skip to main |
skip to sidebar
போரில் காயமடைந்து, மற்றும் வான்படையின் குண்டு வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பெண்போராளிகளை செத்த உடலங்களோடு தூக்கிப் போட்டும் இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இலங்கை போர்குற்றம் தொடர்பான பல காணொளிகளை வெளியிட்டுவரும் சனல் 4 தொலைக்காட்சி வரும் ஜூன் 14ம் திகதி புது யுத்தக்குற்ற காணொளி ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 1 மணித்தியாலம் நடக்கவிருக்கும் இந் நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பாக அலசி ஆராயப்படவுள்ளதாகவும் அது செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வேளை இந்த புதிய ஆதாரக் காணொளிகளில், பெண்போராளிகளைக் கொல்வதும், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் பெண்களை இறந்த உடலங்களோடு தூக்கிப் போட்டு அவர்களையும் கொலைசெய்வதையும் இக் காணொளி கொண்டுள்ளதாக அதனைப் பார்வையுற்ற நம்பத்தகுந்த வட்டாரங்கள் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்தனர். இந் நிகழ்ச்சி ஜூன் 14 ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒளிபரப்பைத் தடுக்க ஒஃப் கம்(OFCOM) நிறுவனம் மூலம் இலங்கை அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment