Friday, February 11, 2011

கருணா -பசில் ராஜபக்சே மோதல்

0 comments
இலங்கை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதில் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பிரதியமைச்சர் முரளிதரன் (கருணா) ஆகியோருக்கிடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஆரம்பிப்பது தொடர்பான சாத்தியமான நடவடிக்கைகளை கருணா மேற்கொண்டு வருகின்றார்.

அப்போது வழங்கப்படும் ஒப்பந்தங்களில் கிழக்கு மட்டுமன்றி இலங்கையின் எந்தப் பகுதியைச் சோ்ந்தவராக இருந்தாலும், உள்நாட்டவர்களுக்கு முதலிடம் கொடுத்துச் செயற்படுவதே அவரது முக்கிய எதிர்பார்ப்பாகும்.

ஆனாலும் அமைச்சர் பசில் ராஜபக்சே அதனைப் புறக்கணித்து முற்றிலும் வெளிநாட்டவர்களை மையமாக வைத்தே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். அல்லது உள்நாட்டவர்களுக்கு முட்டுக்கட்டை போடுவதில் முன் நிற்கின்றார்.

திருகோணமலை குச்சவெளியில் சுற்றுலா அபிவிருத்தித் தலம் அமைக்கும் முயற்சியின்போது உள்நாட்டு வர்த்தகர்கள் அங்கு முதலீடு செய்ய முடியாதவாறு கடும் நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன.

இந்த விசயங்கள் காரணமாக அமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் கருணா ஆகியோருக்கிடையே அதிகார ரீதியான முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நக்கீரன்

0 comments: