சென்னையில் இலங்கை வீரர் ஜெயசூர்யா விளையாடும் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’வர்த்தக நிறுவனங்கள் இடையேயான 6 வீரர்கள் பங்கேற்கும் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் போட்டி, சென்னையில் தற்போது பிரசிடென்சி கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது.
இறுதிப்போட்டி மாயாஜால் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஜெயசூர்யா, அரவிந்த் டிசில்வா, மோங்கியா, சஞ்சய்பாங்கர், ராபின்சிங், குளுஸ்னர், வினோத் காம்ப்ளி, சுனில்ஜோஷி ஆகியோர் ஆடுகிறார்கள்.
இதில் இனவெறி மகிந்த ராஜபக்ஷே வின் தீவிர ஆதரவாளரும்,இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இனவெறி மகிந்தா ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சனத் ஜெயசூர்யா நாளை(25-01-2011) செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளார்.
இவர் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு நச்சுக்கருத்துக்களை ஏற்கனவே வெளியிட்டு உள்ளார்.
இவர் தமிழ்நாட்டில் கிரிக்கெட் விளையாடுவதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.அங்கு ஒட்டு மொத்தத் தமிழினமும் இனவெறி ராஜபக்ஷேவினால் அழிக்கப்பட்டு விட்ட்து.
எஞ்சியிருப்பவர்கள் முள் வேலி முகாமிற்குள் அடைக்கப்பட்டு உணவின்றி,உடையின்றி,அடிப்படை வசதிகள் எதும் இன்றி நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் பல்லாயிரம் தமிழரை சிங்கள அரசு தனிக் கொட்டடியில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது.இது போக என் மீனவனைத் தினமும் சிங்களக் கடற்படை கொலை செய்து கொண்டிருக்கின்றது.
உலகின் கொடுங்குற்றங்கள் அனைத்தையும் செய்த ராஜபக்ஷேவோ இது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் ஆணவத்துடனும் மமதையுடனும் தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை கிரிக்கெட் விளையாட என் தாய் மண்ணிற்கு அனுப்பியுள்ளார
.
இது எம் இனத்தை மேலும் கொச்சைப்படுத்துவதாகவும் எம்மை அவமானப் படுத்துவதாகவும் உள்ளது.ஜெயசூர்யா கிரிக்கெட் விளையாட தமிழக அரசின் விளையாட்டு மைதானம் பயன்படுகிறது.
இதனை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.ஆகவே தமிழக அரசும் இந்த விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ள நிறுவன்ங்களும் உடனடியாக நாளை நடைபெறும் போட்டி உட்பட ஜெயசூர்யா பங்கேற்கும் அனைத்து போட்டியையும் ரத்து செய்ய வேண்டும்.
இதனையும் மீறி விளையாட்டை நடத்த முற்பட்டால் கிரிக்கெட் மைதானத்தையும், விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ள நிறுவன்ங்களின் அலுவலகங்களையும் நாம் தமிழர் கட்சி முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
nakkheeran

0 comments:
Post a Comment