சனி, 22 ஜனவரி 2011 06:44 .எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவைச் சென்றடைந்த இலங்கைத் தமிழர்கள் சுமார் 400 பேர் வரையானோரில் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளார்கள் என்று தெரிகின்றது.
இவர்கள் 14 பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் என்றும் 15 ஆவது நபர் பயங்கரமான குற்றவாளி என்றும் இவர்களை உடனடியாக நாடு கடத்தியே ஆக வேண்டும் என்றும் கனேடிய பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்து உள்ளார்கள்.
இவர்கள் குறித்த தகவல்கள் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் பேரவைக்கு புலனாய்வாளர்களால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இவர்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித்து விட வேண்டும் என்றும் இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றும் பேரவைக்கு சிபாரிசும் செய்து உள்ளனர்.
0 comments:
Post a Comment