இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்த இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுடனான போரில் தாம் பயன்படுத்திய உத்திகளை நக்சலைட்டுகளுக்கு எதிராகப் பயன்படுத்த முடியம் எனத் தெரிவித்த காரியவசம் இது குறித்த ஆலோசனைகளை வழங்க இலங்கைப் படை அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசு எனக் காட்டிக் கொள்ளும் இந்தியாவிற்கு ஆலோசனை வழங்க இலங்கை முன்வந்துள்ளது குறித்து பல்வேறு தரப்புக்களும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளன.
எனினும் விடுதலைப் புலிகளுடனான போரிற்கான முழுமையான ஆலோசனைகள் களத்திலிருந்த இந்திய படைத்துறை அதிகாரிகளாலேயே வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுதலிப்பதற்கான உபாயங்களில் ஒன்றாக இது இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.










0 comments:
Post a Comment