Tuesday, May 25, 2010

இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் – காணொளி(கோரமானது)

0 comments

இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவம் விலங்குகளைப் போல வீசியெறிவதையும், இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக கருகிய உடல்களையும் காணலாம். இந்தக் காணொளி பல சர்வதேச ஊடகங்களிற்கும், உரிமைக் குழுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியப் படிப்பவர்கள் இவ் ஆவனத்தை மனித உரிமை அமைப்புக்களுக்கும் தமக்குத் தெரிந்த ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கலாம். தொழில் நுட்பம் சார்ந்து ஆவணத்தை உறுதிப்படுத்த எம்மிடம் உரிய வசதிகள் இல்லை.
போரில் ஈடுபட்ட இராணுவத்திதைச் சேர்ந்த ஒருவரின் தொடர்பு ஊடாக இந்த ஆவணம் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு ஆதாரங்கள் இருந்தும் அதிகார வர்க்கம் சார்ந்த மனித உரிமை அமைப்புக்கள் எந்த காத்திரமான நடவடிக்கைக்கும் தயாராக இல்லை. இலங்கையில் நடைபெற்றது போன்று உரிமைக்காகப் போராடும் பெரும்மான்மையான உலகமக்கள் இவ்வாறு கொல்லப்படலாம். இந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் அதிகாரவர்க்கத்திற்கு ஒரு முன்னுதாரணம். ராஜபக்ச ஆட்சி தண்டனை பெறாமல் பாதுகாப்பதன் பின்னணி இதுதான்.
ஒவ்வொரு நாடுகளிலும் அந்த நாடுகளின் அரசுகளுக்கு குறைந்த பட்சம் அழுத்தங்களையாவது பிரயோகிக்க இவ்வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் இதனைப் பொதுத்தளத்தில் முன்வைக்கிறோம்.

(This website and its Articles are copyright of inioru.com – © inioru.com 2007-2010. All rights reserved. For republication or reproduction please provide the complete link of the article and the name of this website. email:inioru@gmail.com).(இனியொரு இணையத் தளத்தில் வெளிவரும் கட்டுரைகளை மீள்பதிவு செய்யும் போது கட்டுரைக்கான தொடுப்பையும் தயவுசெய்து வெளியிடவும். அச்சு மீள்பதிவிற்கு அனுமதி பெற inioru@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.)

Friday, May 21, 2010

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

0 comments
வன்னியில்
கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிறீலங்கா சிங்கள படைகளால் கைது
செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து கொன்றது தொடர்பாக மேலும் சில
காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது.


சிறீலங்காவின் சிங்கள படைகளின் காட்டு மிரண்டிதனமான போர் குற்ற ஆத்ரம்களில் சிலதை Human Rights Watch send email வெளியிட்டுள்ளது.


இதில் ஒரு போராளியை தென்னை மரத்தில் கட்டி
வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்யும் கோர
காட்சிகளின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


இச்செய்தியானது உலக தமிழ் மக்களை
உலுக்கியுள்ள இவ்வேளையில் எதிர்வரம் காலங்களில் மேலும் படங்கள் வெளிவரும்
என்பதும் இன்னும் ஒரு செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.


புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக
உறவுகள் அனைத்து ஒரே வழியில் நின்று போராடவேண்டிய தேவையையும், சிறீலங்காவை
போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும் என நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக செய்திக்கு இங்கே அழுத்தவும்

















இராசபக்சேயைக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்களே அணிதிரளுக! - பழ.நெடுமாறன்

0 comments
முள்ளிவாய்க்கால்-உலக வரலாற்றில் மூன்றே நாட்களுக்குள் ஒரு
இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டு
அவர்கள் சிந்திய இரத்தத்தால் இன்னமும் சிவந்து கிடக்கிற மண். நினைக்க
நினைக்க நெஞ்சம் பதறுகிறது. உண்ணவும் முடியவில்லை. உறங்கவும் முடியவில்லை.

2007ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை வன்னிப் பகுதியில் வாழ்ந்த
நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரும்பத் திரும்ப இடம்பெயர்ந்த
அவலம் நிகழ்ந்தது. வான்வழியாகவும், தரைவழியாகவும் சிங்கள இராணுவம்
இடைவிடாது தொடுத்த கொடும் தாக்குதல்கள் அந்த மக்களை தங்கள்
வாழ்விடங்களிலிருந்து தப்பியோடச் செய்தன. இந்த ஈராண்டுகளில் ஒவ்வொரு
வீட்டிலும் பதுங்கு குழிகளை மக்கள் வெட்டி வைத்து விமான குண்டு
வீச்சிலிருந்து தங்களைப் பாதுகாக்க அதற்குள்ளாகவே வாழ்ந்தார்கள். ஒவ்வொரு
முறையும் தங்களின் வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்த போதெல்லாம்
அங்கேயும் பதுங்குக் குழி வாழ்க்கை தொடர்ந்தது. வீடுகளை இழந்த மக்கள்
சாலையோர மர நிழல்களில் வெய்யிலிலும், மழையிலும், காய்ந்தும் நனைந்தும்
வாழ்ந்தார்கள். அந்த மக்களுக்குப் போதுமான அளவு, உணவோ மருந்தோ
கிடைக்காதபடி இலங்கை இராணுவம் தடுத்தது. வானத்தைப் பார்த்த வண்ணம் மக்கள்
அஞ்சிஅஞ்சி வாழ்ந்தார்கள். எந்த நேரம் விமானங்கள் பறந்து வந்து குண்டு
வீசுமோ என்ற அச்சத்தில் அவர்களின் வாழ்வு துன்பமயமாக மாறிப்போனது.
பதுங்குக் குழிகளே மரணக் குழிகளாயின். மக்கள் பயணம் செய்த வாகனங்கள்,
ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளிக்கூட வாகனங்கள் ஆகியவையும், பீரங்கித்
தாக்குதல்களுக்கு ஆளாகின. வடகிழக்கு மாநில மனித உரிமை செயலகம் என்ற
தொண்டு நிறுவனத்தின் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த
நாடாளுமன்ற உறுப்பினர்கூட இந்த தாக்குதலிருந்து தப்பமுடியவில்லை,
கொல்லப்பட்டார்கள்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அய்.நா. அகதிகள் ஆணையம் போன்றவை அளித்த
நிர்ப்பந்தத்தின் விளைவாக சிங்கள இராணுவம் பாதுகாக்கப்பட்ட வலையங்கள்
சிலவற்றை அறிவித்தது. அதற்குள் அடைக்கலம் புகுந்த மக்கள் இராணுவத்
தாக்குதலுக்கு ஆளாகமாட்டார்கள் என்ற வாக்குறுதியையும் சிங்கள அரசு
அளித்தது. இதை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பாதுகாப்பு
வளையங்களில் சரண் புகுந்தார்கள். அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.
இராஜபக்சே விரித்த வஞ்சக வலைக்குள் தாங்கள் சிக்குண்டு இருக்கிறோம்
என்பதை உணரவில்லை. சிறிய பரப்பளாவான பாதுகாப்பு வலையங்களுக்குள் புகுந்த
பெருந்திரளான மக்களை கூட்டம்கூட்டமாகக் கொல்வது சிங்கள இராணுவத்திற்கு
வசதியாயிற்று. பாதுகாப்பு வலையங்களைச் சுற்றிலும் பீரங்கித் தாக்குதல்கள்
தொடர்ந்து நடத்தப்பட்டு அந்த மக்கள் கொத்துகொத்தாக அலறித் துடித்து
மாண்டனர். இறந்தவர்களின் உடல்கள் குப்பைகளை அள்ளிச் செல்லும் லாரிகளில்
தூக்கி எறியப்பட்டு வயல் ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் வீசப்பட்டன.
அவைகளை அடக்கம் செய்ய உறவினர்களோ வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
படுகாயமடைந்தவர்கள். திறந்த வெளிகளில் அமைக்கப்பட்ட மருத்துவமனைகளில்
உயிருக்காகப் போராடினார்கள். அருகே செத்துப்போனவர்களின் சடலங்களும்
கிடந்தன. மருத்துவர்களும், மருத்துவத் தொண்டர்களும் தங்கள் உயிரைப்
பணயமாக வைத்து இந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்தனர். ஆனாலும்
அவர்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் பகுதி மணற்பாங்கான பகுதி. அங்கு தோண்டப்பட்ட பதுங்கு
குழிகள் மழையினாலும் குண்டு வீச்சின் அதிர்வுகளாலும் சரிந்து உள்ளே
பதுங்கி இருந்த மக்களை உயிரோடு புதைத்தன. பெற்ற குழந்தைகளை மார்போடு
அணைத்தவண்ணம் தாய்மார்கள் துடிதுடித்து இறந்தனர். குழந்தைகளின்
கதறல்களும், அன்னையரின் ஓலமும் கடலோசையை மிஞ்சின.

போரின் இறுதிக்கட்டத்தில் மிகக்கொடூரமான போர்த்திட்டங்களையும், மனித
குலத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்வதற்கு சிங்கள இராணுவம் கொஞ்சமும்
தயங்கவில்லை. ஜெனீவா உடன்பாட்டின்படி சர்வதேச நாடுகள் தடை செய்த கொத்து
குண்டுகள், நாபாம் குண்டுகள், உடலில் பட்டாலே பற்றி எறியும் பாஸ்பரஸ்
குண்டுகள் ஆகியவற்றை சிங்கள இராணுவம் தாராளமாகப் பயன்படுத்தியது.
உடலெங்கும் எரிந்த காயங்களுடன் கிடந்த சடலங்கள் இதை உறுதி செய்தன.
தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு சிங்கள இராணுவத்தினரின் கொலைவெறி
குறையவில்லை. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்த குடியிருப்புகள்,
மருத்துவமனைகள், பள்ளிகள், கோயில்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டு
அழித்தார்கள். தமிழர்களின் பொதுக் கட்டமைப்புகளை அழிப்பதன் முலம் அவர்களை
மீண்டும் தலையெடுக்க விடக்கூடாது என்பதே அவர்களின் திட்டமாகும்.

இது அராபியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் கையாண்ட போர்த்
தந்திரமாகும். 2006ஆம் ஆண்டு லெபனான் போர் நடைபெற்ற காலத்தில்
அராபியர்களின் எண்ணிக்கைக்கு பன்மடங்கு அதிகமான படைகளை ஏவி அந்த மக்களை
மட்டுமல்ல அவர்களின் கட்டமைப்புகளையும் அடியோடு நாசம் செய்தது இஸ்ரேல்.
தாஹியா தத்துவம் என அழைக்கப்பட்ட இதே தந்திரத்தை இஸ்ரேலிலிடமிருந்து
சிங்கள இராணுவம் கற்றுக்கொண்டு தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.

போர் முடிந்த பிறகு விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என
இராசபக்சே கொக்கரித்த பிறகுகூட தமிழர்களை விட்டுவைக்கவில்லை. சுமார் 3
இலட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு போதுமான உணவு,
குடிநீர், சுகாதார வசதிகள், மற்றும் மருத்துவ உதவிகள் இல்லாமல் கொஞ்சம்
கொஞ்சமாக சாவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டார்கள். இந்த முகாம்களுக்குள்
நடைபெற்ற சித்திரவதைகளும் படுகொலைகளும் வெளியுலகத்திற்கு தெரியாத வகையில்
அடியோடு மறைக்கப்பட்டன. முகாம்களில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள்
என்பதோ அவர்களின் பட்டியலோ தயாரிக்கப்படவில்லை. ஏனென்றால் பட்டியல்
இருந்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அம்பலமாகிவிடும்.

முள்வேலி முகாம்களின் அரசால் நடத்தப்பட்ட நலன்புரி கிராமங்களிலும் சிங்கள
இராணுவம் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகள் வாயால் கூறமுடியாதவை.

13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகாம்களில் இருந்து
பிரித்தெடுக்கப்பட்டு மிகக்கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளானார்கள்.
அய்.நாவிற்கான இலங்கைத் தூதுவர் பாலித்தகோகொன்னா என்பவர் பின்வருமாறு
கூறினார்: தனி முகாம்களில் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மேலும் மற்ற
முகாம்களில் 10 ஆயிரம் புலிகள் மறைந்திருக்கக்கூடும். ஆனால் இவர்கள்
அனைவரையும் அடையாளங்கண்டு அழிப்பதுதான் எங்கள் நோக்கம் என்று
பகிரங்கமாகக் கூறினார்.

நேரடிப் போரினால் பாதிக்கப்படாத யாழ்ப்பாணத் தீபகற்ப பகுதியில் வாழ்ந்த
மக்களும் சொல்லொண்ணாத கொடுமைகளுக்கு ஆளானார்கள். வடமராச்சிப் பகுதியில்
வலிகாமம் என்னும் ஊரில் மிகுந்த பாதுகாப்பு பகுதி என்று கூறி அந்த ஊரையே
இராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அந்தப் பகுதியில்
வாழ்ந்த ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். 20
ஆண்டு காலத்திற்கு மேலாக அவர்கள் தங்கள் வீடுகளுக்கோ, விவசாய
நிலங்களுக்கோ திரும்ப முடியவில்லை. இதைப்போல வடக்கு மாநிலத்தில் ஏராளமான
பகுதிகளை இராணுவம் எடுத்துக்கொண்டிருக்கிறது. அங்குள்ள பல இலட்சம் மக்கள்
விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வடக்குப் பகுதியில் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் வீடுகள் முற்றிலும்
சேதமடைந்ததாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இந்த வீடுகள் அனைத்தும்
மனிதர்கள் வசிக்க முடியாத அளவிற்கு உருக்குலைந்து விட்டன. ஓர் வீட்டில்
குறைந்த பட்சம் 5 பேரைக் கொண்ட குடும்பம் வாழ்ந்தது என்று
வைத்துக்கொண்டாலும் மொத்தத்தில் 13 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை
இழந்துத் தவிக்கிறார்கள். இவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத்
திரும்புவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இராசபக்சேயின் சகோதரர் பசில்
இராசபக்சே பின்வருமாறு கூறினார். “”பாலஸ்தீன அகதிகளை மறுகுடியமைக்க 70
ஆண்டுகள் ஆயிற்று. வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அகதிகளை
மீள்குடியமைக்க 10 ஆண்டுகளுக்கு மேல் பிடித்தன. இப்படி இருக்கும்போது
தமிழ் அகதிகளை மீண்டும் குடியமைக்க வேண்டுமென எங்களை அவசரப்படுத்துவது
எந்த வகையிலும் நியாயமற்றது” என இறுமாப்போடு கூறியுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் புத்தமத தலைவரான தலாய்லாமா போரை நிறுத்துமாறு
வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சிங்கள பவுத்தர்கள் அதை அலட்சியம்
செய்தார்கள். ஜப்பான், நார்வோ மற்றும் அய்ரோப்பிய நாடுகள் விடுத்த
வேண்டுகோளும் மதிக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க
குடியரசுத் தலைவர் ஒபாமா “இலங்கை அரசு தாக்குதல்களைத் தொடருமானால்
இருதரப்பிற்கு மேலும் பகைமை வளரும் இலங்கை இனச்சிக்கலுக்கு இணக்கத்தீர்வு
காணலாம் என்ற நம்பிக்கை தகர்ந்துபோகும்’ என்று எச்சரித்தார்.

