Sunday, August 21, 2011

கணவரை தேடிச்சென்ற என்னை உறவுக்கு வற்புறுத்திய இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல் (Video & photo in )

0 comments
உனது கணவருடன் கதைக்க வேண்டுமென்றால் என்னுடன் ஒரு தடவை உறவு கொள்ளவேண்டும் என இராணுவ அதிகாரிகள் தன்னை கஸ்டப்படுத்தியதாக கிளி நொச்சியில் வாழும் ஒரு பெண் கூறியுள்ளார். அல்ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான். நாம் எமது துணைவர்களைத்தேடி சிறைச்சாலைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும் செல்கின்றோம். அங்கு படையினர் தம்முடன் உறவு வைத்துக்கொண்டால் எமது கணவன் மாரை பார்க்க முடியும் என வற்புறுத்துவர் என கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் கட்டுப்பாடான பண்பாடுகள் பற்றி கூறும் அல்ஜசீரா அங்கு நடக்கும் சீர்கேடுகளுக்கு படையினர் மட்டும் காரணமல்ல என யாழ் மாவட்ட அரச அதிபர் கூறிய கருத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளது.இதில் இமெல்டா படையினர்க்கும் பெண்களின் சீர்கேட்டிற்கும் எதுவித தொடர்பும் இல்லை என கோத்தாவை காப்பாற்றியுள்ளார் இமெல்டா.







0 comments: