Saturday, July 30, 2011

சக ராணுவ வீரர்கள் அப்பாவி பொது மக்களின் நாக்குகளை துடிக்க துடிக்க அறுத்தனர், பெண்களை துன்புறுத்தி கற்பழித்தனர் : பெர்னாண்டோ ராணுவ வீரர் பேட்டி

0 comments


இலங்கையில்
கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே
உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர்
ஈடுபட்டனர். தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி
அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4'
தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதையடுத்து போர்க்குற்றம் புரிந்த அதிபர்
ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை
உலகளவில் வலுத்து வருகிறது. இந் நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட
போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்களை `சேனல் 4' மேலும்
அம்பலப்படுத்தியுள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும்
விடுதலைப் லிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி
அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப் புலிகள்
சரணடைந்தனர். அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப் புலிகளை ஈவு
இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு,
ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டதாக சேனல் 4
தெரிவித்துள்ளது. இதையடுத்து விடுதலைப்பு லிகளை சிங்கள ராணுவத்தினர்
கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தகவலை அப்போது இலங்கை ராணுவத்தின்
58வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார். அதன்பிறகு
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு
அளிக்கப்பட்டு தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத் தூதராக
பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

போரின் இறுதி நாட்களில் நடந்த
கொடூரங்கள் குறித்து பெர்னாண்டோ என்ற ரா ராணுவ வீரர் `சேனல் 4'
தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி, கதி கலங்க வைத்துள்ளது. தனது
பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில்
பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக் கொன்றனர். மரத்தில்
கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து
எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று
குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப் புலிகள் அல்ல.
சாதாரண குடிமக்கள்தான். பெண்களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி
கற்பழித்தனர்.

அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை
அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண்
ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே
பார்த்தேன். ராணுவத்தினரின் செயல்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது.
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததை
பார்த்தேன். இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ
தெரிவித்து உள்ளார்

Sunday, July 10, 2011

தெற்கு சூடான் உதித்தது ! தமிழ் ஈழம் மலரட்டும்! வைகோ

0 comments
பிரபஞ்சப் பூச்செடியில், புதிதாக ஒரு மலர் பூத்து உள்ளது ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில், தெற்கு சூடான் இன்றுமுதல், சுதந்திரத் தனி நாடு, என உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது;
ஜூலை 8 ஆம் தேதி நள்ளிரவில், நடுநிசி கடந்து, கடிகாரத்தின் பெரிய முள் 12 ஐத் தாண்டி, ஒரு நிமிடம் ஆனபோது, தெற்கு சூடான், சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது; தலைநகர் ஜூபாவில், சுதந்திரக் கொடி பறக்கிறது; சல்வாஹிர் மியார்டிட், நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக ஆகிவிட்டார். இனப்படுகொலைக்கு ஆளாகி, துன்பம் எனும் நரக இருளில் தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமை நுகத்தடியை முறித்து, தங்கள் மண்ணை, சுதந்திர பூமியாக உலகு ஏற்றுக் கொண்டதை, ஆடிப்பாடிக் கோலாகலமாக நடத்தும் கொண்டாட்டங்களில், அக்கருப்பர் இனத்து சிறுவர் சிறுமிகள், தங்களின் சுதந்திர தேசக் கொடியுடன் குதித்துக் கும்மாளம் இடுவதை, ஊடகத் திரைகளில் காணும்போது, ஈழத்தமிழர்களும், அவர்களின் பிள்ளைகளும், இப்படி சுதந்திர ஆனந்தப் பள்ளு பாடும் நாள் விரைவில் மலராதா? என்ற ஏக்கம் நெஞ்சை அடைக்கிறது.

தெற்கு சூடான் விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களில், ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன், அமெரிக்கக் குடியரசின் முன்னாள் தலைவர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட, பன்னாட்டு அதிபர்களும் பங்கு ஏற்கின்றனர். இந்தியாவும், தன் பங்குக்கு, குடியரசின் துணைத்தலைவர் ஹமீது அன்சாரியை அனுப்பி வைத்து உள்ளது. நைல் நதி தீரத்தில் இந்தக் கருப்பர் நாடு மலர்ந்திட, அம்மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்தியது. அந்தத் தீர்வைத்தானே தமிழ் ஈழ மக்கள் இன்று கேட்கிறார்கள். தாய்த் தமிழகத்தின் இளைஞர்கள், கோடிக்கணக்கான மக்கள், அந்த இலக்கை அடைய, உரிமைப் போர் முழக்கம் செய்யும்போது, எந்தச் சக்தி அந்தத் தீர்வைத் தடுத்து விட முடியும்?

உலகின் மிகப் பழமையான நைல் நதி பாய்ந்தோடும் சூடான் குடியரசு நாடு, முன்னொரு காலத்தில் எகிப்தியப் பேரரசின் ஆதிக்கத்திலும், பின்னர் பிரித்தானியக் காலனி நாடாகவும் இருந்து, 1956 முதல் சுதந்திர நாடாக ஆயிற்று. வடக்கு சூடான் பகுதியில், அராபியர்களின் வழித்தோன்றல்களும், நுக்பியர்களும் வாழ்கின்றனர். தெற்கு சூடான் பகுதியில், கருப்பர் இன மக்களும், இயற்கை வழிபாட்டுப் பழங்குடியினரும் வசிக்கின்றனர். வடக்கே இஸ்லாம் மார்க்கமும், தெற்கே கிறித்துவ மார்க்கமும் ஆளுமை கொண்டு உள்ளன. வடக்குக்கும், தெற்குக்கும் இடையே மூண்ட மோதல்களால், 56 முதல் 72 வரை முதல் உள்நாட்டுப் போரும், மீண்டும் 83 இல் இரண்டாம் உள்நாட்டுப் போரும் மூண்டன.

1989 இல், திடீர்ப் புரட்சியை நடத்திய இராணுவத் தளபதி உமல் அல் பசீர், குடியரசுத் தலைவராக முடிசூட்டிக் கொண்டார். இன்றுவரையிலும், அவரே சர்வாதிகாரியாக இருக்கின்றார். எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடானில், தொடர் இராணுவத் தாக்குதல்கள், இனப்படுகொலையாகவே, அல் பசீர் அரசால் நடத்தப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் படுகொலைக்கு உள்ளாயினர். பாய்ந்தோடும் நைல் நதியில், அவர்களின் செங்குருதி கலந்தது. இனக்கொலை நடத்திய அதிபர் உசேன் அல் பசீருக்கு, 87 விழுக்காடு ஆயுதங்களை, செஞ்சீனாதான் வாரி வழங்கியது. ரஷ்யா, தன் பங்குக்கு, 8 விழுக்காடு ஆயுதங்களைத் தந்தது. இதெல்லாம் எதற்காக? சூடானின் எண்ணெய் வளத்தைக் கொள்ளை அடிப்பதற்காக! தெற்கு சூடானில், முதலில் இராணுவத்தில் பணி ஆற்றி, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜான் கராங், சூடான் மக்கள் விடுதலைப் படையின் தலைவர் ஆனார். 2005 ஆம் ஆண்டு, விமான விபத்தில் மாண்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை உள்ளிட்ட அழுத்தங்களால், சூடான் அரசும், தெற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் நய்வாசா அமைதி உடன்படிக்கை செய்து கொண்டன. தெற்கு சூடான், தனி நாடாகப் பிரிந்து செல்வதா? அல்லது சூடான் குடியரசிலேயே நீடிப்பதா? என்பதை, 2011 ஆம் ஆண்டு, ஜனவரியில், பொது வாக்குப்பதிவு மூலம் தீர்மானிப்பது என்று, முடிவு செய்தனர். இந்த ஒப்பந்தத்தின்படி, பொது வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்துவதற்கு, ஒத்துழைப்புத் தருமாறு, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, சாட், லிபியா, கென்யா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா, எதியோப்பியா, நைஜீரியா, ருவாண்டா ஆகிய நாடுகளின் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்; திட்டமிட்டவாறு வாக்குப்பதிவை நடத்தாவிடில், சூடான் நாட்டின் மீது பொருளாதார முற்றுகையை அமெரிக்க தீவிரப்படுத்தும் என்றும், திட்டமிட்டபடி வாக்குப்பதிவை நடத்தினால், பயங்கரவாத நாடு என சூடான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதாகவும் அறிவித்தார்.

தெற்கு சூடானில்தான் 80 விழுக்காடு எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. இந்த எண்ணெய், வடக்கு சூடானின் துறைமுகங்கள் வழியாகத்தான் அயல்நாடுகளுக்கு அனுப்ப முடியும். எனவே, தங்கள் துணை இல்லாமல், தனி நாடாக, தெற்கு சூடான் இயங்க முடியாது என்று, சூடான் அரசும், அதற்குத் துணையாக, சில அதிபர்களும் கூறி வந்தது, உரிமைச் சம்மட்டியின் அடியால் நொறுங்கிப் போய்விட்டது. சூடான் இராணுவமும், அரசு ஏவிய ஆயுதக் குண்டர் கூட்டமும் நடத்திய படுகொலைகளால், வீடு, வாசல் இழந்து, வடக்கு சூடானில் தலைநகர் கர்டோமைச் சுற்றிலும் உள்ள முகாம்களில் மட்டும், ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து இருந்தனர். துன்பத்தில் துடிதுடித்த அந்த மக்களும், இந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க உரிமை கோரியபோது, முதலில் மறுத்த சூடான் அரசு, பின்னர் வேறு வழி இன்றி அதற்கு ஒப்புக் கொண்டது.

உகாண்டாவிலும், கென்யாவிலும் அகதிகளாக இருந்தவர்களும், தங்கள் தாயகத்துக்குத் திரும்பி வந்து வாக்கு அளித்தனர். 2011 ஜனவரி 9 ஆம் தேதி முதல், 15 ஆம் தேதி வரையிலும், ஆறு நாள்கள் பொது வாக்குப்பதிவு நடைபெற்றது. தெற்கு சூடானின் மக்கள் தொகையில், அறுபது விழுக்காட்டினர் அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வேண்டும்; அதில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தருகின்ற தீர்ப்பு எதுவாயினும் ஏற்பது என, சூடான் அரசும், விடுதலை இயக்கமும் ஒப்புக் கொண்டு இருந்தன. ஆனால், வாக்குப்பதிவில் பங்கு ஏற்ற 97 விழுக்காட்டினருள், 99 விழுக்காட்டினர், தெற்கு சூடான் தனி நாடாக அமைவதற்கு ஆதரவு அளித்தனர்.

வாக்கு அளிக்கப் பதிவு செய்து கொண்டோர்: 39,47,676 பேர்
வாக்கு அளித்தவர்கள்: 38, 51,994 பேர் (97.58 விழுக்காடு)
செல்லுபடியான வாக்குகள்: 38,37,406 பேர் (99.62 விழுக்காடு)
தனி நாட்டுக்கு ஆதரவு : 37, 92, 518 பேர் (98.83 விழுக்காடு)
எதிர்ப்பு : 44,888

தெற்கு சூடான், சுதந்திர தேசக் கொடி பட்டொளி வீசுகிறது. விடுதலை சங்கநாதம், திசையெங்கும் கேட்கிறது. ஆனாலும், சூடான் நாட்டுக்குள் எந்த நேரமும் குமுறி வெடிக்கும் என்ற நிலையில், டர்ஃபுர் பிரதேசப் பிரச்சினை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. அங்கு வாழும் பழங்குடி மக்கள், ஆதிக்க இனத்தினரால் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். மனித இனத்தின் பேரழிவுகளுள் ஒன்று என்றே, உலகத்தலைவர்களுள் பலர் அதைக் குறிப்பிட்டு உள்ளனர். அங்கும் ஒரு வாக்குப்பதிவை, 2012 ஆம் ஆண்டில் நடத்துவது எனத் தீர்மானித்து உள்ளனர். �வடக்கு, தெற்கு, மேற்கு டர்ஃபுர் பகுதிகளை உள்ளடக்கி, சுயாட்சி அதிகாரம் கொண்ட, ஒருங்கிணைந்த டர்ஃபுர் மாநிலம் அமைப்பதா? அல்லது, தற்போது உள்ளவாறு, மூன்று மாநிலங்கள் என்ற நிலையே நீடிப்பதா?� என்பதை, அந்த வாக்குப்பதிவு முடிவு செய்யும்.

மேலும், வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் நடுவே அமைந்து உள்ள அபெய் (ஹநெலஇ) மாநிலம், யாருக்குச் சொந்தம் என்பதுவும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. மோதலுக்கு இது வழிவகுக்கக் கூடும் என்பதால், அதற்கும் ஒரு தனி வாக்குப்பதிவுதான் தீர்வாக அமையக்கூடும். சூடான் அதிபர் அல் பசீர் நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களுக்காக, அனைத்து உலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று, 2004 ஆம் ஆண்டு, ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம், 1564 ஆவது தீர்மானத்தின்படி முடிவு செய்தது. 2005 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், அதே மன்றம் அறிவித்ததற்கு இணங்க, 2008 ஆம் ஜூலை 14 ஆம் நாள், அனைத்து உலக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அல் பசீரைக் கைது செய்யப் பிடி ஆணை பிறப்பித்தது. 2010 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், தி ஹேக் நகரில் உள்ள நீதிமன்றம், அல் பசீரை, இனக்கொலை நடத்திய குற்றவாளி என அறிவித்து விட்டது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைத் துடிக்கத்துடிக்கக் கொடூரமாகக் கொலை செய்த, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவனது கூட்டாளிகளும், அனைத்து உலகக் குற்ற இயல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவும், அதற்கு உரிய நடவடிக்கைகளை, ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் மேற்கொள்ளவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்குப்பதிவு, பன்னாட்டுப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் நடத்தப்படவும், தெற்கு சூடான் உதயமான திருநாளான இந்த ஜூலை 9 ஆம் நாள் அன்று, தாய்த் தமிழகத்து மக்கள்சூளுரைப்போம்! சுதந்திர தெற்கு சூடானின் உதயம்,சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு, பன்னாட்டு அரங்கில் நுழைவாயில் ஆகட்டும்!

தாயகம்
வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்
09.07.2011
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

சனல் 4க்கு எதிராக வன்னியில் பேரணி: உண்மை என்ன ?

0 comments
இலங்கை அரசாங்கத்தின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கின்ற சனல் 4 ஒளிப்படக் காட்சிக்கு எதிராக கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இராணுவத்தினர் பலவந்தமாகப் பொதுமக்களைக் கொண்டு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் ஜெயபுரம் 661 ஆவது இராணுவ படைத்தளத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.ஜெயபுரம், கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, முழங்காவில் போன்ற பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கு வெள்ளியன்று சென்ற இராணுவத்தினர், சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜெயபுரத்திற்கு வருகை தந்து விவசாயிகளுக்கான உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்போவதாகவும், அவற்றை வந்து பெற்றுச் செல்லுமாறும் அறிவித்திருந்தனர்.