போர் நிறுத்தத்தை வலியுறுத்த பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் ஆகிய
நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கொழும்பு சென்று இராசபக்சேயை
நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டார்கள். ஆனால் சுவீடன்
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா தர இராசபக்சே மறுத்துவிட்டார். எனவே
பிரிட்டிசு வெளிநாட்டு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பிரான்சு வெளிநாட்டு
அமைச்சர் பெர்னார்டு கவுச்னர் ஆகியோர் கொழும்புக்கு வந்து இராசபக்சேயை
சந்திக்க முயன்றார்கள். ஆனால் அவர்களால் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித
பொகலாகாவை மட்டுமே சந்தித்துப் பேசமுடிந்தது. எந்தப் பயனும் விளையவில்லை.

மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் போரை நிறுத்தவேண்டும் என்பதற்காக
முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான்,
ரஷ்யா போன்ற அணு ஆயுத வல்லரசுகளும் மேலும் 15 நாடுகளும் சிங்கள
இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களையும் இராணுவ ரீதியான சகல உதவிகளையும்,
ஆலோசனைகளையும் வழங்கினர்கள். இதில் இந்தியாவின் பங்கு மன்னிக்க முடியாதது
ஆகும்.

குறைந்தபட்சம் போரின் கடைசி கட்டத்திலாவது முள்ளிவாய்க்கால் பகுதியில்
சிக்கிக்கொண்ட மக்களைக் காப்பாற்றி கப்பல்கள் மூலம் இந்தியாவுக்குக்
கொண்டுவந்து சேர்க்க வேண்டிய மனிதாபிமான கடமையைக்கூட இந்தியா
செய்யவில்லை. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்புவில் நடைபெற்ற மோசமான
இனக்கலவரத்தில் சிக்கிக்கொண்டத் தமிழர்களை இரு கப்பல்களை அனுப்பி
அவர்களைக் காப்பாற்றி பத்திரமாக யாழ்ப்பாணம் கொண்டுவந்து சேர்க்க
உதவினார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அவர் பேரால் ஆட்சி நடத்துவதாக
கூறும் இன்றைய இந்திய அரசு தமிழர்களைக் கொன்றுகுவிக்க சிங்கள அரசுக்கு
உதவியதாக இருந்ததே தவிர, தமிழர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.
இலங்கைப் போரில் நடைபெற்ற கொடூர நிகழ்ச்சிகள் குறித்து விசாரிப்பதற்காக
அமைக்கப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு டப்ளின் நகரில்
2010ஆம் ஆண்டு சனவரி 14 முதல் 16 வரை கூடி நடத்திய விசாரணையின் முடிவில்
இலங்கை அரசு போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளது என முடிவு செய்துள்ளது.
அந்த அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தில் இராசபக்சே, பொன்சேகா
போன்றவர்களைப் போர்க்குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை
வலுத்து வருகிறது.

இதிலிருந்து தப்புவதற்காக இராசபக்சே அவரே முன்வந்து ஒரு விசாரணைக் குழுவை
அமர்த்தியிருக்கும் கேலிக்கூத்து அரங்கேறியிருக்கிறது. இலங்கைப்
போரின்போது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்ஙகள் நடந்ததா என்பது
குறித்து விசாரனை நடத்த 8 பேர் கொண்ட ஒரு குழுவை இராசபக்சே
நியமித்திருக்கிறார். இராசபக்சேயின் சட்ட ஆலோசகராக இருக்கக்கூடிய ஒரு
சிங்களவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் இராசபக்சேயின்
அடிவருடிகளான இரு தமிழர்களும் நியமிக்கப்பட்டிருப்பது வேடிக்கையானதாகும்.

சிங்கள இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த அய்.நா.
பேரவை ஏதேனும் குழுவை அமைத்துவிடக்கூடாது என்பதற்காக இத்தகைய போலியான ஒரு
குழுவை இராசபக்சே நியமித்திருக்கிறார். இந்த விசாரணைக் குழு தனது
அறிக்கையை அளிப்பதற்கான கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே பல
ஆண்டுகளுக்கு இந்த விசாரணை நீடிக்கப்படும். அதற்குப் பின்னால்
விசாரணைக்குழுவின் முடிவுகளும் வெளியே வராமலே மறைக்கப்பட்டுவிடும். இந்தக்
கால இடைவெளியில் உலகம் தனது போர்க்குற்றங்களை மறந்துவிடும் என இராசபக்சே
நம்புகிறார்.

ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணரான பேராசிரியர்
பிரான்சிஸ் பாய்ல் மிகத்தெளிவாக பின்வருமாறு கூறியிருக்கிறார்:
போர்க்குற்றங்களைக் குறித்து அய்.நா. விசாரணை நடத்த முன்வருமானால் அது
இலங்கையின் இறைமையில் குறுக்கிடும் செயலாகும் என இலங்கையின்
வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பதை நான் கண்டிக்கிறேன். 1948ஆம்
ஆண்டு இனப்படுகொலைக்கு எதிரான அய்.நா. மாநாட்டில் செய்துக்கொள்ளப்பட்ட
உடன்பாட்டை ஏற்றுக்கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். எனவே அய்.நா.
பேரவையின் பொதுச்செயலாளர் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து
விசாரிக்க உடனடியாக அய்.நா. குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கு
எல்லாவிதமான அதிகாரமும் அவருக்கு உண்டு என்று கூறியிருக்கிறார். மேலும்
அவர் கூறுகையில் கடந்த ஆண்டு காசா பகுதியில் பாலஸ்தீனிய அராபிய மக்களுக்கு
எதிராக இஸ்ரேல் இராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்து. அய்.நா. மனித
உரிமைகள் குழு அமைத்த கோல்டு ஸ்டோன் ஆணையம் அந்தக் குற்றங்கள்
உண்மையானவையே என்று கூறியிருக்கிறது. பாலஸ்தீனிய மக்களுக்கு அய்.நா. மனித
உரிமை குழு வழங்கிய நீதியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க முன்வரவேண்டும்.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி சர்வதேச போர்க்குற்றங்கள்
விசாரணை மன்றம் ஒன்றை உருவாக்கவேண்டும். அய்.நா. பட்டயம் 22வது பிரிவின்
கீழ் இதை அய்.நா.வின் இணையமைப்பாக ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் அய்.நா.
பேரவைக்கு உண்டு. அய்.நா. பேரவையில் யாரும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்த
முடியாது. அய்.நா. பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பெரும்பான்மையின்
ஆதரவை உலகத் தமிழர்கள் திரட்டவேண்டும். இதன் மூலம் இலங்கையின்
போர்க்குற்றங்களை சர்வதேச போர்க்குற்றங்கள் விசாரணை மன்றம் ஒன்றை
உருவாக்க முடியும். அவ்வாறு உருவாக்க உலகத் தமிழர்கள் முன்வருவார்களானால்
அவர்களுக்கு நான் துணையாக இருப்பேன் என்றுகூறியிருக்கிறார்.

அமெரிக்கப் பேராசிரியர் ஒருவருக்கு இருக்கக்கூடிய இந்த உணர்வு
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும். இலங்கையில் 2 இலட்சத்திற்கு
மேற்பட்டத் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். 15
இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் அகதிகளாக உள்நாட்டிலும் உலக
நாடுகளிலிலும் சிதறி வாழ்கிறார்கள் இதற்குக் காரணமான குற்றவாளிகளை
ஒருபோதும் மன்னிக்கக்கூடாது. குற்றவாளிக்கூண்டில் அவர்களை நிறுத்தி உரிய
தண்டனையைப் பெற்றுக்கொடுப்பது உலகத் தமிழர்களின் கடமை. அதை தலையாய ஒன்றாக
எண்ணி செயல்படுவோம்.

நன்றி: மாலை முரசு

Wednesday, May 19, 2010

AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல் !

0 comments
AR Rahman World Tamil Semmozhi Conference Theme Song REMIX VIDEO


AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல் !

( REMIX VIDEO - Eelam Song Azhage Azhage Tamil Azhage )




http://www.youtube.c...h?v=SYP95GYUJhQ

நாடு கடந்த தமிழீழ அரசின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் தொடர்கின்றன (புகைப்படங்கள் இணைப்பு)

0 comments
நாடு கடந்த தமிழீழ அரசின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இன்றைய நாள் நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே இணைக்கப்பட்டுள்ளன.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகராக பொன் பாலராஜன் தெரிவு

0 comments
 
balaanna new.jpg - 29.44 Kbநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகராக கனடாப் பிரதிநிதி பொன் பாலராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து தேசியம் சார்ந்த விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் நிதானமான அணுகுமுறை கொண்டவருமான  பாலராஜனின் தெரிவு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.http://www.eelamweb.com

இந்தியாவிற்கு போர் ஆலோசனை வழங்க இலங்கை தயார்

0 comments

prasad_kariyawasam.jpg - 21.10 Kbபயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க இலங்கை தயார் என இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்த இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுடனான போரில் தாம் பயன்படுத்திய உத்திகளை நக்சலைட்டுகளுக்கு எதிராகப் பயன்படுத்த முடியம் எனத் தெரிவித்த காரியவசம் இது குறித்த ஆலோசனைகளை வழங்க இலங்கைப் படை அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசு எனக் காட்டிக் கொள்ளும் இந்தியாவிற்கு ஆலோசனை வழங்க இலங்கை முன்வந்துள்ளது குறித்து பல்வேறு தரப்புக்களும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளன.
எனினும் விடுதலைப் புலிகளுடனான போரிற்கான முழுமையான ஆலோசனைகள் களத்திலிருந்த இந்திய படைத்துறை அதிகாரிகளாலேயே வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுதலிப்பதற்கான உபாயங்களில் ஒன்றாக இது இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

சரணடைந்தவர்களை நாம் சுட்டுக்கொன்றோம் சனல்4 தொலைக்காட்சிக்கு இராணுவம் தெரிவிப்பு

0 comments
சரணடைந்தவர்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு என்னை
பணித்தார்கள் அதன்படி நாங்கள் சித்திரவதை செய்தோம் பின்னர்
சுட்டுக்கொன்றோம். இவ்வாறு சனல் 4 தொலைகாட்சிக்கு சாட்சியம்
அளித்துள்ளனர். இராணுவத்தினர்.
வீடியோ :




தமிழர்களைச் சுட்டுக் கொல்லுமாறு யுத்தத்தின் இறுதி நாட்களில் அரச உயர்
மட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து இராணுவத்தினருக்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது என தமக்குக் கிடைத்த ஆதாரங்களை வைத்து
பிரித்தானியாவின் சனல்‍‍-4 தொலைக்காட்சிச் சேவை இன்று செய்தி
வெளியிடுள்ளது. அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு
உத்தரவிட்டிருந்தமையை இறுதிக் கட்டப் போரில் நேரடியாக பங்குபற்றிய
படையினர் இருவர் தமது தொலைக்காட்சிச் சேவைக்கு உறுதிபடுத்தினர் என்று அது
குறிப்பிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் உயரதிகார் என்றும் மற்றவர் சிப்பாய்
என்று அது தெரிவித்துள்ளது.

video: My link

எல்லோரையும் கொல்லுங்கள், எல்லோரையும் முடியுங்கள் என்று அரசஉயர்
மட்டத்தைச் சேர்ந்த அந்த நபரிடம் இருந்து தகவல் வந்திருந்தது என்றும் அந்த
உத்தரவு அப்படியே நிறைவேற்றப்பட்டது என்றும் அந்த இராணுவ அதிகாரி சனல்- 4
இற்கு தெரிவித்தார் என்றும் அதில் கூறப்படூகிறது.

அவ்வாறே, அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வந்த‌ உத்தரவை
நிறைவேற்றுமாறு அதிகாரிகள் சிப்பாய்களுக்கு உத்தரவிட்டிருந்தனரென அந்த
சிப்பாய் சொன்னார் என்று சனல்-4 குறிப்பிட்டுள்ளது.அந்த உத்தரவின் படி
அனைவரும் கொல்லப்பட்டனர் என்றும் அந்த சிப்பாய் தெரிவித்தார் என்றும் அது
சுட்டிக் காட்டி உள்ளது.

www.eelanatham.net

Tuesday, May 18, 2010

சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி

0 comments
தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மாவீரர்களையும், மானமக்களையும் நினைவில் நிறுத்தி, கனத்த இதயங்களுடன் நினைவுகூரும் இந்நாளில், சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி எமது சத்திய இலட்சியத்தை வென்றெடுப்போம் என்று உறுதிகொள்வோமாக” எனத்தெரிவித்துள்ளனர்.

எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே!

உலகத் தமிழர்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு ஒட்டுமொத்தப் பேராதரவோடு “போர்க் குற்றவியல் நாள் மே-18” ஐப் பிரகடனப்படுத்தி இந்நாளில் அனைத்து மாவீரர்களையும், பேரினவாதத்தால் மானச்சாவெய்திய மக்களையும் நினைவு கூருவது தமிழீழ மக்கள் அனைவருக்கும், எமது விடுதலை இயக்கத்திற்கும் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது.

உலகத் தமிழினத்தின் இதயங்களில் ஆறாத வடுவாகவும், ஆற்றப்படுத்த முடியாத துயரமாகவும் பதிந்து போன போர்க் குற்றவியல் நாள் இன்று. மானிடகுலத்திற்கு அமைதியைப் போதித்த புத்தபிரான் குருதிக் கண்ணீர் சொரிந்து வெட்கித் தலைகுனியும் வகையில் மகாவம்ச வெறி கொண்டு எமது மண்ணில், எங்கள் வரலாற்றுத் தாயகத்தில் சிங்கள பௌத்த மேலாதிகக் வாதம் ஊழித்தாண்டவமாடிய
கொடூர நாள் இன்று.

விடுதலை என்ற சத்திய வேள்வியில் நாம் கொடுத்த உயிர்விலை அளப்பரியது. கண்ணீரும், குருதியும், தசையுமாக எமது தேசம் சந்தித்த இழப்பு ஒப்பற்றது. எமக்காகவும், எமது வருங்காலத் தலைமுறையின் நலவழ்வுக்காகவும் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் உயிர்க்கொடை வார்தைகளில் விபரிக்க முடியாதது. அந்த மாவீரர்களின் வழியில் நின்று மானச்சாவெய்திய எங்கள் அன்பு மக்களின் இழப்பு என்றென்றுமே ஈடுசெய்ய முடியாதது.

வடக்குக் கிழக்குப் பகுதியில் கைதுகளும், சிறை வைப்புக்களும், கொலைகளும், காணாமல் போதல்களும், பாலியல் வல்லுறவுகளுமாக முன்னெப்போதும் இல்லாதவாறு நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறன. அடிப;படைச; சுதந்திரமாகக் கருதப்படும் பேச்சுச் சுதந்திரம், நடமாட்ட சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பன சிங்கள இனவெறியர்களின் நயவஞ்சகத்தால் பறிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இராணுவ முகாம் நிறுவதற்குத் தாயக மண்ணின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றது. சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு, தமிழர்களின் அடையாளச் சின்னங்களையும்இ எமது மண்ணின் மைந்தர்களாக என்றும் எம் மனங்களால் போற்றி வழிபடப்படும் மாவீரர்களின் துயிலும் இல்லங்களையும் அழித்து, அவ்விடங்களில் புத்தர் சிலைகளாலும் அரசமரக் கன்றுகளாலும் தனது சிங்கள மயமாக்கலை அரங்கேற்றி வருகிறது.

மக்களுடைய அடிப்படை உரிமைகள் யாவற்றையும் புறந்தள்ளி, அவர்கள் தடுப்பு முகாம் கைதிகள் போல் அடைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா சபையும் சரி, சனநாயக விழுமியங்களைப் பற்றிப் பேசும் நாடுகளும் சரி எந்த அடிப்படையில் செயற்படுகின்றன என்பதே மக்களின் கேள்வியாகவுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளுககு; ஊடகவியலாளரக் ள, அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தோர் செல்லமுடியாதுள்ளது. மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் என்னவென்றே தெரியாத, பிறர் அறிந்துகொள்ளமுடியாத சூழ்நிலையில் மக்கள் அங்கு அடக்கு முறைக்குள் வாழ்கின்றார்கள். இன்னும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் தடுப்பு முகாம்களில் அடைத்து
வைக்கப்பட்டுள்ளார்கள்.

அரசியல் கைதிகளையும், முன்னாள் போராளிகளையும் ஐ.நா பிரதிநிதிகள் சென்று பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல் தடுப்புமுகாமில் நெடுநாளாக அடைத்து வைப்பது ஒருபாரிய மனித உரிமை மீறலேயாகும். எனவே அவர்களை விடுவிப்பதறகு; இராசதந்திர, அரசியல ; தொடரபு; கள் ஊடாக புலமn; பயர்
மக்கள் குரல் கொடுக்கவேண்டும். மக்களின் பாதுகாப்பு வலயங;கள் மருத;துவமனைகள் மீது சிறிலங்கா அரச படைகள் சர்வதேச போர்ச் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக, தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள், விசவாயுக் குண்டுகள், வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுகள், தேமோபாரிக் வெப்பக் குண்டுகள், பாரிய எடை கூடிய விமானக் குண்டு வீச்சுக்கள் என்பனவற்றை தரை, வான், கடல் மூலம் நடாத்தி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தின.

சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் நசுக்கப்படும் உரிமைக் குரல்களையும், இனப்படுகொலைகளையும் கண்டித்து மேற்கு நாடுகளில் தமிழர்கள் நடத்திவரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள், கண்டனப் பேரணிகள் சிறிலங்காவிற்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. மேற்குலகத்தவரின் கவனத்தைக் கவரும் வகையில் போர்க் குற்றவியல் சாட்சியங்களை முன்வைத்து, போர்க்குற்றவாளிகளை ஐ.நா சட்டத்தின் முன் நிறுத்த ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தொடர்ந்து
செயற்படுமாறு வேண்டுகின்றோம்.

சில நாடுகளில் எமது மனித நேய பணியாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தமை தமிழ் மக்களின் உரிமைக் குரலை தடுத்து நிறுத்துவதோடு, மனித நேயத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகவும் இருக்கின்றது. சிறிலங்காவைத் தண்டிக்க வேண்டிய நாடுகள் மாறாக தமிழ் மக்களை தண்டிப்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகின்றது.

உலக மக்களுக்கும், மானிட விழுமியங்களுக்கும் சிறு தீங்கும் இழைக்காது வாழ்வுரிமைக்காகப் போராடும் எமது தேசப் பணியாளர்களை உலகம் பகைமைப் போக்குடன் “பயங்கரவாதிகளாக” அணுகுவதை நிறுத்தி, அவர்களது மனித நேயப் பணிகளை சுதந்திரமான முறையில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, ஓயாத புயலாக வீசிய போரில், சொந்த மண்ணில் ஏதிலிகளாகிய எங்கள் உறவுகள், இன்று வதைமுகாம்களில் திறந்த வெளிச்சிறைக் கைதிகளாகவும், சொந்த ஊரிலும், வாழ்விடங்களிலும் நடைபிணங்களாகவும் அல்லாடும் அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஓராண்டாகியும் தமது அன்றாட வாழ்வினில் சுயதேவைகளை பூர்த்திசெய்ய முடியாமல் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழுகின்ற எம்மின மக்களுக்குப் புலம்பெயர ; மக்கள் தொடர்நதும் உதவி செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை தமது மூச்சாக வரித்துத் தம்மை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களையும், மானமக்களையும் நினைவில் நிறுத்தி, கனத்த இதயங்களுடன் நினைவுகூரும் இந்நாளில், சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி எமது சத்திய இலட்சியத்தை வென்றெடுப்போம் என்று உறுதிகொள்வோமாக.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்

வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம்

0 comments
வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம். யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளால் பரபரப்பு(படங்கள் இணைப்பு)

Posted Image

Posted Image

Posted Image

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இரவு பல்கலைக்கழக வழாகத்தைச் சுற்றியும், மற்றும் சில தெருக்களிலும், மே 18 ஜ துக்கதினமாக அனுஷ்டிக்கச் சொல்லி துண்டுப் பிரசுரம், மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களும் இந்தச் சுவரொட்டிகளை அகற்றிவருகின்றனர்.
அத்தோடு துண்டுப் பிரசுரங்களும் இனம் தெரியாத நபர்களால் யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக யாழ் நிருபர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாளை மே 18 என்பதால் பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் யாழ் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள பகிஷ்கரிப்பு ஒன்றையும் நடாத்தியுள்ளனர் என்றும் அறியப்படுகிறது.
பல்லாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டதும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதும், மிகவும் துணிச்சலான விடையமாகும். சிவகுமார் எவ்வாறு ஒரு விடுதலை உணர்வை தூண்டினாரோ அதற்கு ஒப்பான நிகழ்வே தற்ப்போது மிகவும் துணிச்சலான முறையில் நடந்தேறியுள்ளது.


துண்டுப் பிரசுரங்களில் உள்ள வாசகங்கள் பின் வருமாறு:

வலி சுமந்த நெஞ்சோடு
விடுதலை நோக்கி பயணிப்போம் ……….


போராட்டமே வாழ்வாகிப்போன எம்மக்கள் இகாந்திய தேசத்தின் சூழ்ச்சியாலும், சிங்களத்தின் அடக்குமுறையினாலும் , முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டனர். 50,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அவலக்குரல் எழுப்பியும் ,அவர்களது சாவினை சர்வதேசத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை…

மரணித்தது மக்கள் மட்டுமல்ல..உலகின் ஜனநாயக பண்புகளும் விழுமியங்களும்தான்…

பட்டினி போட்டு, குண்டுகள் வீசி, பாதுகாப்பு வலயத்திற்கு வாவென்று அழைத்து, அம்மக்களை கொன்ற கொடூரம் மன்னிக்கப்பட முடியாத போர்க்குற்றம்.

களமாடி விழுப்புண் அடைந்த வேங்கைகளும், எறிகணை வீச்சுக்களால் அங்கங்களை இழந்த பொது மக்களும், சுற்றி வளைத்து நின்ற சிங்கள-பிராந்திய அரக்கர்களால் மே 18 இல் வேட்டையாடப்பட்டனர்.

இந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தப் போவது போல், சர்வதேச இராஜதந்திரக் கூத்தாடிகள் போக்குக்காட்டினர்.

இந்தியாவை மீறி, எந்த இராஜதந்திர அணுவும் அசைய மறுத்துவிட்டது.

கொதித்தெழுந்த புலம்பெயர் மக்களின் வேண்டுதலை எவருமே செவிமடுக்கவில்லை.

தமிழின அழிவை உலகிற்கு உணர்த்த, ஐ .நா.முன்றலில் தனது உடலை தீயில் சங்கமமாக்கினான் வேங்கை முருகதாஸ்.

சாஸ்திரி பவனில், தோழன் முத்துக்குமார் மூட்டிய பெரு நெருப்பு,தமிழகத்தில் தமிழின உணர்வினை தட்டி எழுப்பியது.

அனைத்துலக ஆதிக்க மனிதர்களின் நலன்களுக்குள் இ ஈழத்தமிழினத்தின் அவலக்குரல் கரைந்து போயிற்று.

இன்னமும் அவல வாழ்வு தொடர்கின்றது.

ஒரு இலட்சம் மக்களின், வதை முகாம் அவலம் குறித்து பேரினவாத அரசு கவலை கொள்ளவில்லை.

மறுபடியும் வெள்ளை வான் கும்பலின் அடக்குமுறைகள் விரிவடைகின்றன. கொதிநிலைப் பூமியாக மாறுகிறது யாழ் குடா.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், வலிமிகுந்த நினைவு சுமந்து, எழுச்சி கொள்ளும் இந்நாளில், அந்த மாவீரர்களின்-பொது மக்களின் உறுதி தளரா இலட்சிய வேட்கையை, நாம் மனதில் இருத்திக்கொள்வோம்.

விழ விழ எழுவோம்.. இலட்சியம் நோக்கிய பயணத்தில், இறுதிவரை இணைந்திருப்போம்..

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றி - மனிதன் இணையம்

Saturday, May 15, 2010

13 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்து கொடுக்க இலங்கை போகிறாராம் சல்மான் காண் ‐ அமிதாப் விஜயம் செய்ய மாட்டார் என்பதனை இலங்கை உறுதிப்படுத்துகிறது‐

0 comments
 
 
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக வடபகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 13 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்து கொடுக்க பிரபல இந்தித் திரைப்பட நடிகர் சல்மான்கான் தீர்மானித்துள்ளார்.
 
இந்த வீடமைப்பு தொடர்பில் முனைப்புகளை மேற்கொள்ளும் நோக்கில் சல்மான்கான் இலங்கை செல்லவுள்ளதாக இலங்கை அரசத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
 
இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கான தூதுவராக சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த பிரபல இந்தித் நடிகர் திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டார்

தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – அரசாங்கம்‐

0 comments




தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் மற்றும் தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் யுத்தத்தின் பின்னரான இலங்கை தொடர்பான புலம்பெயர் தமிழர்கள், சர்வதேச ஊடகங்களின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

தமிழ் புலம்பெயர் மக்களை விடுதலைப் புலிகள் பிழையான வழியில் இட்டுச் சென்றுள்ளதாகவும், இதன் காரணமாகவே புலம்பெயர் மக்கள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சில சர்வதேச ஊடகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரச்சாரம் செய்து வருவதாகவும், யுத்தத்தின் பின்னரான இலங்கையின் உண்மை நிலைமையை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உண்மை நிலைமை குறித்து புலம்பெயர் தமிழர்களுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச செய்தி ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக்காவில் நமைடபெறும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள சிங்கள அரசு

0 comments
மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக்காவில் நடை பெறும்
அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள சிங்கள அரசு


நாடு கடங்த தமிழீழ அரசுக்கான முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் மே 18ம் திகதி அமெரிக்கமாநிலமான வென் சுவேனியாவிலுள்ள
டுசில்டொப்பியா சகரத்தில் நடைபெற உள்ளது
கடந்த மே 2ம் திகதி தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்கநாடு சுதந்திரத்துக்கான போராட்டத்தை நடத்தியபோது அதன் பிரகடனம் இந்த டுசில் டொப்பியா மாநிலத்திலேயே நடைபெற்றது
அத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மாநகரில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழினத்தின் பிரதிநிதிகள்புதிய வரலாறு ஒன்றினைப்படைக்கப் போகிறார்கள்
கடந்த மே 18:2009 முள்ளிவாய்க்காலுடன்ஈpத்தமிழினத்தின் போராட்டத்தை அழித்துவிட்டோமென மார்தட்டிய சிங்களப் பேரினவாத அரசு
இன்று புலம்பெயர் தமிழ் மக்களது ஆக்ரோசமான வளர்ச்சி கண்டு கதி கலங்கியுள்ளது
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதுபோல நாம் உன்றுபட்டு எழுந்தால்
சிங்களப் பேரினவாத அரசிடமிருந்து எம் மக்களை முpட்டெடுக்க முடியும்
என்பதும்ட்டும் உறுதி

நன்றி ஈழ நாடு (கனடா)

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிராகிரியுங்கள்! - ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா கோரிக்கை!!

0 comments
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என சிறிலங்கா அரசு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலைத்தேய நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அரசியல் ரீதியாகவோ அல்லது குறியீட்டு ரீதியாகவோ எவ்வித உதவிகளையும் வழங்க வேண்டாம் என பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பேர்க்குக்கான சிறிலங்காத் தூதுவரும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்காப் பிரதிநிதியுமான ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு இராஜதந்திர பாதுகாப்பு மற்றம் தீவிரவாத நிலைமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவது ஆபத்தானது என தனதுதரையில் குறிப்பிட்ட அவர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும், மேற்குலக நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த இலங்கைத் தமிழ் மக்களுமே ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
இலங்கையில் இயல்பு வாழ்க்கை நிலவுவதைக் காரணம் காட்டி தாங்கள் திருப்பி அனுப்பப்படலாம் என்ற காரணத்தினாலேயே, பிரச்சினையைப் பெரிதுபடுத்த சில தரப்பினர் முயன்று வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
'சிறிலங்காவின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளிலிருந்து இரண்டு விடயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். வலுப்பெற்றிருந்த ஆயுதப் போராட்டக் குழுவொன்று தோற்கடிக்கப்பட்டமை என்பதோடு அவர்கள் மிக வலுவான சர்வதேச வலைமைப்பையும் கொண்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகள் வலுவான சர்வதேச வலையமைப்பை கொண்டுள்ளதுடன், வௌ;வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் ஊடாக தமது செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகளிடம் இன்னமும் நிறைய பணம் இருக்கின்றது என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது. இணையம் ஊடாகவும் பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளுக்கும் ஐரோப்பிய நாடுகள் இடமளிக்கக்கூடாது' என அவர் தனதுரையில் தெரிவித்துள்ளார்..

நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்!

0 comments
நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்!

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரான்சில் இருந்து தேர்வாகிய பிரதிநிகளில் ஒரு தொகுதியினர் மே 13 வியாழக்கிழமை அன்று கருதுப் பகிர்வொன்றை நிகழ்த்தினர்.
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதல் அமர்வு குறித்தும் - எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் மேலும் அனைவரது பங்களிப்போடு நாடு கடந்த தமிழீழ அரசினை பலப்படுத்துவது குறித்துமான தொடர் கருத்துப்பகிர்வுகளின் தொடக்கமாக இச்சந்திப்பு அமையப்பெற்றிருந்தது.
இம்முதல் கருத்துப்பகிர்விற்கு ஒரு தொகுதி பொது அமைப்பு பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான புரிதலை செயற்பாடுகள் ஊடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது - தமிழர்களின் சனநாயக அரசியல் முன்னெடுப்பை வலுப்படுத்த கல்விசார் இளையோரை உள்வாங்கிக் கொள்வது - சமூக அரசியல் செயற்பாடுகளை காத்திரமாக முன்னெடுப்பதற்கு வலுவான வள அறிஞர் வழிகாட்டிக் குழுவை உருவாக்குவது - பிரென்சு சமூக அரசியல் தளத்திற்கு தமிழர்களின் சனநாயக அரசியல் முன்னெடுப்பை முன்வைப்பது - சமூக அரசியல் விழிப்பினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கிலான தொடர்சியான சந்திப்புக்களை மேற்கொள்வது என பல்வேறு விடயங்கள் இக்கருத்துப் பகிர்வில் பரிமாறப்பட்டன.
நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் அமர்வில் கலந்து கொண்ட பின்னர் அமர்வு குறித்தான பகிர்வோடு - அடுத்தகட்ட முன்னெடுப்புகள் குறித்தான விளக்கங்களை உள்ளடக்கியதான மக்கள் சந்திப்புகளை விரைந்து நடாத்துவதென தேர்வாகிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
கருத்துப்பகிர்வின் நிறைவில் அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டது.
அறிக்கை பின்வருமாறு:
நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்!
புதிய வரலாற்று நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் எமது நன்றி
கடந்த வருடம் மே 18ல் ஈழத்தமிழ்மக்களின் வாழ்வுக்கும் எதிர்காலத்திற்குமான தேசிய விடுதலைப் போர் சிங்கள தேசியவாத அரசினது இராணுவ கொடுங்கோன்மையாலும், பிராந்திய சர்வதேச அரசுகளின் நலன்சார் அணுகுமுறைகளாலும் தோற்கடிக்கப்பட்டது.
எமது கண்முன் எமது தேசிய இனம் பெரும் இனசுத்திகரிப்பு நடவடிக்கைக்குட்பட்டது. தமிழீழ வரலாற்றினை எழுதிய எமது அக்னிக்குஞ்சுகள் மாவீரர்கள் ஆயினர். நாங்கள் நிர்க்கதியான வேளையில் நாடுகடந்த தமிழீழ அரசு என்கின்ற புதியகளம் திறக்கப்பட்டது.
2009 மே-18ல் நாங்கள் விட்ட இடத்திலிருந்து மீளப்பிறப்பது போன்று புதியவடிவில் - புதிய வீச்சுடன் எமது அரசியல் நகரத்தொடங்கியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் பிரான்சு பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல்பல்வேறு பரிமாணங்களில் வரலாற்று நிகழ்வாகவும் அமைந்துவிட்டது.
இந்தவேளை,
பிரான்சுவாழ் மக்களினால் நேரிடையாக தேர்வான பிரதிநிதிகளான நாங்கள் தேர்தலை ஏற்பாடு செய்து, அதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட நாடுகடந்த அரசுக்கான பிரான்சு செயற்பாட்டுக்கு குழுவிற்கு எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பாக, விடுதலைப் புலிகள் இயக்கதின் புலம்பெயர்ந்த நாட்டு செயற்பாடுகளில் மிகவும் நீண்ட, மூத்த பாத்திரத்தினை வகித்துச் செயற்பட்ட திரு.மனேகரன் அவர்கள் பல்வேறு சிரமங்களின் மத்தியில் தளராத உறுதியுடனும், பொறுமையுடனும் செயற்பட்டு இந்த வரலாற்று நிகழ்வினை நிகழ்த்தியுள்ளார். அவருடன் செயற்பட்ட பேராசிரியர் யூலியா அவர்களும் என்றென்றும் எம்மால் மதிப்புடன் நோக்கப்படுவார். மேலும், திரு.சிவா சின்னப்பொடி, திரு.வேலழகன், திரு.பரணி ஆகியோரிற்கும் எமது நன்றியும், பாராட்டுகளும் சேரட்டும்.
இத்தேர்தலுக்கு ஆதரவும், உற்சாகமும் வழங்கிச் செயற்பட்ட ஊடகங்களிற்கு, குறிப்பாக ஜீரீவி தொலைக்காட்சிக்கு எமது மனம்நிறைந்த நன்றி என்றென்றும் உண்டு.
தமிழ்வின், பொங்குதமிழ், புதினப்பலகை உட்பட ஆரம்பம் முதலே இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு உறுதுணை வழங்கிய இணைய ஊடகங்களுக்கும் எமது நன்றி.
இந்தத் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்ற செயற்பாட்டாளர்கள், இளையவர்கள் என அனவரும் என்றும் பாராட்டுக்குரியவர்கள். அத்துடன் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இந்த வரலாற்றினை நிகழ்த்திய கௌரவத்திற்குரியவர்கள் என்றே எண்ணுகின்றோம்.
இத்தேர்தலின் ஊடாக மக்கள் எமக்கு வெளிப்படுத்திய செய்தியினை நாங்கள் தமிழர் தாகமாக வடித்து  - ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு விசுவாசமாக செயற்படுவோம் என்பதை மீள இவ்வேளையில் வலியுறுத்துகின்றோம்.
உருவாக இருக்கும் நாடுகடந்த அரசுக்கான அரசமைப்பில் பிரான்சு வாழ் ஈழத் தமிழ் சமூகத்தின் கரிசனைகளை நாங்கள் தொடர்ச்சியான தொடர்பாடல்கள், சந்திப்புக்கள், கருத்தமர்வுகள் ஊடாக தொடர்வோம் என்பதனையும் இவ்வேளையில் அறியத்தருகின்றோம்.
அனைவரது கருத்துக்களையும் ஆக்கபூர்வமான ஆலோசனையும் நாங்கள் எப்பொழுதும் ஆர்வத்துடன் செவிமடுக்க தயாராக இருக்கின்றோம்
நன்றி
நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிகள்
பாலசந்திரன் நாகலிங்கம் -78
சுபாசினி குருபரன் - 77 - 91
சுதர்சன் சிவகுருநாதன் (சுதன்ராஜ் )- 95 - 78
மகிந்தன் சிவசுப்ரமணியம் - 75
சசிகுமார் சரவணமுத்து - மேற்பிராந்தியம்

சீனா விரிக்கும் 'முத்து மாலை வியூகம்' இந்தியாவை உடைக்குமா?

0 comments

'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி
இந்து சமுத்திரம் இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமானது என்ற நிலையினை இனிமேலும் ஏற்றுகொள்ள முடியாது என்ற பலமான கருத்துடன் சீன வெளியுறவு கொள்கை சிந்தனையாளர்களும் மிக முக்கியமான பாதுகாப்பு ஆலோசகர்களும் காலாகாலம் தொடர்ச்சியான பரிந்துரைகள் செய்து வந்தனர்.

இதன் பேரில் சீன அரச இயந்திரம் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தனது பொருளாதார இராணுவ இராஜதந்திர செல்வாக்குகளை பயன்படுத்தி பல இராணுவ மற்றும் வர்த்தக விநியோகத் தளங்களை நிர்மாணித்து வருகிறது.

சீனாவின் கடல்வழி வழங்கல் பாதையை பொறுத்தவரையில் மேற்கத்தேய நாடுகளைப்போல பயங்கரவாதமோ அல்லது கடற்கொள்ளையரோ நடைமுறைப் பிரச்சனை அல்ல.

ஆனால் இந்த வழங்கல் பாதையூடே இருக்கக்கூடிய தேசங்கள் தடைக்கற்களாக இருந்து சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு விளைவிப்பதாக அமைந்துவிட கூடாது என்பதை கருத்தில்கொண்டே தாம் இத்தகைய நிலைகளை அமைத்து வருவதாக சீன அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

அதேவேளை இந்திய மற்றும் மேலைத்தேய சார்பு ஆய்வாளர்களின் கருத்துபடி தற்போது பொருளாதார நலன்களை முன்வைத்து அமைக்கப்படும் இத்தளங்கள் பிற்காலத்தில் சீனா நன்கு வளர்ச்சி பெற்று விட்ட நிலையில் கடற்படை மற்றும் இராணுவ தளங்களாக மாற்றி அமைக்கப்படலாம் என்கின்றனர்.

சீன அரசு அமைக்கும் இத்தளங்கள் இந்தியாவுக்கும் அதன் பாதுகாப்பு நலன்களுக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் இந்த தளங்களில் ஏற்கனவே நீண்டதூர சமிக்ஞைகளை பரிமாறக்கூடிய தொழில்நுட்ப வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இலகுவாக மேலைத்தேய மற்றும் ஜப்பானிய கப்பல் போக்குவரத்தை கண்காணிக்க கூடிய மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவே மேற்கத்தைய புலனாய்வு நிறுவனங்களின் அறிக்கைகள் கூறுகின்றன.

சீனா உலகெங்கும் தனது வர்த்தக நடவடிக்கையை மிக வேகமாக வளர்ச்சி அடைய செய்து வருகிறது. இதில் தெற்கு தென்கிழக்காசிய பகுதி சீனாவின் முழுக்கவனத்திற்கும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதிலும் தெற்காசியாவில் தனது நேரடி வர்த்தகப் போடடியாளரான இந்தியாவை குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதில் ஒன்றுதான் 'முத்து மாலை வியூகம்' [string of pearls strategy]. இந்த வியூகத்தின் அடிப்படையில் தெற்காசியாவில் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடாது பல்வேறு பொருளாதார வேலைதிட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சீனா கூறிவருகிறது.
 
இந்தியாவை சுற்றி எவ்வாறு சீன தனது 'முத்து மாலை வியூகத்தை' அமைத்து வருகிறது என்பதை வரைபடம் காட்டுகிறது.

முத்து மாலை வியூகம் பற்றிய குறிப்புகள்:
  • தென் சீன கடலிலே இருக்ககூடிய முதலாவது புள்ளி கைனான் எனப்படும் தீவாகும் இந்த தீவின் தெற்கு நுனிப்பாகத்திலே தான் சன்யா எனப்படும் இந்துசமுத்திரத்தை கண்காணிக்கும் பிரதானமான தளம் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்படை வசதிகளுடன் கூடிய இத்தளம் இந்தியாவினுடய இந்துசமுத்திரம் மீதான சுதந்திரத்திற்கு பாதகமாய் இருப்பதாக இந்திய சார்பாளர்கள் கூறி வருகின்றனர்.
  • கைனான் பகுதியிலிருந்து வியற்நாமையும் சிங்கப்பூரையும் தாண்டி 1200 கடல் மைல் தொலைவில் இருக்கிறது மலாக்கா நீரிணை இதுவே கிழக்கு நாடுகளிலிருந்து இந்து சமுத்திரத்தினுள் செல்லும் கடல் வழி கலன்கள் ஒவ்வொன்றுககும் மலாக்கா நீரிணையே முதல் வாயில் ஆகும். ஆதலால் சன்யா தளத்தின் இறுக்கமான கண்காணிப்பின்கீழ் அப்பகுதி உள்ளது.
  • ஸ்த்மஸ் கரா பகுதியில் தாய்லாந்து நாட்டின் கால்வாய் அமைக்கும் திட்டம் சீன அரசால் மேற்கொள்ளபட்டு வருகிறது. இங்கு இலத்திரனியல் சமிக்ஞை கருவிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பாக இவை கடல்வழி கண்காணிப்பு சம்பந்தபட்டவையாகவே தென்படுவதாகவும் மேலைத்தேய மற்றும் இந்திய உளவு நிறுவனங்கள் கூறுகின்றன.
  • மியான்மர்ருக்கு செந்தமான கோக்கோ தீவுகளும் சீன அரசின் கட்டுமான பணிகளுக்குள் உடபட்டு இருப்பதால் ஸ்த்மஸ் பகுதி போல சந்தேகக்கண்கொண்டே பார்க்கப்படுகிறது.
  • சிட்டகொங் எனப்படும் வங்காள தேசத்தின் துறைமுகப்பகுதியில் சீனா ஒரு கப்பல்கொள்கலன் இறங்குதுறையை அமைத்து வருகிறது.
  • இப்போது எல்லோராலும் பரவலாக பேசப்பட்டு வரும் அம்பாந்தோட்டையும் கூட சீன கொள்கலன் இறங்குதுறையாகவும் எண்ணை சுத்திகரிப்பு நிலையாகவும் ஆரம்பத்தில் பயன்பாட்டுக்கு வரக்கூடிய இவ்விடம் பிற்காலத்தில் இந்தியாவுக்கு அபாயம்தரக்கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
  • மாலைதீவின் ஒரு பகுதியான மறாஓ தீவும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்ககூடிய சீன நடமாட்டமும் டெல்லியை கவலைக்குள்ளாக்கி உள்ளது.
  • இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானின் தென்மேற்கு கரையிலே குவாடார் என்னும் இடத்திலே ச|Pன உதவியுடன் ஓர் ஆழ்கடல் இறங்குதுறை கட்டிஅமைக்கப்பட்டு வருவது இந்தியாவை மட்டுமல்ல அமெரிக்கா இஸ்ரேல் போன்ற இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாட்டம் கொண்டுள்ள நாடுகளுக்கும் மிகக் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஏனெனில் இப்பகுதி ஈரான் எல்லையிலிருந்து 70 கிலேமீட்டர் தொலைவில் மட்டுமே அமைந்திருப்பதாகும். பிற்காலத்தில் இதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையாக மாற பெரும்வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.
     
