Thursday, January 13, 2011

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

0 comments
துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற மீனவர் மரணம் அடைந்தார்.

ஜெகதாப்பட்டினதைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில்
மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்
திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் அத்துமீறி
துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்
குண்டு பாய்ந்ததில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த பாண்டியன் படகிலேயே
உயிரிழந்தார். உயிரிழந்த பாண்டியனின் வயது 25.

இந்த சம்பவத்தால் ஜெகதாப்பட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து, இறந்த பாண்டியனின் உடலுடன்
மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் - நாகப்பட்டினம்
கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

nakkheeran

0 comments: