Tuesday, October 26, 2010

நந்திக்கடல் பகுதியில் சரணடைந்த போராளிகளை ஈவரக்கமின்றி சுட்டுக்கொன்று நிர்வானப்படுத்தி மகிழ்வடைந்த காடைய சிங்கள ராணுவத்தினர் வெளிவராத புகைப்படங்கள் ஈழதேசமூடாக வெளியிடிகிறோம்

0 comments
இறுதி
யுத்தத்தின் போது சிங்களப் படைகளுடன் போரிட்டு வீரகாவியமான போராளிகளினதும்
சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்ட போராளிகளை
நிவானப் படுத்தி சிங்கள ராணுவத்தினர் மகிழ்வடைவதை புகைப்படமூடாக
காணக்கூடியதாகவுள்ளது.




குறிப்பிட்ட சம்பவம் யுத்த இறுதி நாட்களில் நந்திக்கடல் பகுதியில்
நடைபெற்றுள்ளதோடு கடந்த வாரம் வெளிவந்த புகைப்பட ஆதாரத்தோடு இந்தப்
புகைப்படங்கள் ஒத்துப்போகின்றமை தெளிவாகிறது.


Sunday, October 24, 2010

துயிலும் இல்லங்களை இடித்து அரசபடைகளுக்கு வெற்றி தூபி கட்டுவது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது - நீல் பூனே

0 comments
அரச படைகள் போர் முடிவுற்றதும் போராளிகளின் கல்லறைகளை புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கினர். தம் போர்வீரர்களுக்கு அரசாங்கம் வெற்றி தூபிகளை தமிழர் பிரதேசங்களில் நிறுவிவருகின்றது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இப்படியான விடயங்கள் குடா நாட்டில் உள்ள 10 இலட்சம் மக்களையும் பாதித்துள்ளது. ஏன் இந்த வேலையை அரசாங்கம் செய்கின்றது என மனம் உடைந்துபோயுள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் கொழும்பு வதிவிட பிரதினிதியும் கனடா நாட்டு பிரகையுமாகிய நீல் பூனே.

உண்மையில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்தும் படைகளுக்கு வெற்றி சின்னங்களை கட்டுவதும் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்களிற்கு இடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் அளவு கோல் அல்ல எனவும் கூறியுள்ளார் பூனே.

மீண்டும் சிங்கள கடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் நூலகம்

0 comments


ஏ9 சாலை திறக்கப்பட்டதில் இருந்து தென்பகுதி உல்லாசப் பயணிகள் யாழ்க் குடாநாடு வருவது அதிகரித்துள்ளது. இதனால் பல போக்குவரத்து நெரிசல், கலாச்சாரச் சீரழிகள் ஏற்படும் நிலையில் நேற்று அவர்கள் அடாவடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலையில் யாழ். நூலகத்தை முற்றுகையிட்ட தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தாம் உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது.

இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதனால் நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர்.

இது தொடர்பான அறிவித்தல் பதாகைகள் நூலகத்தில் மாட்டப்பட்டிருந்தன. வழக்கமாக மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரைக்கும் பார்வையாளர்கள் நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட நேரத்தில் பெருந்தொகையான தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் நூலகத்திற்கு வந்திறங்கினர்.

36 பஸ்களில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கானவர்களும் தாம் நூலகத்திற்குள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றனர். ஆனால் அவர்களைக் காவலர்கள் உள்ளே நுழைய அனுமதிக்காததால் முறுகல் நிலை ஏற்பட்டது.

நேற்றைய கூட்டம் குறித்து அங்கு எழுதித் தொங்கவிடப்பட்டிருந்த பதாகைகளைக் கிழித்தெறிந்து சுற்றுலாப் பயணிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். நிலைமையைச் சமாளிக்க அருகில் இருந்த யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உயரதிகாரி உட்பட பொலிஸார் வந்தனர்.

ஆனால் அவர்களைப் பார்த்த அங்கிருந்த ஒருவர் ”நான் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வந்திருக்கிறேன். இதில் நீங்கள் தலையிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என மிரட்டினார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே பொலிஸார் பின்வாங்கிவிட்டனர். அங்கிருந்த இராணுவமும் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டது.

எவர் சொல்லையும் கேட்காத சுற்றுலாப் பயணிகள் விடாப்பிடியாக தாம் உள்ளே நுழைய வேண்டும் என்றனர். இவர்களுடன் நூலக நிர்வாகிகள் பேச்சு நடத்தியதோடு, பாதுகாப்புத் தரப்பினர் யாழ். மாநகர முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசினர். நிர்ப்பந்தங்களும் அழுத்தங்களும் அதிகரித்ததை அடுத்து மாலை 5.30 மணியளவில் தென்னிலங்கைவாசிகள் நூலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

pathivu

சிறீலங்கா அமைச்சரின் கடைத்தனத்தை கண்டு கதறி அழுதார் செஞ்சிலுவைச்சங்க அதிகாரி

0 comments

அக் 24, 2010
வன்னியின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை வழங்குவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் திட்டமிட்டிருந்தது.