  • மேலும் உலகின் பிரதான எண்ணை வள கடல் வழிப்பாதையான கோர்மூஸ் நீரிணையிலிருந்து 400 கிலோமீட்டர் கிழக்கில் குவாடார் இருப்பதால் சீனாவுக்கு கோர்மூஸ் பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதியில் நடமாடும் அமெரிக்க கடற்படை கப்பல்களை இலகுவாக கண்காணிக்ககூடிய வசதிகளை அமைத்து வருகிறது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தொடர்ச்சியான சொந்த கப்பற்போக்குவரத்து துறைமுக வசதிகளுடன் கூடிய நிலைமையானது சீன பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் தாங்கு தளங்களாக இருக்க உள்ளன.

தங்கு தடையற்ற மூலப்பொருள் வழங்கல் இந்த தளங்கள்மூலம் பல பத்தாண்டுகளுக்கு உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

சீனாவின் கச்சிதமாக திட்டமிடப்பட்ட பல்வேறு துறைகளிலுமான இத்தகைய அதிவேக வளர்ச்சி ஜப்பானிய, இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு பலத்த எச்சரிக்கை அளிப்பதாக இருக்கிறது.

இந்த வளர்ச்சிப்போக்கு மிக விரைவில் உலகின் பொருளாதாரத்தின் கணிசமான பகுதியை தன்னகத்தே உள்வாங்கும் நிலையை சீனா எட்டிவிடும என்று அந்த நாடுகள் எண்ணுகின்றன..

அத்தகையதொரு நிலையில்தான் இந்தியா போன்ற ஜனநாயக பண்புகளுடன் கூடிய, உள்நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ள, உலகின்பொருளாதார வளர்ச்சிப் போக்கிற்கேற்ப வளர்ந்து வரும் நாடுகளில் உடைவு ஏற்படும் நிலை உருவாகும் என உலகின் பல்வேறு இராஜதந்திர சிந்தனையாளர்களும் கருதுகின்றனர்.

இன்றைய உலக ஒழுங்கில் பொருளாதார நலன்களே இராணுவ மற்றும் மனிதஉரிமை விவகாரங்களிலும் பார்க்க முன்நிறுத்தப்படுகின்றன.

இந்த நடைமுறைக்கேற்ப தெற்காசியாவில் இந்தியாவை சுற்றி உள்ள ஏறத்தாழ எல்லா அயல் நாடுகளையும் நெருங்கிய இராஜதந்திர பொருளாதார உறவுகளின் ஊடாக சீனா தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களாக தெற்காசிய ஒத்துழைப்பு மகாநாடுகளில் [சார்க்] பார்வையாளர் நிலையில் இருந்த சீனா இந்த ஆண்டு நேபாளம், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் உறுப்பினராக இணைய முற்பட்ட நிலை இந்தியாவை தன்னகத்தே உள்வாங்கிவிட எத்தனிப்பதை காட்டுவதாக சுட்டிகாட்டப்படுகிறது.

எப்படி இருப்பினும் இந்திய மாநிலங்களுக்கும் டெல்லிக்கும் அதிகார இழுபறிகளும், டெல்லி அதிகாரபீடத்தின் தன்னலப்போக்கு நிலைகைளும் தற்போது கவனத்தில் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகள் சீன ஒத்துழைப்புடன் அமைதியான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வரும் இடத்து இந்திய மாநிலங்கள் டெல்லி கட்டுபாடுகளுக்கப்பால் சிந்திக்க ஆரம்பிப்பதோ, அல்லது தமது வெளியுறவு கொள்கை பற்றி சிந்திப்பதோ இந்தியா உடைய ஆரம்பித்து விட்டதாகவே கருதப்படும்.

இந்தியாவின் வடபகுதியில் சீன நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வரும் கடடுரைகளில் பார்ப்போம்.

இலண்டனில் வசித்துவரும்  லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் ஆய்வு மாணவராவர்.  கட்டுரை பற்றியதான கருத்து  எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

சீனா: சிறிலங்காவினது 'நிபந்தனையற்ற' கூட்டாளி

0 comments
சிறிலங்காவில் சீனச் செல்வாக்கு அண்மைய ஆண்டுகளில் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது. சிறிலங்காவிற்கான வர்த்தகப் பங்குதாரராகவும் இராணுவ உதவிகளை வழங்கும் கூட்டாளியாகவும் மாத்திரம் தென்னாசிய நாடாகிய சீன விளங்கவில்லை.

மாறாக, தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கும் சிறிலங்காவின் மீது மனித உரிமை போன்ற விடயங்களில் மேற்கு நாடுகளின் பிரயோகிக்கும் காத்திரமான அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் சீனா உதவுகிறது.

இவ்வாறு யேர்மன் ஊடகமான DW-WORLD.DE வெளியிட்ட கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Disha Uppal என்பவரால் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரையை 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

விடுதலைப் புலிகளைச் சிறிலங்கா அரச படையினர் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க, பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.
தென்னாசியாவின் பல நாடுகளும் கருதுவதைப் போல, சீனாவின் ஒத்துழைப்பின்றிச் சிறிலங்கா இந்த வெற்றியினைத் தனதாக்கியிருக்க முடியாது.

'விடுதலைப் புலிகளுடனான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுக்கான தேவை எழுந்த போதெல்லாம் சீனா பெரும் உதவிகளைச் செய்திருக்கிறது' என கொழும்பு பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரான கீதபொன்கலன் கூறுகிறார்.

இராசதந்திர ரீதியிலும் சீன மக்கள் குடியரசு சிறிலங்காவிற்கான தனது ஆதரவினை வழங்கி நிற்கிறது. சிறிலங்காவினது இன மோதல்களை அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பாக, குறிப்பாக போரின் இறுதி நாட்களின் போது அரச படையினர் நடந்துகொண்ட முறை தொடர்பாக மேற்கு நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தின.

நாட்டினது மனித உரிமை நிலைமைகள் மேம்படவில்லை எனக்கூறி சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை ஐக்கிய அமெரிக்கா இடைநிறுத்தியது. ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் கொண்டுவர முற்பட்டபொழுது கொழும்புக்கு ஆதரவாகச் செயற்பட்ட பீஜிங் அந்தத் தீர்மானத்தைத் தடைசெய்தது.

இதன் பின்னர் இந்த இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவு என்றுமில்லாதவாறு வலுவடைந்து காணப்பட்டது.

சிறிலங்காவிற்கான தனது உதவிகளை எந்தவிதமான நிபந்தனைகளுமற்ற ரீதியில் வழங்குவதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவின் அடிப்படை என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

'உதவிகளை வழங்குவதற்கு நிபந்தனைகளை விதிக்கும் மேற்கு நாடுகள் மற்றும் உலகவங்கி, அனைத்துலக நாயண நிதியம் போன்ற நிறுவனங்களைப் போலல்லாமல், கேள்விகள் எதனையும் கேட்காமலேயே சீனா சிறிலங்காவிற்கான தனது உதவிகளை வழங்கிவருகிறது' என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கல்யானந்த கொடகே கூறுகிறார்.

சிறிலங்காவின் நெடுநாள் கூட்டு நாடாகிய இந்தியா சிறிலங்காவில் முன்னெடுக்கும் செயற்பாடுகளைச் சமப்படுத்துவம் வகையில் சீனா செயலாற்றுவதாலேயே சிறிலங்கா தனக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவினை மேம்படுத்த முனைகிறது என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா குறிப்பிடுகிறார்.

'இந்தியாவினைப் பொறுத்தவரையில் கடந்தகாலத்தில் அதனது செயற்பாடுகள் சிறிலங்காவில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக இந்தியச் செல்வாக்கினைச் சமப்படுத்துவதற்காக, இந்தியாவின் பலத்திற்கு நிகரான இன்னொரு சக்தியினைச் சிறிலங்கா கொண்டிருக்க விரும்புகிறது' என்கிறார் அவர்.

சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காகச் சீனா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தினைக் கொடையாக வழங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொழும்புக்கான அளவில் பெரிய வெளிநாட்டுக் கொடையாளர் எனத் தான் கொண்டிருந்த பெயரினை டோக்கியோ இழந்திருப்பதோடு பீஜிங் அதனைத் தனதாக்கியிருக்கிறது.

'சீனாவிடம் மிகப்பெரும் கடற்படை இருக்கிறது. புதிய வல்லரசாக மாறிவரும் சீனா மேற்கு நாடுகளிலும் தனது வர்த்தகச் செயற்படுகளை விரிவுபடுத்தியுள்ளது. நாங்கள் இந்துமா சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இருப்பதனால் சீனாவினது மேற்குக்கான ஏற்றுமதிகள் அனைத்தும் எங்களது நாட்டினைக் கடந்தே செல்கிறது. இது முதன்மையானதொரு அம்சம்' என முன்னாள் இராசதந்திரி கொடகே கூறுகிறார்.

சிறிலங்காவினைச் சேர்ந்தவர்களின் முக்கியமான வர்த்தகப் பங்காளியாக, வல்லரசாக வளர்ந்துவரும் சீனா இருந்துவருகிறது. முத்துக்கள், தங்க ஆபரணங்கள், தேயிலை மற்றும் இயற்கை இறப்பர் போன்ற அம்சங்களே இரண்டு நாடுகளது இருதரப்பு உறவுகள் மேலும் மேம்படுவதற்கு உதவுகிறது.

'முத்து வியாபாரம் முதிர்ச்சியடையக் கூடியதொரு வர்த்தகம். அதிக பணப் புழக்கமுள்ள செழிப்பான வர்த்தகம் இது. புதிய பல வாய்ப்புக்கள் வந்து சேருவதற்கு இது வழிவகுக்கும்' என கொழும்பிலுள்ள முன்னணி முத்து வியாபாரியான செசாட் கரீம் கூறுகிறார்.

சீனாவினது மனித உரிமை நிலைமைகள் தொடர்வில் அதன் மேற்குப் பங்குதாரர்கள் வேறுபட்ட கருத்தினைக் கொண்டிருக்கின்ற போதும், அது சீனாவின் உள்ளகப் பிணக்கு என சிறிலங்கா கருதுகிறது.

'சீனாவில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக நாங்கள் கருத்திலெடுக்கப் போவதில்லை, அதனை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்' என்கிறார் கொடகே.

'எங்களது பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நலன்களுக்கு அனுகூலமாக அமையக்கூடிய இருதரப்பு உறவினை மேம்படுத்துவதற்கே நாம் விரும்புகிறோம். ஆதலினால் சீனாவுடனான எங்களது உறவுநிலை தொடர்பில் மகிழ்வடைகிறோம்' என்றார் அவர்.

இந்தப் புறநிலையில் பௌத்த நாடுகளான சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான 'பெறுமதிமிக்க' இந்த உறவினை குழப்புவதற்கோ அல்லது இழப்பதற்கோ சிறிலங்கா தயாராக இல்லை.

அண்டையில் சிறிலங்காவினது இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் இந்தியாவில் தலாய்லாமைவினைச் சந்திப்பதற்கு முனைந்தபோது சிறிலங்கா அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காணமல் போனோரை விடுவிக்கக் கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

0 comments
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணமல் போனவர்களை விடுவிக்கக் கோரியும் அவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில், கானமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரித்து வருகின்றோம்.

யாழ்ப்பாணம், மான்னார், வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து 300ற்கும் மேற்பட்டவர்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக முழமையான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் மாவட்ட ரீதியாக குழக்கள் அமைக்கப்பட்டு பனாங்கொடை, இரத்மலானை, வெலிக்கந்த போன்ற இடங்களில் உள்ள முகாம்களுக்கு காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்களை அழைத்தச் சென்று தேடவுள்ளோம்.

இது தவிர காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிந்து கொள்வதற்கும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுதலை செய்யுமாறும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடமாறும் அவ்வாறு எவ்விதமான பதில்களும் கிடைக்கப்பெறடின் ஐ_ன் மாதம் முதல் வாரம் தொடக்கம் கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

கனேடிய நாடாளுமன்றத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவு நிகழ்வு

0 comments
கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கனேடிய நாடாளுமன்றத்தினுள்ளே ஈழத்தமிழர் படுகொலையை நினைவு கூரும் மே நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சமய வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் NDP கட்சியின் தலைவர் லிபரல் கட்சியைச் சேர்ந்த பொப் றே, பற்றிக் பிரவுண், பன்னாட்டு மனிதவுரிமைகள் அமைப்பின் உபகுழுவின் துணைத் தலைவர் ஜேன் டோறியன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.
இந்த நிகழ்வில் 30 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து முறையான விசாரணையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கனடிய தமிழர் உரையாற்றிய பேரவையைச் சேர்ந்த திரு சுபேஸ் நவா விரைவில் கனடாவிற்கு வர இருக்கும் ஐநா செயலாளர் நாயத்திடம் இலங்கையின் போர்க் குற்ற விசாரணை குறித்து கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8903&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

Thursday, May 13, 2010

சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்?

0 comments
சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்?






விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் சுயநினைவை இழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.



யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வட்டித்துறைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் சுயநினைவை இழந்ததார் என்று வெளியாகி உள்ள செய்தி யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை.



பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புவதாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று தமிழக அரசு பரிந்துரை செய்ததால் மத்திய அரசும் பார்வதி அம்மாள் தமிழகம் வர அனுமதி அளித்தது.



தமிழகத்தில் மருத்தவச் சிகிச்சைக்காக 6 மாதம் மருத்துவமனையில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. வேறு சில நிபந்தனைகளும் கூறப்பட்டன.



இந்நிலையில் மலேசியாவில் விசா காலம் முடியும் தருவாயில் இருந்ததால், பார்வதி அம்மாள் திடீரென மலேசியாவில் இருந்து கொழும்பு சென்றார். அங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்தார். முன்னாள் எம்பியும், அவரது உறவினருமான சிவாஜி லிங்கம் பார்வதி அம்மாளை கவனித்து வருகிறார்.



பார்வதி அம்மாளுக்கு பக்கவாத நோய் தாக்கியிருப்பதால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக சிவாஜி லிங்கம் கூறினார். எனவே, பார்வதி அம்மாள் மகள்கள் மற்றும் உறவினர்கள் ஆலோசனைப்படி அவரை தமிழகம் கொண்டு செல்வதா? அல்லது இலங்கையிலேயே சிகிச்சை அளிப்பதா என்று முடிவெடுப்போம் என்று சிவாஜி லிங்கம் கூறினார்.



இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வல்வெட்டித்துறைக்கு சிகிச்சைக்காக பார்வதி அம்மாளை இன்று அழைத்துச் செல்வதாக சிவாஜி லிங்கம் கூறினார்.



யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வட்டித்துறைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் சுயநினைவை இழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த செய்தி யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நக்கீரன்

Wednesday, May 12, 2010

சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிராக போராட்டம் தொடரும்

0 comments
தமிழர்களின் உணர்வைப்புரிந்து iifaவிலிருந்து நடிகர் அமிதாப்பச்சன்
விலகியுள்ளார். அவரது இடத்தில் நடிகர் சல்மான்கான் இப்பொழுது புதிதாக
பொறுப்பேற்றுள்ளார். நடிகர் சல்மான்கானைக்கண்டித்தும் போராட்டங்கள்
தொடருமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை
அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2
முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப்
பச்சன்முக்கிய பங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழர்களின்இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும்
நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம்
தமிழர் இயக்கத்தினர் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன் சில
வாரங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அமிதாப் அவர்களைச்
சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில்
கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு
சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள
மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும் படி வற்புறுத்தியும் நடிகர்
அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்‌ஷா
வீட்டின் முன் நேற்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற
உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டத்தின் விளைவாக அது குறித்து பரீசீலித்த
அமிதாப் iifa விருது வழங்கும் கமிட்டியில் இருந்து,அதிலிருந்து
விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு
சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள
மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும் படி வற்புறுத்தியும் நடிகர்
அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்‌ஷா
வீட்டின் முன் நேற்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற
உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டத்தின் விளைவாக அது குறித்து பரீசீலித்த
அமிதாப் iifa விருது வழங்கும் கமிட்டியில் இருந்து,அதிலிருந்து
விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று புதன் கிழமை iifa விருது வழங்கும் கமிட்டியானது
அமிதாப் அவர்களை தூதர் பதவியில் இருந்து விடுவித்தது.ஐஸ்வர்யாராய்,அபிஷேக்
பச்சன் ஆகியோரும் விலகிக்கொண்டனர்.நடிகர் சல்மான் கான் அவர்களை புதிய
தூதராக இன்று காலை நியமனம் செய்துள்ளது.லாரா தத்தா,விவேக் ஓபராய்
ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து இன்று கருத்து தெரிவித்த
நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான்,தமிழர்களின் ஒப்பாரியும் மரண ஓலமும்
ஆட்சியில் இருக்கும் இந்தியர்களுக்கும் அவர்களை அண்டி இருக்கும்
திராவிடர்களுக்கும்,சில தமிழர்களுக்கும் புரியாத நிலையில் எங்கோ
உத்திரப்பிரதேசத்தில் பிறந்த நடிகர் அமிதாப் அவர்களுக்கு
புரிந்திருக்கின்றது.அதனை அவர் உணர்ந்து கொண்டு கொழும்பு சர்வதேச திரைப்பட
விழாவிற்கு செல்ல மறுத்திருக்கின்றார்.அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இனி புதிதாகப்பொறுப்பேற்றுள்ள சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய்
ஆகியோருக்கு எதிரான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்..

http://meenakam.com/?p=16044

மீண்டும் மின்னஞ்சல் அனுப்புவோம் - தமிழர்களே IIFA - க்கு எதிரான போராட்டத்தை தீவிரபடுத்துவோம்

0 comments
சீமானின் நாம் தமிழர் அமைப்பு நேற்று முதல் மும்பையில் உள்ள அமிதாப் வீட்டின் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர்

அவர்களின் போராட்டத்திற்கான தாக்கமும் நேற்றே கிடைக்க தொடங்கியுள்ளது.

Headlines Today என்ற வட இந்திய ஆங்கில ஊடகத்தில் ஏறக்குறைய பத்து நிமிடம்
இந்நிகழ்வைப் பற்றிய செய்தி தொகுப்பு நேற்றும், இன்றும் அவ்வுடகத்தில்
காண்பிக்கப்படுகிறது. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த SAVE TAMIL
தகவல் தொழில்நுட்ப மாணவர்களின் நிகழ்வும் காண்பிக்கப்படுகிறது.

அமிதாப்பச்சன் வீட்டிற்கு வெளியே வந்து பேசியுள்ளார். தான் ஒரு விளம்பர தூதுவர் மட்டுமே என்றும் ஒட்டுமொத்த விழாவை ரத்து செய்ய
Wizcraft International Entertainment Pvt. Ltd. நிர்வாகிகள்தான் முடிவுசெய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Wizcraft International Entertainment Pvt. Ltd நிர்வாகிகளில் ஒருவரான Wiz
Sabbas Joseph பேசும்போது கொழும்பில் இருந்து மாற்ற முடியாது என்பதைப்
போன்றே பேசியுள்ளார். அவருக்கு நாம் மின்னஞ்சல் மூலம் உண்மை நிலையை
விளக்குவோம்.

அவருக்கும் IIFA - வின் Sponsorship செய்பவர்களுக்கும் உண்மை நிலையை விளக்கி கூறுவோம்.

Wiz Sabbas Joseph
One of Founder and Director
Wizcraft International Entertainment Pvt. Ltd.
sabbas.joseph@wizcraftworld.com

IIFA

iifa@iifa.com

sabbas.joseph@wizcraftworld.com
ttedit@abpmail.com
Andre.Timmins@wizcraftworld.com
Viraf.Sarkari@wizcraftworld.com
anuja@wizcraftworld.com
lizel.noronha@wizcraftworld.com
anuja.choudhary@wizcraftworld.com
swetha.subbaraman@wizcraftworld.com
anil@wizcraftworld.com
gizelle.menezes@loweworldwide.com
urmi.iifa2010@gmail.com
ekta@subtlescream.co.in
vishal.sampark21@sampark.com
tamira.shah@buzzpr.in
trupti@hanmermsl.com
preeti@hanmermsl.com
sandeepm@text100.co.in
contact@picturenkraft.com
dwapar@yahoo.com
youmeandwe@gmail.com
dipankar@youmeandwe.com
harishsharma1@gmail.com
mumbai.hsc@gmail.com
hscmumbai@gmail.com
hscdelhi@gmail.com
info.hscom@gmail.com
ttkhand@abpmail.com
ruchika.vyas@lintasindia.com
pracheta.gupta@lintasindia.com
iifa@iifa.com
RajGiri@bachchan.com
info@shah-rukh-khan.info
info@mynameiskhan.co.in
b2spot@gmail.com
1788akalyanpur@genesispr.com
imookherjee@genesispr.com
legal@bollywoodbuzz.in
bwteam@bollywoodworld.com
contact@allbollywood.com

Sponsors

contact@videoconmail.com
rajat.mukarji@idea.adityabirla.com
ccare.ap@idea.adityabirla.com
cccare.assam@idea.adityabirla.com
ccare.dl@idea.adityabirla.com
ccare.bj@idea.adityabirla.com
9824012345@idea.adityabirla.com
ccare.har@idea.adityabirla.com
ccare.hp@idea.adityabirla.com
ccare.jk@idea.adityabirla.com
ccare.kar@idea.adityabirla.com
ccare.kerala@idea.adityabirla.com
ccare.kolk@idea.adityabirla.com
ccare.mp@idea.adityabirla.com
ccare.mh@idea.adityabirla.com
care.mumbai@idea.adityabirla.com
ccare.ne@idea.adityabirla.com
ccare.or@idea.adityabirla.com
ccare.pun@idea.adityabirla.com
ccare.tn@idea.adityabirla.com
ccare.raj@idea.adityabirla.com
ccare.upe@idea.adityabirla.com
ccare.upw@idea.adityabirla.com
ccare.wb@idea.adityabirla.com
ipo@gitanjaligroup.com
choksi@gitanjaligroup.com
feedback@pvrcinemas.com
mumbai.grand@hyatt.com
delhi.regency@hyatt.com
info@maccosmetics.in
editor@verveonline.com
feedback@verveonline.com
fashion@verveonline.com
info@buzzintown.com
partners@buzzintown.com
events@buzzintown.com
yoga@diafuego.net
romy@diafuego.net
brightoutdoor@gmail.com
brightadvtg@hotmail.com
info@buzzintown.com
partners@buzzintown.com
events@buzzintown.com
yoga@diafuego.net
romy@diafuego.net

http://www.bollywoodbuzz.in/contact/
http://www.bollywood.com/contact
http://www.goamitabh.../contactus.aspx
http://www.vluvshahr...e/contactus.htm
http://www.allbollyw...ontact-us.shtml
http://www.gohrithik.../contactus.aspx
http://www.gokareena.../contactus.aspx
http://www.goabhishe.../contactus.aspx
http://www.gopriyank.../contactus.aspx
http://www.goaishwar.../contactus.aspx
http://www.gosalman.com/contactus.aspx

List of Evidences:

http://www.change.or...hat_on_earth_is

=========

Letter Format

Dear IIFA Directors/Sponsors,

I am in an enormous shock to see such a dignified forum is planning
to have its prestigious award ceremony in a land that is accused of
war crimes and genocide. People from across the globe are condemning
the Human rights violations of Srilankan government.

And civilized society is fighting hard to establish the justice to
the tamils. Killing of nearly 1,40,000 innocents, war crimes,
ongoing slaughter on the journalists, moderates, reformists, artists
and having opposition leader behind the bars make the Srilanka as a
criminal and a failed state.

People’s Permanent Tribunal found Srilanka guilty of war crimes and
Genocide.
UN’s Human Rights Chief is critical of Lankan government Human rights
records.
US human rights report accused Lankan rulers for the Human Rights
violations.

I urge you to change the venue of your event; else this will
strengthen and encourage the government that is involved in the
human rights violations. It will be too ugly and gory to have the
favorite stars to dance in the Tamils’ graveyard.

This is the high time for you to respect not just the sentiments of
Tamils across globe but more importantly respecting the human rights.

Please change the venue to a different country. It will honor you.

For your reference i am attaching the supporting evidences for war
crimes and Genocide.

Yours Truly,
(.......................)

=======

மேலும் இந்தி திரையுலகை சேர்ந்தவர்களின் மின்னஞ்சல் இருந்தால் தயவு செய்து பகர்ந்துகொள்ளவும்.

இந்நிகழ்வுகளைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளுங்கள். போராடசொல்லுங்கள்

முத்தமிழ்வேந்தன்
சென்னை

Tuesday, May 11, 2010

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு

0 comments
முள்ளிவாய்க்காலில் அப்பாவிப் பொதுமக்கள் இன அழிப்புச் செய்யப்பட்டதை அங்கீகரித்து, அஞ்சலி செலுத்துமாறு உலகத் தலைவர்களுக்கு 'ஒபாமாவிற்கான தமிழர்கள்' என்ற அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கோரிக்கைக் கடிதங்கள் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மத்திய மற்றும் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக், அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்காலில் குறுகிய காலத்தில் பொதுமக்கள் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போதிலும், உலகத் தலைவர்களும், பன்னாட்டு சமூகமும் உரிய கவனம் செலுத்தத் தவறியிருப்பதையும் இந்தக் கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது

கொழும்பு திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் - மணிரத்தினம்

0 comments
கொழும்பில் நடைபெறவுள்ள இந்திய பன்னாட்டு திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என, பிரபல தமிழ் இயக்குனர் மணிரத்தினம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், தனது புதிய படமான இராவணன் படத்தை அங்கு திரையிட வேண்டாம் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடடித்த அமிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய் கொழும்பு செல்வாரா எனக் கேட்டபோது, அது அவரது தனிப்பட்ட விருப்பம் என மணிரத்தினம் பதிலளித்துள்ளார்.
தமிழர்களைக் கொன்று குவித்த சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் நடைபெறும் திரைப்பட விழாவினை தமிழ் திரையுலகம் உட்பட இந்தியத் திரைப்படத் துறையினர் நிராகரிக்க வேண்டும் என, நாம் தமிழர் உட்பட பல்வேறு தமிழ் உணர்வாளர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அமிதாப்பின் வீட்டின் முன்பாக உணர்வுடன் மீண்டும் போராட்டம் நடத்தும் தமிழர்கள்

0 comments
ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாடு உறவுகள் இன்று முதல் அமிதாப் பச்சனின் வீட்டின் முன்பாக போராட்டம் மேற்கொண்டு வருவருவதுடன், சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
சீமானின் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த உறவுகளே முன்பையிலுள்ள அமிதாப்பின் வீட்டின் முன்பாக இன்று மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 50 பேர் வரையில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
ஜூன் 3ஆம் நாள் முதல் 5ஆம் நதள்வரை கொழும்பில் நடைபெறவுள்ள இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவில் பங்கேற்கக்கூடாது எனக் கோரிக்கை விடுத்து கடந்த ஏப்ரல் 25ஆம் நாள் இவர்கள் போராட்டம் மேற்கொண்ட போதிலும், அமிதாப் இந்த விழாவில் கலந்துகொள்வார் என சிறீலங்காவின் அமைச்சர் யாப்பா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமிதான் அவரது மகன், மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கொழும்பு செல்லக்கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் மீண்டும் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடரும் என சீமான் அறிவித்துள்ளார்.

மலேசியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றார் பார்வதி அம்மாள்

0 comments
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு சில நிபந்தனையுடன் தமிழத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.




இந்நிலையில் மலேசியாவில் வரும் 15ஆம் தேதிக்குள் விசா காலம் முடிவடைவதால், பார்வதி அம்மாள் இலங்கை செல்ல முடிவு செய்தார். இதனையடுத்து சிவாஜிலிங்கம் உதவியோடு திங்கள்கிழமை மாலை இலங்கை கொழும்பு விமான நிலையத்துக்கு வந்த பார்வதி அம்மாள், அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.



தமிழகத்தில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கிடைத்திருப்பது பற்றி தமிழக அரசு மூலமோ, இந்திய அரசு மூலமோ இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ள சிவாஜிலிங்கம், இலங்கையில் தனது பாதுகாப்பில் வைத்து பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்திருப்பதாவும் தெரிவித்துள்ளார்.



தமிழக அரசின் நிபந்தனைகளை பார்வதி அம்மாள் உறவினர்கள் ஏற்பாகளா? தமிழகம் சென்று சிகிச்சை பெறுமாறு பார்வதி அம்மாள் உறவினர்கள் கேட்டுக்கொண்டால் என்ற கேள்விக்கு, சிவாஜிலிங்கம் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.



http://www.nakkheera...ws.aspx?N=31928

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்படவுள்ளனர்:

0 comments
பாதுகாப்பு தரப்பினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.



சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தகுதி பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படவுள்ள படை வீரர் வாரத்தை முன்னிட்டே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.



புலிகளுடனான யுத்த வெற்றியினைக் கொண்டாடும் வைபவங்கள் எதிர்வரும் மே 20ம் திகதி காலிமுகத்திடலிலும் பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகிலும் இடம்பெற இருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு கடந்த தமிழீழம்: நடந்து முடிந்த தேர்தல்

0 comments
நாடு கடந்த தமிழீழம்: நடந்து முடிந்த தேர்தல் !


By: பிரகாஷ் எம் ஸ்சவாமி

Courtesy: விகடன் - வைகாசி 12, 2010
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்திட வேட்பாளர்களை தேர்வு செய்ய முதற்கட்டமாக தமிழீழ செயற்குழு தேர்தல்களை நடத்தியது. நியூயார்க் மாநகரில் இரண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. நியூ ஹைட் பார்க்கில் உள்ள வைஷ்ணவ கோயிலிலும்,



ஸ்டேடன் ஐலண்டு எனும் தீவிலும் காலை 12 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மே 17, 18 தேதிகளில் இங்கிலாந்தில் கூடி, நாடு கடந்த ஈழ அரசுக்கான அரசியல் நிர்ணய சபையைத் தேர்வு செய்வார்கள்.



தேசிய அவைக்கு அமெரிக்காவில் இருந்து விசுவநாதன் ருத்ரகுமாரன் மற்றும் பென்சில்வேனியாவைச் சேர்ந்த மனநல நிபுணர் மருத்துவர் ஜெரார்ட் பிரான்சிஸ் ஆகியோர் போட்டியிட்டனர். நியூயார்க் மாநில உறுப்பினர் பதவிக்கு மருத்துவர் செல்லத்துரை தயாபரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம் என்ற வழக்கறிஞர் போட்டியிட்டனர். இந்த வேட்பாளரின் தந்தை ஜெயலிங்கமும், ருத்ரகுமாரனும் நீண்டகாலமாக புலிகள் இயக்கத்தில் இருந்து பிரபாகரனின் பேரன்பைப் பெற்றவர்கள்.



ஒரு ஜனநாயக நாட்டின் பொதுத் தேர்தலைப் போல மிகவும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் ருத்ரகுமாரன் தேர்தலை நடத்தினார். அமெரிக்க அரசாங்கத்தில் அவருக்குள்ள தொடர்புகளை வைத்து ராம்சே கிளார்க் என்கிற ஓய்வுபெற்ற அட்டார்னி-ஜெனரலை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமித்தார். இதில் உறுப்பினர்களாக முன்னாள் ஃபெட்னா தலைவர் (வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை) சிகாகோவைச் சேர்ந்த டாக்டர் இளங்கோவன், பேராசிரியை ஜூடித் லின்ச், பத்திரிகையாளர் பிரேம் ஷான், முன்னாள் யாழ் மாநகர மேயர் நடராசாவின் மனைவி இந்திராணி போன்றோர் உள்ளனர்.



வாக்காளர்கள் ஈழத் தமிழர்களே... ஈழம் மலர உறுதி எடுத்துக்கொண்ட பல இந்திய தமிழர்களும் வாக்களித்தனர். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிம அட்டை, டிராவல் டாகு மெண்ட்களை சரிபார்த்து வாக்குச் சீட்டு தரப்பட்டது. கையில் மைக்கு பதிலாக ரப்பர் ஸ்டாம்ப் பேடில் ஆள்காட்டி விரல் பதித்து எடுக்கப்பட்டது. தமிழே தெரியாத இரு இளைஞர்கள் - பீட்டர் பிரசாத் (கயானா) மற்றும் பாஹீத் முகம்மது (பங்களாதேசம்) ஆகியோர் தேர்தல் கமிஷன் பார்வையாளர்களாக இருந்தனர். இவர்கள் முன்னிலையில் ஓட்டுப் பெட்டிகள் சரிபார்க்கப்பட்டு, வாக்குகள் சோதனை செய்யப்பட்டு அதன்பிறகே தேர்தல் தொடங்கியது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராம்ஸே கிளர்க் அலுவலகத்துக்கு அனைத்து வாக்குச் சீட்டுகளும் கூரியரில் அன்று இரவே அனுப்பப்பட்டன. தனி ஈழத்துக்கான அரசாங்கம் அமைத்து, அங்கே தமிழ்த் தலைவர்களுக்குள் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்தும் காலத்தைக் கனவில் தேக்கி... இன்றைய நிலையால் சோர்ந்துவிட்ட பல ஈழத் தமிழர்களுக்கு, இந்த நாடு கடந்த ஈழ அரசுக்கான தேர்தல் புத்துணர்ச்சி தந்த அனுபவம். இலங்கையில் இருந்தபோது தேர்தலையே சந்தித்திராத பலரும் வாக்களிக்க ஆர்வத்தோடு வந்தனர். ஆயினும், பதிவான மொத்த வாக்குகள் 600-ஐக்கூட தாண்டவில்லை.



வலைத்தளத்தின் வழியாகவேகூட மின் அஞ்சலில் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டதால், பலர் ஆன்லைனில் வாக்குகளைப் போட்டனர். பிரசாரமும் தீவிரமாகவே இருந்தது. ருத்ரகுமாரன் யார் பக்கமும் சேராமல் ஒதுங்கியிருந்தார். குயின்ஸ் பகுதியில் ஒரு விளையாட்டு அரங்கில் வாக்கு சேகரிக்கப்போன இரு கோஷ்டிகள் (நம்மூர் தேர்தல் பிரசாரங்கள் போல!) சூடாக பதிலடி கொடுத்து மோதிக்கொண்டன. தயாபரன் கோஷ்டியினர், ''ஜெயப்பிரகாஷ§க்கு தமிழே தெரியாது; ஈழப் போராட்டம் பற்றிய விவரங்களும் தெரியாது. அவர் குழந்தைப் பருவத்திலிருந்தே அமெரிக்காவில் வசிக்கிறவர். அதேபோல்... ஜெயலிங்கம் பெயரை வைத்து, அவர் மகன் வாக்குகளைப் பெற நினைக்கிறார். மேலும், அவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக இலங்கை அரசு தீட்டிவரும் சதித் திட்டத்துக்கு இசைகிறார்கள். தமிழீழம் இல்லாவிடில் வடக்கு-கிழக்கு இணைந்த தனி மாநிலமே எங்கள் விருப்பம். சின்னப் பையன்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியும்?'' என்று பொருமித் தள்ளிவிட்டார்கள்.





ஜெயப்பிரகாஷ் ஆதரவாளர்களோ, ''எங்களவர் இளைஞர், வழக்கறிஞர், புதிய சிந்தனை உள்ளவர். தேசியத் தலைவரின் கனவு அதிகளவு இளைஞர்கள் இயக்கத்துக்கு வரவேண்டும் என்பதே. தன் தந்தையுடன் இணைந்து ஈழப் போராட்டத்தைப்பற்றி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார். அவரை சாதாரணமாக எடை போட வேண்டாம்!'' என்று பதிலடி கொடுத்தார்கள்.



தேசிய அளவில் ருத்ராவுடன் மோதும் டாக்டர் ஜெரார்ட் பிரான்சிஸ், ருத்ராவைப் போல் அல்லாது ஒரு தீவிர ஈழப் போராளி. யூதப் பெண்மணியாக டாக்டர் எலைன் ஷாண்டருடன் இணைந்து கடந்த ஆண்டு,USTPAC - UNITED STATES TAMIL POLITICAL ACTION COMMITTEE என்பதைத் துவக்கி அமெரிக்க அரசியலை கலக்கி வருகிறவர். எந்தப் போராட்டம் என்றாலும் முதல் ஆளாக நிற்பவர். இந்தியாவை நட்பு நாடாகப் பார்க்காதவர். சர்வதேச அளவில் பிரபலம் ஆகாதவர். ருத்ரகுமாரன், அமெரிக்காவில் தமிழ் ஈழ ஆர்வலர்கள் மத்தியில் பிரபல முகம். ஆண்டன் பாலசிங்கத்தின் பிரதான சிஷ்யர். வழக்கறிஞர்.



நாடு கடந்த ஈழத்தின் தலைநகராகவே மாறிவரும் கனடாவிலோ, இந்தத் தேர்தல் பெரும் களேபரம் ஆகி இருக்கிறது. அங்கு ஈழத் தமிழர்கள் 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள். கனடா தேர்தலில் ஜோ அந்தோணி, எம்.கே.ஈழவேந்தன், தாரணி பிரபாகரன், பொன் பாலராஜன், எஸ்.திருச்செல்வம் ஆகியோர் டொரன்டோவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஒன்டாரியோவில் இருந்து ஈசன் குலசேகரம், வனிதா ராஜேந்திரன், சுரேஷ் ரத்னபாலன் ஆகியோர் வென்றனர். அங்குள்ள முக்கிய ஈழத் தமிழ்த் தலைவர் களான கனேடிய தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாலபிள்ளை மற்றும் நேரு குணரத்னம் ஆகிய இருவருமே நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைய ஆதரவு தந்ததால் அதிக பிரச்னைகள் இயக்க அளவில் ஏற்படவில்லை. இருப்பினும்... ரெகி, சேரமான் போன்ற போராளிகள் இந்தத் தேர்தலை விரும்பவில்லை.





எப்படியோ... வாஷிங்டன் வாழ் ஈழத் தமிழ்த் தலைவர் ஒருவர், ''அவசரமாக நடத்தப்பட்ட தேர்தல் என்பதால், வாக்காளர் பட்டியல் சரியாக எடுக்கப்படவில்லை. எந்தவொரு ஈழத்தமிழரும் வந்து வாக்களிக்கலாம் என்ற விதிமுறை சரியானதாகப் படவில்லை இதில், பல ஈழத் தமிழர்கள் ஆர்வமும் காட்டவில்லை. பிரசாரம் செய்ய போதிய நேரம் இல்லை! இதுபோன்ற குறைபாடுகள் இருந்தாலும், உண்மையாக ஜனநாயக வழித் தேர்தல் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்தத் தேர்தல் ருத்ராவின் கரங்களை வலுப்படுத்தும்!'' என்றார்.



ஜூலை மாதம் கனக்டிகட் மாநிலம் வாட்டர்பரி நகரில் நடக்கவிருக்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் 23-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழீழத் தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் முயற்சிகளுக்கு இந்தியத் தமிழர்களின் ஆதரவை கோர இருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து வரும் அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் - பாரதிராஜா, கவிஞர் தாமரை, பர்வீன் சுல்தானா, நடிகர் விக்ரம், திரிஷா ஆகியோரிடம் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துவைத்து அதை தமிழக மக்களிடம் கொண்டுசெல்ல உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



30 வருடங்களாகத் தொடரும் இனப் படுகொலைக் கோர நிகழ்வுகளால் பரிதாப நிலைக்கு ஆளாகிப் போன ஈழத் தமிழர்கள் உலக அளவில் சுய உரிமை அரசு ஒன்றை நிறுவும் முயற்சியில் முதல் அடி எடுத்து வைத்துவிட்டார்கள். இப்போது இவர்கள் கவனமெல்லாம் - இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதில்தான்!



போர்க் குற்றத்தில் சிக்கும் இலங்கை! - டி.எல்.சஞ்சீவிகுமார்



போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்து வரும் ரோம் நகரைச் சேர்ந்த 'பர்மனென்ட் பீப்பிள்ஸ் டிரிபியூனல்' அமைப்பு, இலங்கை அரசு புரிந்த போர்க் குற்றங்கள் குறித்து கடந்த ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில், அயர்லாந்தின் டப்ளின் நகரில் விசாரணை நடத்தியது. இதில் கலந்துகொண்டு சாட்சியம் அளித்துவிட்டு வந்திருக்கும், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணிபுரியும் பால் நியூமேன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரை சந்தித்தோம்.



''பர்மனென்ட் பீப்பிள்ஸ் டிரிபி யூனல் அமைப்புதான் (பி.பீ.டி) வியட்நாம் போரில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை முதன்முதலாக உலகுக்குத் தோலுரித்துக்காட்டியது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை யை விசாரிக்கும்படி இலங்கையை சேர்ந்த 'ஐரீஷ் ஃபோரம் ஃபார் பீஸ் இன் ஸ்ரீலங்கா' என்ற அமைப்பு கேட்டுக்கொண்டதன் பேரில், 'பி.பீ.டி' கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடத்தியது. இவ்வளவுக்கும் இலங்கையைச் சேர்ந்த அந்த அமைப்பை நடத்துவதே நல்ல உள்ளம் கொண்ட சிங்களவர்கள்தான்!



விசாரணையில் சமூக ஆர்வலர்கள், சிங்களப் பத்திரிகை யாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சாட்சியங்களை முன்வைத்தனர். அமெரிக்க தமிழ் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, இலங்கை ராணுவம் நடத்திய இனப்படுகொலையை சாட்டிலைட் மூலம் படமெடுத்து, இந்தக் குழுவிடம் சமர்ப்பித்தனர். இலங்கையில் கைகள் பின்பக்கமாகக் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்படும் தமிழ் இளைஞர்களின் படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. 'அவர்களைச் சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகள்தான்...' என்று இலங்கை ராணுவம் மறுத்தது. ஆனால், சாட்டிலைட் படங்களுடன் ஒப்பிட்டு, கொலை நடந்த இடம், இலங்கை ராணுவத்தின் ஆளுகையில் இருந்தது என்று உறுதிசெய்து கொண்டது 'பி.பீ.டி.' அமைப்பு.



போரில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியது உட்பட இலங்கை ராணுவம் செய்த பல்வேறு போர்க் குற்றங்களை நான் கூறினேன். இன்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தீப்பெட்டி, பிஸ்கெட் உள்ளிட்ட 54 வகையான பொருட்களுக்கு தடை உள்ளது. போரின்போது பிடித்துச் செல்லப்பட்ட சுமார் 12 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் கதி என்னவென்று தெரியவில்லை..! இதையெல்லாம் விரிவாக நான் அந்த குழுவினரிடம் பதிவு செய்தேன்.



விசாரணை நிலவரங்களை வைத்து ஐ.நா. சபையின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் மற்றும் ரோஹித் போகோலாகாமா ஆகிய இரு நபர் சிறப்பு கமிஷனை ஐ.நா. நியமித்துள்ளது. ஆனால், வழக்கம் போல் இலங்கை அரசுடன் சேர்ந்துகொண்டு இந்திய அரசின் ஐ.நா. சபைக்கான பிரதிநிதியும், 'இந்த இரு நபர் கமிஷன் தேவையற்றது. இலங்கையில் நடந்தது உள்நாட்டுப் பிரச்னைதான்' என்று இந்த கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுதான் அநியாயம்!'' என்று முடித்தார் பேராசிரியர் பால் நியூமேன்.



யார் என்ன சொன்னால் என்ன..? அரக்கத்தனத்தை துளியும் அடக்கிக் கொள்ளாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறதே இலங்கை இனவெறி மிருகம்!

Sunday, May 9, 2010

வெளி நாடுகளில் தமிழீழத்திற்கு புத்தியிர் அதனை தடுக்குமாறு சிங்கள பிரதமர் கோரிக்கை

0 comments

வெளி நாடுகளில் தமிழீழத்திற்கு புத்தியிர் அதனை தடுக்குமாறு சிங்கள பிரதமர் கோரிக்கை
வவுனியா நிருபர்
ஞாயிற்றுகிழமை, மே 9, 2010

இலங்கையில் புலிகளை ஒழித்துவிட்டோம் ஆனால் வெளி நாடுகளில் நீங்கள் புலிகளை வளர்க்காதீர்கள் இவ்வாறு சிங்கள பிரதமர் டி.எம். ஜெயரட்ன அவர்கள் வெளி நாடுகளை கேட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வசித்துவரும் சுமார் 15 லட்சம் புலம்பெயர் தமிழ்மக்கள் இலங்கையில் தங்கள் சமூகத்தினருக்கென சுதந் திரதாயகம் ஒன்றை உருவாக்குவதற்காக பிரிவினைப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கென இயக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள்.
வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் அனுதாபிகள் எதிர்வரும் 17ஆம் திகதி தொடக்கம் சுவிற்ஸர்லாந்தில் மூன்று நாள் நிதிசேகரிப்பு இயக்கம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். என்று தனது கண்டுபிடிப்பினை வெளியிடுள்ளார்.

மற்றுமொரு நாட்டுக்கு எதிராக எவரும் எமது மண்ணைப் பயன்படுத்த நாம் அனுமதி அளிக்கமாட்டோம். மேற்கு நாடுகள் இலங்கைக்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுப்பதற்கு ஆவன செய்வதில்லை என்று நான் கருதுகிறேன். மேற்கு நாடுகள் அத்தகையோ ருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

http://www.eelanatha...%AE%95%E0%AF%88

மே 17 தாயகத்தில் துக்க தினம் கூட்டமைப்பு வேண்டுகோள்

0 comments

மே 17 தாயகத்தில் துக்க தினம் கூட்டமைப்பு வேண்டுகோள்

வவுனியா நிருபர்
ஞாயிற்றுகிழமை, மே 9, 2010

உலகத்தமிழர்கள் மே மாதத்தில் 12- 19 வரை பல்வேறு நிகழ்வுகளுடன் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு படுத்தி அனுட்டிக்கின்றனர். ஆகவே தாயகத்திலும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என புலம்பெயர் மக்கள் மற்றும் ஏனையோரும் கேட்டதற்கு அமைய தாயகத்திலும் வருடாந்தம் மே 17 ஆம் திகதியை துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது. உச்சக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை, இலட்சக் கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டியே இத் துக்கதின அனுஷ்டிப்பைக் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளினாலும் போரினாலும் பெரும்தொகையானோர் உயிரிழந்துள்ளனர். பலர் வேறு பல பாரிய பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர். பெருந்திரளானோர் வீடுகளிலும் இருப்பிடங்களிலும் இருந்து வெளியேற்றப்பட்டு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

2006 நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காலப்போக்கில் விரிவடைந்து, வன்னிப் பெருநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று இறுதிக்கட்டமாக கடந்த வருடம் 2009 ஜனவரி மாதம் தொடக்கம் மே 18 ஆம் திகதி வரை உக்கிரமாக நடந்தது.

இந்த உச்சக்கட்டப் போரின் போது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதுடன் மேலும் இலட்சக்கணக்கானவர்கள் வேறு பல பாரிய பாதிப்புகளுடன் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தப் பேரவலம் உலக சரித்திரத்தில் நடந்த பாரிய இப்பேரவலத்தை நினைவு கூரும் வண்ணமாக வருடா வருடம் துக்கதினமொன்றை கடைப்பிடிக்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் வேண்டுகின்றோம். இவ்வருடம் 2010 மே 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் சமய வழிபாட்டுத் தலங்களில் அமைதியான முறையில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அனைத்துத் தமிழ் மக்களøயும் சமயத் தலைவர்களையும் அன்பாக வேண்டுகின்றோம்.

கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வராசா,ந.சிவசக்தி, பா.அரியநேத்திரன், விநோ நோகராதலிங்கம், ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சி. யோகேஸ்வரன், ம.ஆ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கே. பியசேன ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

http://www.eelanatha...%AE%B3%E0%AF%8D

கொடியும் கோசமும் தமிழர் உரிமையை பெற்றுத் தருமா?

0 comments
தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தோற்கடிப்பட்டு ஓராண்டு கடந்துள்ளது.

இந்த ஓராண்டு காலத்தில் தமிழர் தாயகம் பல்வேறு வகைகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டு மிக வேகமாக சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இறுதி யுத்த காலத்தில் சுமார் நாற்பதினாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்பட்டமான போர்க் குற்றங்கள் சிங்களத்தினால் அரங்கேற்றப்பட்டன. போர் முடிந்த பின்னரும் சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

சிங்கத்தின் குகைக்குள் சிக்குண்ட மானைப் போல சின்னா பின்னப்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் அவலங்களை சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் படம் போட்டுக் காட்டியிருந்தன. ஆனாலும் சிங்கள அரசின் இந்தக் கொடுமைகளைப் பகிரங்கப்படுத்தும் விதமான செயற்பாடுகளைப் புலம் பெயர் தேசத்தில் இயங்கும் தமிழர் அமைப்புகள் முனைப்புடன் முன்னெடுத்தன என்று சொல்ல முடியாது.

தமது இருப்புக்களைக் காத்துக் கொள்வதிலும் பதவிக் கதிரைகளுக்குப் பங்கம் வராமல் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதிலுமே இந்த அமைப்புக்கள் குறியாக இருந்தன என்பதே கசப்பான உண்மை. தாயகப் போர் யாரும் எதிர்பாராத வகையில் முடக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல மீண்ட தமிழர் சமூகம் தாயக விடுதலைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான மார்க்கமொன்று குறித்துச் சிந்தித்தது.
அதன் விளைவாக உருவெடுத்ததே நாடு கடந்த அரசாங்கம் என்னும் உத்தியாகும். உலகில் இதுவரை முன்னுதாரணம் காட்ட முடியாத புதிய வகையான உத்தி குறித்த செய்திகள் வெளிவந்ததிலிருந்தே இது குறித்த விமர்சனங்களை பலரும் முன்வைத்து வந்தனர்.

குற்றங்காணல் என்னும் கண்ணாடியை அணிந்து கொண்டு இதனை அவதானித்து வந்த விமர்சகர்களின் செயற்பாடுகள் ஒரு புறமிருந்தாலும் தாயக விடிவிற்கான உகந்த மார்க்கம் இதுவே என உறுதியாகக் கண்ட தமிழ் ஆர்வலர்கள் புத்திஜீவிகள் ஆகியோரின் துணையுடன் முனைப்புப் பெற்ற இந்த நாடு கடந்த அரசாங்கம் மே 2ம் திகதி நடைபெற்ற தேர்தலுடன் உருவாக்கம் பெற்றது. இந்த நிலையில் நாடு கடந்த அரசாங்கம் என்பது சிங்கள தேசத்தின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

தமிழர்களின் அடுத்த உரிமைப் போர் வடிவத்தை முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்ற முனைப்புடன் சிங்கள தேசம் காய்களை நகர்த்தி வருகிறது.

விடுதலைப் புலிகளையும் அதனுடன் தொடர்புபட்ட புனர்வாழ்வுக் கழகம், உலகத் தமிழர் அமைப்பு போன்றவற்றை எவ்வாறு தடை செய்யும் உபாயங்கள் கைக்கொள்ளப்பட்டனவோ அதே உபாயங்களைப் பயன்படுத்தி இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும் செயலிழக்கச் செய்து சட்டவிரோதமான அமைப்பாக அறிவிக்க வைக்கும்படி புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் அதிகமுள்ள நாடுகளின் தூதரகங்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சிங்கள தேசத்தின் இந்தக் காய் நகர்த்தலை முறியடிக்க தமிழர் தரப்பு எவ்வாறு செயற்படப் போகிறது என்பதே இன்றுள்ள கேள்வி.

சிங்கள தேசத்தினால் முன்னெடுக்கப்படும் ஆபத்தைத் தெரிந்து கொண்டும் விட்டில் பூச்சிகளைப் போல அந்த ஆபத்தில் விழப் போகின்றோமா? அல்லது சிங்களத்திற்கிணையான அல்லது ஒரு படி மேலான இராஜதந்திரத்தைக் கையாண்டு இந்த ஆபத்திலிருந்து மீளப் போகின்றோமா என்பதே இன்றுள்ள கேள்வி?

ஆனாலும் அண்மைய நாட்களாக புலத்தில் இடம் பெறும் செயற்பாடுகள் ஆரோக்கியமான சமிக்ஞைகளைத் தரவில்லை என்பது கண்கூடு. நாடு கடந்த அரசுடன் தமிழீழக் கொடியையும் இணைத்து உருவாக்கப்பட்டு வரும் சர்ச்சை பலத்த சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

தமிழீழம் நோக்கிய எமது அடுத்த கட்ட நகர்விற்கு ஆதாரமாகவும் அச்சாணியாகவும் அமையப் போவது சர்வதேச மட்டத்தில் நாம் ஏற்படுத்திக் கொள்ளப் போகும் நட்புறவும் நம்பகத் தன்மையுமே என்பது அரசியல் அரிச்சுவடியை அறிந்த அனைவருக்குமே புரிந்திருக்கும். இந்த நிலையில் தொடர்ந்து சர்வதேசத்தின் சந்தேகப் பார்வையை தக்க வைக்கும் விதமான செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக அமையப் போவதில்லை.

அப்படியானால் தமிழீழ தேசியக் கொடியை நாங்கள் மறந்து விடுவது சரியானதா என்ற உணர்வுபூர்வமான கேள்வியொன்று இந்த இடத்தில் எழுவதும் இயல்பானதே. தமிழீழ இராணுவமான விடுதலைப் புலிகள் இயக்கமோ, ஈகைக்கும் தியாகத்திற்கும் இலக்கணம் வகுத்த மாவீரர்களின் மகத்தான செயற்பாடுகளோ எதுவித சர்வதேச உதவியுமின்றி தமிழீழ தாயகத்தில் நிலவிய நிர்வாகக் கட்டமைப்புகளோ எந்தவொரு தமிழனதும் நினைவுகளிலிருந்தும் அழிக்கப்படக் கூடியதல்ல. உலகில் கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இந்த நினைவுகளும் வீரம் செறிந்த வரலாறும் நினைவில் இருக்கத் தான் போகிறது.

ஆனாலும் கோசம் போட்டு கொடி பிடித்துத் தான் எம் தமிழ் மறவர்களை நினைவில் வைக்கும் அளவிற்கு தமிழர்கள் ஞாபக மறதி கொண்டவர்களோ நன்றி மறந்தவர்களோ அல்ல. போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனாலும் போராட்ட இலட்சியம் மாறாது என்ற தேசியத் தலைவரின் வார்த்தைக்கேற்ப நாம் எமது குறீயீட்டு அடையாளங்களுக்குத் தற்காலிக மௌனத்தைக் கொடுத்து விட்டு சாணக்கிய அரசியல் மூலம் சர்வதேசத் தலைவர்களை எம்மை நோக்கித் திரும்ப வைப்போம். எமது கருத்துக்களைச் செவிமடுப்பதற்கும் எம்மோடு ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதற்குமான சூழலை ஏற்படுத்துவோம்.

அவ்வாறு பேச்சுக்கள் நடைபெறும் போது அவர்கள் முன் வைப்பதற்கான எமது பக்க நியாயங்கள் தாராளமாகவே உள்ளன. இந்த நியாயங்கள் சர்வதேசம் தமது கண்ணோட்டத்தையும் கடந்த காலக் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தும். எங்கள் அரசியல் தலைமையையும் எமக்காக செயற்பட்ட நிறுவனங்களையும் தடை செய்தவர்களே தம் மீளப் பெறும் நிலையை ஏற்படுத்தும்.

தமிழர்கள் மட்டும் ஒன்று கூடி தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பிக்கும் நிலை மாறி சர்வதேச நாட்டுத் தலைவர்களும் எம் தமிழீழ தேசியக் கொடிக்கு தலை வணங்கி மரியாதை செய்யும் நிலை உருவாகும். அதற்காக உணர்வுகளுக்குக் கடிவாளம் போடுவோம்... சாணக்கிய அரசியலை முன்னெடுப்போம்... ஒட்டு மொத்த தமிழினத்தின் கனவை விரைவில் நனவாக்குவோம்...

மாண்ட வீரர் கனவு பலிக்க
மண்ணில் எம்மக்கள் நிமிர்ந்தே வாழ
மாநிலத் தலைவர் எம்மோடு இணைய
மதியுடன் எங்கள் பணியினைத் தொடர்வோம்

- நேரியன்

SOURCE: http://www.eelamweb.com