புலி பீதியியை ஏற்படுத்தி அவசரகால சட்டத்தினை நீடிக்கும் அரசு

0 comments
இன்று 121 வாக்குகளால் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அவ்சரகால சட்டத்தின் கீழ் தமிழர்கள் காலங்காலமாக அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கத்தினை அரசு கைவிடுவதாக இல்லை. அவசரகால சட்டத்தினை நீடிப்பதற்காக புலி பீதியினை அடிக்கடி ஏற்படுத்தி அறிக்கைவிடுவதும் அதனை காரணங்காட்டி அவசரகால சட்டத்தினை நீடிப்பதும் நிற்கப்போவதில்லை என்றே தெரிகின்றது.

இந்த அடிப்படையில் தான் இன்று நாடாளுமன்றில் பிரதமர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குயேற்றப்படும் மக்களுடன் மக்களாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.

வடபகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தனி நாடொன்றைக் கோரும் கனவு இதுவரை விட்டுக்கொடுக்கப்படவில்லை எனவும் மீண்டும் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனாலேயே, மே மாதமளவில் 77 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் டி.எம்.ஜயரட்ன மேலும் குறிப்பிட்டார்.

ஈழநாதம்

0 comments: