Tuesday, January 25, 2011

யாழ்ப்பாணத்தை முற்றுகையிடும் உலக நாடுகள்

0 comments
அமெரிக்கத் தகவல் கூடம் யாழில் திறந்து வைப்பு!செவ்வாய், 25 ஜனவரி 2011 00:33 .அமெரிக்க தகவல் நிலையம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில முதன் முதலாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ புட்டினிஸால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் அமெரிக்க தகவல் கூடம் தான் யாழ்ப்பாணத்தில் செயற்படும் முதலாவது உயர்தர இணைய இணைப்பு கொண்ட நிலையமாகும்.

அமெரிக்க தகவல் கூடமானது திறக்கப்படுவதானது நாம் யாழ்.மக்களோடு கொண்டுள்ள தளராது தொடரும் அர்ப்பணத்தின் ஒரு அடையாளமாகும்.



அமெரிக்க தகவல் கூடம் என்பது வெறுமனே புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் வாசிக்கும் ஒரு இடமன்று, மாறாக டிஜிட்டல் தொலை தொடர்பு வசதிகள் மூலம் உலகம் முழுவரையும் இணைக்கும் ஒரு இடமாகும்.



இத்திறப்பு விழா வைபவத்தோடு அமெரிக்க முதல் காரியத்தை சாதித்து வைக்கின்றோம். விரைவில் தகவல் கூடம் உயிரோட்டமுள்ள சமூக நிலையமாக உருவாகி இலங்கையரும் அமெரிக்கர்களும் உரையாடும் ஒரிடத்தினை பெற்றுத்தரும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம் என்றார்.



இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் சங்க பிரமுகர்கள், சமயப்பெரியார்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

0 comments: