கனடாவின் ஒன்டாறியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் செயற்பட்டு வந்த உலகத் தமிழர் அமைப்பின் உடமைகளை கனேடிய அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகத் தமிழர் அமைப்பின் உடமைகள் பயங்கரவாத அமைப்பினால் பயன்படுத்தப் பட்டவை என்றும் அதன் சொத்துக்களை முடக்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகத் தமிழர் அமைப்பானது கனடாவில் புலிகளுக்கு மிகவும் முக்கிய மானதொரு அமைப்பாகச் செயற்பட்டு வந்தது என கனேடிய றோயல் பொலிஸ் அதிகாரி ஸ்ரீவ் டப்ரெயுல் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் உடமைகளை முடக்கி கனேடிய அரசாங்கத்துக்கு வழங்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவைத் தாம் சாதகமாகவே பார்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் கனேடிய றோயல் பொலிஸின் பிரதி ஆணையாளர் கிலிஸ் மிச்சவுட் கனேடிய ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.
பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு தாம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை கனேடிய நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் உறுதிப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
tamilthai.com

0 comments:
Post a Comment