மறுநாள் காலை இந்தப் பகுதிகளுக்கு பேரூந்துகளுடன் சென்ற படையினர் ஆண்கள் பெண்கள் என பொதுமக்களைப் பலவந்தமாக பேரூந்துகளில் ஜெயபுரத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளனர். ஜெயபுரம் இராணுவ முகாமில் சனல் 4க்கு எதிராக ஏற்கனவே தயாராக எழுதி வைக்கப்பட்டிருந்த பதாதைகள், சுலோக அட்டைகளை இவர்களது கையில் கொடுத்து எதிர்ப்பு ஊர்வலம் நடத்துமாறு அச்சுறுத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும், பொலிசாரும் சூழ்ந்து நிற்க, சுலோக அட்டைகளையும் பெரிய சிங்கக் கொடிகளையும் ஏந்திய மக்களினால் சுமார் 300 மீற்றர் தொலைவுக்கு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.

முன்கூட்டியே அங்கு அழைத்து வரப்பட்டிருந்த செய்தியாளர்கள், இந்த எதிர்ப்பு ஊர்வலத்தை படங்கள் எடுத்ததுடன், வீடியோவும் எடுத்துள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டு அச்சுறுத்தப்பட்டே, ஊர்வலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் தமது சுயவிருப்பத்திற்கு மாறாகவே தாங்கள் கலந்து கொள்ள நேர்ந்ததாக ஊர்வலத்திற்குப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பலரும் தெரிவித்துள்ளனர். போர்க்குற்றச்சாட்டுகளால் விழி பிதுங்கி நிற்கும் அரசாங்கத்தையும், இராணுவத்தினரையும் இத்தகைய கபடமான ஏமாற்று நாடகங்களின் மூலம் காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய வன்னியில் உள்ள இராணுவ அதிகாரிகள் முழு மூச்சாக இறங்கியிருப்பதாக வன்னியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றார்கள்.

ஒன்றை மூடி மறைக்க அதற்கு பதிலாக வேறு ஒன்றை மறைக்கநேரிடுமாம் !

0 comments
சமீபத்தில் பெருமதிப்புக்குரிய ஐயா நெடுமாறன் அவர்கள் ஒரு அறிவித்தலை தன் கையொப்பத்தோடு வெளியிட்டார். அதில் தான் தஞ்சாவூரில் கட்டும் ஈகிகள் முற்றம் என்னும் இடத்துக்கு காசுசேர்க்கும் ஒரு இணையம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். தனது முன் அனுமதியின்றி, தமக்கே தெரியாமல் காசுசேகரிக்கப்படுவதாகவும், அவ்வாறு ஒரு உரிமையை யாருக்கும் தான் கொடுக்கவில்லை என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார். (5.07.11 அன்று வெளியான அவ்வறிவித்தலை இங்கு அழுத்திப் பார்க்கலாம்) அது எந்த இணையம் என ஆராய்ந்தபோது அது தமிழ் வின் எனக் கண்டறியப்பட்டது. சுவிசில் உள்ள சில நபர்கள், தமிழ் வின் இணையத்தைப் பாவித்து பேப் பாலூடாக இந் நிதிச்சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் வேறு எந்த இணையத்திலும் நிதிசேகரிப்பது தொடர்பாக செய்திகள் அவ்வளவாக வெளியாகவில்லை. ஏன் தமிழ் வின் இணையம் மட்டும் இந்த நிதிசேகரிப்புக்கு பயன்படுத்தப்படவேண்டும்? ஒரு பொதுக் காரியம் என்றால் எல்லா இணையங்களிலும் போடலாமே.. ஏன் அவ்வாறு செய்யப்படவில்லை என்பது பூட்டப்பட்ட சந்திர முகியின் அறை ரகசியம்போல இருக்கிறது. ரஜனிதான் வரவேண்டும் கண்டுபிடிக்க ! ... அது ஒருபுறம் இருக்க...

