Sunday, August 21, 2011

செனல்-4 காணொளியால் அதிர்ச்சியில் உறைந்த ஆஸி எம்பிக்கள்

0 comments
நியூஸிலாந்து பிரதமர் வழக்கம்போல் ஊடக பேட்டிகளை வழங்கும் இடத்தில் பீ.பீ.ஸி. சனல் 4 காணொளிப் படமான இலங்கையின் கொலைக் களம் காட்டப்பட்டது. ஓகஸ்ட் 16 ஆம் திகதி 3 நாடாளுமன்ற அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைத் திரையிட்டனர். இந்நிகழ்ச்சியில் 4 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் பங்குபற்றினர். மானா கட்சித் தலைவரான கோன கராவிரா மற்றும் கிறீன் கட்சி பிரதித் தலைவரான ரசல் நோர்மலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இக்காட்சியைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் அமைதியாக வெளியேறியதாக கெயித் லொக் எம்.பி. கூறினார்.
இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்பதே காட்சியைப் பார்த்தவர்களின் கருத்தாக காணப்பட்டது. நியூஸிலாந்திலுள்ள சில ஆதரவாளருடன் சேர்ந்து இலங்கைத் தூதுவர் இக் காட்சியை நாடாளுமன்றத்தில் காண்பிக்க டியாதவாறு முயற்சி மேற்கொண்டும் அது பயனளிக்கவில்லை.
2009 இல் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் சம்பந்தமாக ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையைக் கோருவதற்கு இக்காட்சிகள் ஒரு உந்துகோலாக அமையும்.
http://www.tamilthai.com/?p=24694

0 comments: