Tuesday, June 1, 2010

சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி

0 comments
கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில்
மலசலகூடக்குழியில் இருந்து மனித உடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இருபதிற்கு மேற்பட்ட உடலங்கள் இதில் உள்ளடங்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் இனப்படுகொலை வரலாறாக நீடித்துக்கொண்டே செல்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி என்ற பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு
உட்படுத்தப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தோண்டி
எடுக்கப்பட்டது. இதனை செய்தது சிங்களப்படைதான் என்பது நீதிமன்றத்தினால்
உறுதி செய்து தீர்ப்பும் எழுதப்பட்டது.

இவ்வாறுதான் அன்று சத்ஜெய படை நடடிவடிக்கை மூலம் கிளிநொச்சியை
வல்வளைத்த சிறீலங்காப்படையினர் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை
பிடித்து படுகொலை செய்துவிட்டு மலசலகூட கிடங்குகளிலும் பாழடைந்த
கிணறுகளிலும் வீசினார்கள். பின்பு கிளிநொச்சியினை மீட்ட விடுதலைப்புலிகள்
உருத்திரபுரம், கணேசபுரம், முறிப்பு, கோணாவில் போன்ற பகுதிகளில் மக்கள்
குடியேறியபோது ஒன்று இரண்டாக எலும்புக்கூடுகுள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்வாறுதான் தற்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
வன்னியில் இறுதிக்கட்ட போரின்போது முரசுமோட்டை பகுதியில் இருந்து
மக்களை பிடித்த சிறீலங்காப்படைகள் தொடர்ந்தும் கண்டாவளை, தர்மபுரம்,
உடையார்கட்டு, விசுவமடு, மூங்கிலாறு, தேவிபுரம், கைவேலி, இணைப்பாலை,
புதுக்குடியிருப்பு என்ற பகுதிகளில் எல்லாம் ஏராளமன தமிழ் இளைஞர்களை
பிடித்த சிறீலங்கா படையினர் களமுனையின் பின்களத்திலே வைத்து வடிகட்டல்
செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்.

குறிப்பாக இளம் இளையுஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டு பயங்கரவாத
முத்திரை குத்தப்பட்டு இளைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டும், யுவதிகள்
சிறீலங்காப்படையின் காயமடைந்த படையினரின் பராமரிப்பிற்காக அரைகுறை
ஆடைகளுடன் விடப்பட்டார்கள். இப்படியான நடவடிக்கைகளின் பின்னர்தான்
குறிப்பிட்ட இடங்களில் பல்வேறு மனிதப்படுகொலைகளை சிங்களபடை அரங்கேற்றியது.
கைதுசெய்யபட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் கை கால்கள் கட்டப்பட்ட
நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு
குறிப்பிட்டுள்ள இடங்களில் பதுங்கு குழிகளுக்குள்ளும், பாழடைந்த
கிணறுகளுக்குள்ளும் போட்டு மூடப்பட்டார்கள். பெண்கள் சிங்களப்படையின்
புணர்ப்பிற்காக விடப்பட்டார்கள். களத்தில் போர் உக்கிரமடைந்த
காலகட்டங்களில் சிங்களப்படையினருக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் தமிழ்ப்
பெண்களை களமுனையில் படையினரின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டார்கள்.

இதன்பின்பு இவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள்
என்பது உண்மை. சிறீலங்கா அரசின் போர் குற்றங்கள் தொடர்பாக பல்வேறு
ஆதராங்களுடன் காணொளி ஒளிப்படம் போன்றவற்றின் உறுதிப்பாடுகளுடன்
உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மனித உரிமை அமைப்புக்களை மேலும்
துர்ண்டும் விதமாக கிளிநொச்சியின் கணேசபுரத்தின் படுகொலை புதைகுழி
காணப்படுகின்றது.
சிறீலங்கா அரசின் போர்க்குற்ற விசாரணையினை விசாரிக்க ஐக்கிய நாடுகள்
சபை செயலாளர் பான்கீமுன் அமைக்க இருக்கும் குழுவினை மழுங்கடிக்கும்
செயற்பாட்டில் சிறீலங்கா அரசினால் போர்க்குற்ற செயற்பாட்டுக்குழு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளமையானது ஐக்கிய நாடுகளின் குழுவினை சற்று பின்தள்ள
வைத்துள்ளது.

இன்நிலையில் மனித உரிமை அமைப்புக்களுக்கு வலுச்சேர்கும் முகமாகவும்,
சிறீலங்கா அரசினை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான ஆதராமனா படுகொலை
ஒன்று கணேசபுர படுகொலை நடந்தேறியுள்ளது.
இந்த படுகொலையினை மையங்கொண்டு பன்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள்
சிறீலங்கா அரசின் போர்க் குற்றத்தினை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துசெல்ல
சான்றாக காணப்படுகின்றது.
வன்னி பெருநிலப்பரப்பில் இவ்வாறு தான் இன்னும் மண்ணுக்குள் பல்லாயிரம்
மனித உடல்கள் சிங்களப்படையால் புதைக்கப்பட்டுள்ளது என்பது சிங்கள அரசின்
போர்க் குற்றத்திற்கு எதிரான சாட்டியமான எனது எழுத்துக்கள் அமைகின்றன.
- சங்கதிக்காக சுபன்

0 comments: