Thursday, June 17, 2010

இரண்டு கைகளும் இயலாமல் போனவனிற்கு ஒரு கையாவது கொடுங்கள்

0 comments
இந்த நூற்றாண்டு எமது மக்களின் சோகப் பக்ககளை மட்டுமே காலப்பதிவாக்கி செல்கின்றது....பல இலட்சம் விழிகளிலிருந்து வழியும் கண்ணீரில் ஒரு சிலதையாவது துடைத்து செல்லும் எமது முயற்சியில் இதோ இன்னொருவனின் கதையிது...... திருகோணமலை மாவட்டம் அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்தவன். மிக வேகமாக சிங்கள மயமாகிவரும் திருகோணமலையில் செந்தமாய் செய்வதற்கு தொழில் வசதிகளேதுமற்று சமாதான காலத்தில் வன்னி சென்றால் வளமாய் வாழலாம் என்கிற கனவுகளுடன் குடும்பமாய் குடிபெயர்ந்தான்.கடந்த வருடம் வன்னியில் காவுகொள்ளப்பட்ட உயிர்களுடன் இவனது கனவுகளும் கலைந்து போனது மட்டுமல்லாமல் அவன் கைகளையும் இழந்து இன்று சொந்தக்கிராமத்திற்கே திரும்பியுள்ள நிலையில் நான்கு பிள்ளைகளுடனும் நாதியற்று நிற்பவனின் கதையை நீங்களே கேளுங்கள். இங்கு அழுத்துவதன் முலம் ஒலிப்பதிவினை கேட்கலாம்...

Posted Image
Posted Image

வைத்தியசாலை அத்தாட்சி
Posted Image

அடையாள அட்டை
Posted Image

Wednesday, June 9, 2010

புலி பீதியியை ஏற்படுத்தி அவசரகால சட்டத்தினை நீடிக்கும் அரசு

0 comments
இன்று 121 வாக்குகளால் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அவ்சரகால சட்டத்தின் கீழ் தமிழர்கள் காலங்காலமாக அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கத்தினை அரசு கைவிடுவதாக இல்லை. அவசரகால சட்டத்தினை நீடிப்பதற்காக புலி பீதியினை அடிக்கடி ஏற்படுத்தி அறிக்கைவிடுவதும் அதனை காரணங்காட்டி அவசரகால சட்டத்தினை நீடிப்பதும் நிற்கப்போவதில்லை என்றே தெரிகின்றது.

இந்த அடிப்படையில் தான் இன்று நாடாளுமன்றில் பிரதமர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குயேற்றப்படும் மக்களுடன் மக்களாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.

வடபகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தனி நாடொன்றைக் கோரும் கனவு இதுவரை விட்டுக்கொடுக்கப்படவில்லை எனவும் மீண்டும் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனாலேயே, மே மாதமளவில் 77 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் டி.எம்.ஜயரட்ன மேலும் குறிப்பிட்டார்.

ஈழநாதம்

மகிந்தாவின் இந்தியப் பயணத்தினை ஒட்டி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, சென்னை சிறைச்சாலையில் இருந்து செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி

0 comments



நன்றி: ATBC வானொலி

மகிந்தவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி

0 comments



நன்றி: ATBC வானொலி

புலம் பெயர் மக்களை கனவுலகில் வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கும் சக்திகள்- வித்யாதரன் ATBC யிற்கு வழங்கிய செய்தி கருத்தாய்வு (பாகம் 2)

0 comments






நன்றி: ATBC வானொலி

புலம் பெயர் மக்களை கனவுலகில் வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கும் சக்திகள்- வித்யாதரன் ATBC யிற்கு வழங்கிய செய்தி கருத்தாய்வு(பாகம் 1)

0 comments




நன்றி: ATBC அவுஸ்திரேலியா

Tuesday, June 8, 2010

முழு பூசணிக்காயினை சோற்றிற்குள் புதைக்கும் கோத்தா ( வீடியோ)

0 comments
நாம் ஒரு தமிழர்களை கூட கொல்லவில்லை;பாதுகாப்பு வலயத்திற்குள் தாக்குதல் நடத்தவில்லை; எல்லாம் படு பொய் - கோத்தா





பொன்சேகா ஒரு தேசத்துரோகி, பொய்யன் அவரை தூக்கிலிடவேண்டும்.



Sunday, June 6, 2010

வன்னி இறுதி யுத்தம் வரை முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்திய கலாநிதி கைலைநாதன் சுதர்சன் ரி.ஜ.டியால் 2ஆம் மாடியில் தடுத்துவைப்பு

0 comments
வன்னி இறுதி யுத்தம் வரை முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்திய கலாநிதி
கைலைநாதன் சுதர்சன் இலங்கையின் காவற்துறையின் விசேட புலனாய்வுப் பிரிவான
ரி.ஜ.டி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில்
வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச்செய்திகளின் புலனாய்வுச்
செய்தியாளர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதியில் மக்களோடு மக்களாக
முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களின் பின் தன்னை
வைத்தியர் என இனங்காட்டாது முகாமிலிருந்து வெளியேறி குடும்பத்துடன்
சிங்கப்பூர் சென்று இந்தியா சென்றிருந்தார்.

அங்கு தனது
மேற்படிப்புத் தொடர்பான விடயங்களை கவனித்திருந்த வேளை கியூப்
பிரிவினருக்கு இவரொரு வைத்தியர் என்றும் இறுதி யுத்தம் வரை வைத்தியராகப்
பணியாற்றியவர் என்றும் விடுதலைப் புலிகளுக்கு சிகிச்சை வழங்கியவர் என்றும்
இலங்கைத் தமிழர் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்டதாக குளோபல்
தமிழ்ச்செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்த
நிலையில் இவரிடம் பல முறை சென்ற கியூப்பிரிவு காவற்துறையினர் நாட்டை
விட்டு வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளனர்.
இந்த
நிலையில் ஏற்கனவே 2 தடவை சிங்கப்பூர் சென்றிருந்ததினால் மீண்டும்
தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்ததாக
குளோபல் தமிழ்ச்செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் கியூப்பிரிவு காவற்துறையினர் சிங்கப்பூர் காவற்துறையினருக்கு
தகவல் வழங்கியதனை அடுத்து விமான நிலையத்தில் வைத்தே இலங்கைக்கு வைத்திய
கலாநிதி கைலைநாதன் சுதர்சனும் குடும்பத்தினரும் நாடு கடத்தப்பட்டனர்.
அவ்வாறு நாடு கடத்தப்படும் போது இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு
சிங்கப்பூர் புலனாய்வுப்பிரிவினர் வழங்கப்பட்ட தகவலை அடுத்து கைது
செய்யப்பட்ட வைத்திய கலாநிதி கைலைநாதன் சுதர்சன் தற்போது பயங்கரவாத
தடுப்பு பிரிவின் 2ம் மாடியில் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்

Saturday, June 5, 2010

தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு! – லீ க்வான் யு

0 comments
ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி: அவரைத் திருத்தவே முடியாது! – சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ க்வான் யு



லங்கை
அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது. தனி
ஈழம் ஒன்றே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறியுள்ளார்
சிங்கப்பூரின் முதல் பிரதமரான் லீ க்வான் யு.
சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் லீ க்வான் யுவும்
ஒருவர். இவரது மகன்தான் தற்போதைய சிங்கப்பூரின் பிரதமர்.
மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, எந்த இயற்கை வளமும்,
குடிநீர் வசதியும் கூட இல்லாமல் தவித்த சிங்கப்பூரை பெரும் வர்த்தக மையமாக
மாற்றியவர். வல்லரசுகளுக்கு இணையாக உருவாக்கியவர் என புகழப்படுபவர்.
இன்றும் சிங்கப்பூர் அரசில், அமைச்சர்களின் வழிகாட்டி (Ministers Mentor) என மூத்த அமைச்சர் பொறுப்பை வகிக்கிறார் லீ.
லீ குவான் யுடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் சமீபத்தில் ‘Citizen
Singapore: How To Build A Nation – Conversations with ’ என்றக நூல்
வடிவில் வெளியாகியுள்ளது.
அந்த நூலில் இலங்கை இனப் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.
இலங்கைப் பிரச்சினை குறித்து அவர் இப்படி கூறியுள்ளார்:
இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.
ஆனால் தொடர்ச்சியான சிங்களர் மேலாதிக்கம் இரு இனங்களுக்குள்ளும் மோதலை
ஏற்படுத்திவிட்டது. தமிழரின் உரிமைகளை தெரிந்தே மறுக்கிறது சிங்களம்.
அரசியல் அதிகாரத்துக்காக சிங்களர்களை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டி
வருகிறார்கள் சிங்கள அரசியல்வாதிகள்.
இலங்கை மகிழ்ச்சியான நாடாக இனியும் இருக்க முடியாது. தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இனி உருவாகவும் முடியாது.
இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்.
இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள்
வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு
காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை
மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள்
அடங்கிக் கிடக்க மாட்டார்கள், சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும்
மாட்டார்கள். ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து போராடுவார்கள். சர்வதேசம் இதனை
மெதுவாகப் புரிந்து கொண்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர்
ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்ற
முடியும் என்று நான் நம்பவில்லை. அவரைத் திருத்தவே முடியாது” என்று
கூறியுள்ளார்.
தமிழருக்குதான் அதிக மரியாதை தர வேண்டும்!
அவரிடம் இந்த நூலின் ஆசிரியர் டாம் பிளேட் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
“இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. மெஜாரிட்டியான சிங்களர்கள்,
விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான
தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை.
யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்வெல்லவே முடியாது. அதனால்தான்
அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள்.
முன்பும் இப்படித்தான்செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக
வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயலுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்
இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது
என்று நான் கருதுகிறேன்.
இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால்
சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம்
காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள
அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, சிங்களர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை
தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான்.
மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட
சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல
இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால
உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது,” என்று
கூறியுள்ளார் லீ.
இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவருமான
பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை
வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம்
மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம்
அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீ க்வான் யு பற்றி…
1923-ல் பிறந்த லீ க்வான் யுவுக்கு இப்போது 86 வயது. 1959-ல்
சிங்கப்பூரின் பிரதமரானார். 1990-ம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் சிங்கப்பூரின்
பிரதமாராக இருந்தவர். உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற
பெருமைக்குரியவர்.
1990 நவம்பரில், தானே முன்வந்து பதவி விலகினார். ஆனால் அவரது நிர்வாகத்
திறன் சிங்கப்பூருக்கு முழுவதுமாக பயன்பட வேண்டும் என்பதற்காக 1990-ம்
ஆண்டு மூத்த அமைச்சர் என்ற பதவியை உருவாக்கினர். அவரை வழிகாட்டியாகக்
கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தார் புதிய பிரதமர் கோ சோ டோங்.
2004-ம் ஆண்டு லீயின் மூத்த மகன் லீ ஸெய்ன் லூங் சிங்கப்பூர்
பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமைச்சர் வழிகாட்டி என்ற புதி்ய
அமைச்சு உருவாக்கப்பட்டு அதில் லீ க்வான் யு அமர வைக்கப்பட்டார். உலகில்
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அமைச்சகம் இது. லீயின் வழிகாட்டுதல்களுடன்
அமைச்சரவையை நடத்த உருவாக்கப்பட்டது இந்தப் பதவி. ஆக 1959லி-ருந்து
பதவிகளின் பெயர் மாறினாலும், சிங்கப்பூர் அரசின் பிரிக்க முடியாத
அங்கமாகத் திகழ்பவர் லீ.
உலகில் தனக்கு மிகப் பிடித்த அரசியல் தலைவர் மற்றும் நிர்வாகி லீ
க்வான் யுதான் என பல முறை தனது பேட்டிகளில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளது
நினைவிருக்கலாம்.
-என்வழி

Tuesday, June 1, 2010

கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

0 comments
தங்கள் உறவுகளையும் உடைமைளையும் இழந்து போய் இனிவரும் காலங்களில் தங்கள் கல்வியை மட்டுமே நம்பி அதனைக்கொண்டு தாங்கள் புதியதொரு வாழ்வினை கட்டியமைக்க முடியுமென்கிற இறுதி நம்பிக்கையுடன் மனக்காயங்கள் உடற்காயங்கள் என்று அத்தனையும் தாங்கியபடி பல்கலைக்கழகம் சென்று கொண்டிருக்கும் பல மாணவர்களில் அவசர உதவி கோருவோர் 11 பெயரின் விபரங்கள் நேசக்கரம் ஊடக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு இணைக்கிறோம்.. ஒரு பல்கலைக்கழக மாணவனிற்கான மாதாந்த உதவிக்தொகையாக நேசக்கரம் இலங்கை ரூபாய் 5ஆயிரம் நிர்ணயித்துள்ளது.(36 யுரோக்கள்) உதவ விரும்பும் உள்ளங்கள் நேசக்கரத்துடன் தொடர்பு கொண்டால் உங்கள் உதவிகள் நேரடியாகவே மாணவர்களை சென்றடைவதற்கான அவர்களது வங்கிஇலக்கம் விலாசம் போன்றவற்றை தந்துதவி வழிவகைகளை ஏற்படுத்திதரலாம்.
தொடர்புகளிற்கு
www.nesakkaram@gmail.com

1)ஜெகநாதன் சுதாநாதன்
Posted Image
Posted Image
Posted Image

2)பெயர் – தனராஜா தனரஞ்சன் கற்கும் ஆண்டு – 3ம் வருடம் (இன்னும் இரண்டு வருடங்கள் கற்க வேண்டும்) யாழ் பல்கலைக்கழகம்.வணிகத்துறை.

3)பெயர் - நீலகண்டன் சசிகுமார்
கற்கும் வருடம் – 4ம் வருடம் (இன்னும் ஒருவருடம் கற்க வேண்டும்)
யாழ் பல்கலைக்கழகம்.
கலைப்பிரிவு.

4)பெயர் - துரைராஜா ராதீபன்
கற்கும் ஆண்டு – 3ம் வருடம். (இன்னும் ஒருவருடம் கற்க வேண்டும்)
யாழ் பல்கலைக்கழகம்.
கலைப்பிரிவு.

5)பெயர் - குணரத்தினம் கெளதமன்
கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)
யாழ் பல்கலைக்கழகம்.
கலைத்துறை.

6)பெயர் - குமாரசாமி குகன்
கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)
யாழ் பல்கலைக்கழகம்.
வணிகத்துறை.

7)பெயர் - பாலசிங்கம் பாலகுமாரன்
கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடங்கள் கற்க வேண்டும்)
யாழ் பல்கலைக்கழகம்.
முகாமைத்துவம்.

8)பெயர் - மாயன் சுகந்தன்
கற்கும் வருடம் – இரண்டாம் வருடம்
யாழ் பல்கலைக்கழகம்.
விளையாட்டு விஞ்ஞானம்.

9)பெயர் - கனகரத்தினம் மயூரன்
கற்கும் வருடம் – 2ம் வருடம்.
யாழ் பல்கலைக்கழகம்.
விளையாட்டு விஞ்ஞானம்.

10)பெயர் - கணபதிப்பிள்ளை கஜேந்திரவேல்
கற்கும் வருடம் – 3ம் வருடம்.
யாழ் பல்கலைக்கழகம்.
முகாமைத்துவ பீடம்.



11)பெயர் – சுந்துரலிங்கம் பிரநந்தன்
கற்கும் வருடம் – 3ம்வருடம்
யாழ் பல்கலைக்கழகம்.
நாடகமும் அரங்கியலும் சிறப்புக்கலை.

சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி

0 comments
கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில்
மலசலகூடக்குழியில் இருந்து மனித உடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இருபதிற்கு மேற்பட்ட உடலங்கள் இதில் உள்ளடங்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் இனப்படுகொலை வரலாறாக நீடித்துக்கொண்டே செல்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி என்ற பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு
உட்படுத்தப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தோண்டி
எடுக்கப்பட்டது. இதனை செய்தது சிங்களப்படைதான் என்பது நீதிமன்றத்தினால்
உறுதி செய்து தீர்ப்பும் எழுதப்பட்டது.

இவ்வாறுதான் அன்று சத்ஜெய படை நடடிவடிக்கை மூலம் கிளிநொச்சியை
வல்வளைத்த சிறீலங்காப்படையினர் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை
பிடித்து படுகொலை செய்துவிட்டு மலசலகூட கிடங்குகளிலும் பாழடைந்த
கிணறுகளிலும் வீசினார்கள். பின்பு கிளிநொச்சியினை மீட்ட விடுதலைப்புலிகள்
உருத்திரபுரம், கணேசபுரம், முறிப்பு, கோணாவில் போன்ற பகுதிகளில் மக்கள்
குடியேறியபோது ஒன்று இரண்டாக எலும்புக்கூடுகுள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்வாறுதான் தற்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
வன்னியில் இறுதிக்கட்ட போரின்போது முரசுமோட்டை பகுதியில் இருந்து
மக்களை பிடித்த சிறீலங்காப்படைகள் தொடர்ந்தும் கண்டாவளை, தர்மபுரம்,
உடையார்கட்டு, விசுவமடு, மூங்கிலாறு, தேவிபுரம், கைவேலி, இணைப்பாலை,
புதுக்குடியிருப்பு என்ற பகுதிகளில் எல்லாம் ஏராளமன தமிழ் இளைஞர்களை
பிடித்த சிறீலங்கா படையினர் களமுனையின் பின்களத்திலே வைத்து வடிகட்டல்
செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்.

குறிப்பாக இளம் இளையுஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டு பயங்கரவாத
முத்திரை குத்தப்பட்டு இளைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டும், யுவதிகள்
சிறீலங்காப்படையின் காயமடைந்த படையினரின் பராமரிப்பிற்காக அரைகுறை
ஆடைகளுடன் விடப்பட்டார்கள். இப்படியான நடவடிக்கைகளின் பின்னர்தான்
குறிப்பிட்ட இடங்களில் பல்வேறு மனிதப்படுகொலைகளை சிங்களபடை அரங்கேற்றியது.
கைதுசெய்யபட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் கை கால்கள் கட்டப்பட்ட
நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு
குறிப்பிட்டுள்ள இடங்களில் பதுங்கு குழிகளுக்குள்ளும், பாழடைந்த
கிணறுகளுக்குள்ளும் போட்டு மூடப்பட்டார்கள். பெண்கள் சிங்களப்படையின்
புணர்ப்பிற்காக விடப்பட்டார்கள். களத்தில் போர் உக்கிரமடைந்த
காலகட்டங்களில் சிங்களப்படையினருக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் தமிழ்ப்
பெண்களை களமுனையில் படையினரின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டார்கள்.

இதன்பின்பு இவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள்
என்பது உண்மை. சிறீலங்கா அரசின் போர் குற்றங்கள் தொடர்பாக பல்வேறு
ஆதராங்களுடன் காணொளி ஒளிப்படம் போன்றவற்றின் உறுதிப்பாடுகளுடன்
உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மனித உரிமை அமைப்புக்களை மேலும்
துர்ண்டும் விதமாக கிளிநொச்சியின் கணேசபுரத்தின் படுகொலை புதைகுழி
காணப்படுகின்றது.
சிறீலங்கா அரசின் போர்க்குற்ற விசாரணையினை விசாரிக்க ஐக்கிய நாடுகள்
சபை செயலாளர் பான்கீமுன் அமைக்க இருக்கும் குழுவினை மழுங்கடிக்கும்
செயற்பாட்டில் சிறீலங்கா அரசினால் போர்க்குற்ற செயற்பாட்டுக்குழு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளமையானது ஐக்கிய நாடுகளின் குழுவினை சற்று பின்தள்ள
வைத்துள்ளது.

இன்நிலையில் மனித உரிமை அமைப்புக்களுக்கு வலுச்சேர்கும் முகமாகவும்,
சிறீலங்கா அரசினை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான ஆதராமனா படுகொலை
ஒன்று கணேசபுர படுகொலை நடந்தேறியுள்ளது.
இந்த படுகொலையினை மையங்கொண்டு பன்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள்
சிறீலங்கா அரசின் போர்க் குற்றத்தினை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துசெல்ல
சான்றாக காணப்படுகின்றது.
வன்னி பெருநிலப்பரப்பில் இவ்வாறு தான் இன்னும் மண்ணுக்குள் பல்லாயிரம்
மனித உடல்கள் சிங்களப்படையால் புதைக்கப்பட்டுள்ளது என்பது சிங்கள அரசின்
போர்க் குற்றத்திற்கு எதிரான சாட்டியமான எனது எழுத்துக்கள் அமைகின்றன.
- சங்கதிக்காக சுபன்