பெருமதிப்புக்குரிய ஐயா நெடுமாறன் அவர்கள் 5.07.11 அன்று வெளியிட்ட அறிக்கையில் தாம் சுவிசில் நிதி திரட்ட பொறுப்பாக திரு.ரஞ்சன் அவர்களை நியமித்துள்ளதாக அறிவித்தல் எதுவும் விடவில்லை. ஆனால் சுவிசில் உள்ள சில நபர்களோ தாமாகவே இந்த நிதிதிரட்டலை ஆரம்பித்துவிட்டனர். அதனைத் தான் அதிர்வு இணையம் பிழை என்று எழுதியது. இதனையே பெருமதிப்புக்குரிய நெடுமாறன் ஐயாவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தார். அதனை அதிர்வு இணையம் வெளியிட, சுவிசில் நிதி திரட்டிய நபர்கள் சண்டைக்காரன் காலில் விழுவதை விட சாட்சிக்காரன் கால்களில் விழலாம் என விழுந்துவிட்டனர்.

தமிழ் வின் கொடுத்த அழுத்தங்களும், சுவிஸில் பணம் திரட்டப்பட்ட நபர்களால் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக அவசர அவசரமாக மற்றுமோர் அறிவித்தல் தயாராகி, இன்று தமிழ்வின்னில் வெளியாகியுள்ளது. அதில் திரும்பவும் பெருமதிப்புக்குரிய ஐயா நெடுமாறன் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார். அதில் அவர் சுவிசில் நிதி திரட்ட தாம் ஒருவரை நியமித்துள்ளதாகக் கூறியுள்ளார். திரு ரஞ்சன் அவர்களின் நியமனம் இன்று தான் நடைபெற்றுள்ளது(ஐயா கையொப்பம் இட்டுள்ளார் மறக்கவேண்டாம்). அப்படி என்றால் முன்னர் நியமிக்கப்படவில்லை என்பது தான் அதன் கருத்து. எனவே முன்னர் நியமனம் பெறாமல் நிதி திரட்டியது குற்றம் தானே ? என்ன நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற வாதம் போல இருக்கிறது என்று பார்க்கிறீர்களா ?

சிவன் என்ன... யார் பிழைவிட்டாலும் பிழை பிழைதானே ! அதாவது நெடுமாறன் ஐயாவுக்கும், நிதிசேகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கும் இருவழித் தொடர்பாடல் இருந்திருந்தால் இதுபோன்ற அறிக்கை வெளியாகியிருக்காதே. திடீரென ஏற்படுத்தப்பட்ட தொடர்புகளால் அறிக்கை மாற்றப்பட்டு அவர்கள் நிரபராதிகள் ஆக்கப்பட்டு, அதற்கு துணைபோன தமிழ் வின்னின் கறைகள் அவசர அவசரமாகத் துடைக்கப்பட்டுள்ளது தமிழ் நாட்டு அரசியலைப் போல ! இந்த நிதி சேகரிப்பு குறித்து நாம் எழுதி இருக்காவிட்டால் சேர்க்கப்பட்ட நிதி சென்றடைந்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் நாம் எழுதியதால் தற்போது மக்கள் கொடுத்த பணம் ஒரு உண்ணத காரியத்துக்காகச் சென்றடையப்போகிறது ! கலகம் பிறக்காமல் வழி பிறக்காது என்பார்கள் ! அதுபோல அதிர்வு எழுதாமல் சில விடையங்கள் அம்பலத்துக்கு வராது!

எனவே அதிர்வு வெளியிட்ட செய்தியால் நாம் வெற்றிபெற்றிருக்கிறோம் ! மக்கள் ஆதரவு ஈகிகள் முற்றத்துக்கு பெருகியுள்ளது ! முடங்கியிருந்த நிதி சென்றடையப் போகிறது , மக்கள் இனியும் உதவிசெய்வார்கள் ! சரியான நிதிசேகரிப்பபர்கள் யார் என மக்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் ! எனவே எச் செய்திகளானாலும் நாம் வெளியிடப் பின்னிக்கப் போவது இல்லை என்பதனை நாம் வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

நன்றி !

அதிர்வின் ஆசிரியபீடம்.