400 உழவு இயந்திரங்களை கையளிக்கும் இந்த நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றபோது, அதில் தலையிட்ட சிறீலங்கா அமைச்சர் ஒருவர், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் தெரிவுசெய்த மக்களின் பட்டியலை பறித்து எறிந்ததுடன், தான் கொண்டுவந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு உழவு இயந்திரங்களை விநியோகம் செய்திருந்தார்.

சிறீலங்கா அமைச்சரின் இந்த அடாவடித்தனத்தால் அதிர்ச்சியும், வேதனையுமடைந்த அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் வவுனியா பிராந்தி அலுவலத்தின் தலைவர் மார்ய்சி லிமோனார் தனது வாகனத்திற்கு பின்னால் ஓடிச்சென்று கதறி அழுவதை படத்தில் காண்கிறீர்கள்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய தலைவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண தமிழ் மக்களின் வாழ்க்கையை ஒரு முறை எண்ணிப்பாருங்கள் என வவுனியா வாழ் தமிழ் மகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாம் அங்கு கொடுப்பதை வாங்கிக் கொண்டு கொத்தடிமைகளாக வாழ்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- ஈழம் ஈ நியூஸ்

Tuesday, October 5, 2010

October 5th, 2010 .விடுதலைப்புலிகள் மீதான தடைதீர்ப்பாயத்தில் பழ.நெடுமாறன் மனுதாக்கல் வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதாடினார்

0 comments
விடுதலைப்புலிகள் இயக்கத்தை சட்ட விரோத நடவடிக்கைள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய அரசு தடை செய்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இத்தடையை நீட்டிப்பதற்கு முன் தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தப்படுவது வழக்கம்.

அதைப் போல இம்முறை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 5#10#2010 அன்று காலையில் சென்னை மல்லிகை மாளிகையில் நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்கவேண்டுமென பழ.நெடுமாறன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வழக்கறிஞர் என். சந்திரசேகரன் பின்கண்ட விவாதங்களை முன்வைத்தார்.

“”பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழர் தேசிய இயக்கத்தைச் சட்ட விரோதமான அமைப்பு என்று கூறி 13#08#2002ஆம் ஆண்டு தமிழக அரசு தடைசெய்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்பு என்ற காரணத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது. மேலும் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி பொடா சட்டத்தின் கீழ் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கட்சியைச் சேர்ந்த மேலும் 4 பேரும் இதே காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டனர்.

புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி மேலும் சில வழக்குகளும் அவர் மீது தொடுக்கப்பட்டன.

பொடாச் சட்டத்தின் கீழ் நெடுமாறனையும் அவரது தோழர்களையும் கைதுசெய்து சிறையில் வைத்தது சட்டவிரோதமானது என பொடா மறு ஆய்வுக்குழு தீர்ப்பளித்ததின் பேரில் 18 மாதங்களுக்குப் பிறகு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற வழக்குகளிலும் அவ்வாறே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 1967ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறைமை ஆகியவற்றுக்கு அபாயம் நேரிடும் வகையில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக மட்டுமே. ஆனால் இந்தியாவின் இறைமையையும், பிரதேச ஒருமைப்பாட்டினையும் விடுதலைப் புலிகள் இயக்கம் எப்போதும் மதித்தே வந்திருக்கிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை பெறவேண்டும் என்பதுதான் அந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.

1985 ஆம் ஆண்டு திம்புவில் இந்தியாவின் முயற்சியிலும் மத்தியஸ்தத்திலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகளும் மற்றும் உள்ள தமிழர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து கீழ்க்கண்டவற்றைத் தங்களது நோக்கமாக அறிவித்தன.

1. இலங்கையில் உள்ள தமிழர்களைத் தனித்துவம் வாய்ந்த தேசிய இனமாக அங்கீகரிக்கவேண்டும்.
2. இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் வடக்கு#கிழக்கு மாநிலம் தமிழர்களின் பூர்வீகமான தாயகமாக ஏற்கப்படவேண்டும்.
3. இலங்கையில் உள்ள தமிழ்த் தேசிய இனத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
4. மலையகத் தமிழர்கள் உள்பட இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமையும் மற்ற அடிப்படை உரிமைகளும் உண்டு என்பது ஏற்கப்படவேண்டும்.

இந்திய அரசின் பிரதிநிதியின் முன்னால் விடுதலைப்புலிகளும் மற்ற தமிழர் அமைப்புகளும் இணைந்து முன்வைத்த அடிப்படை கோரிக்கைகள் இவைகள்தான். இவற்றின் மூலம் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் நோக்கம் எதுவும் விடுதலைப்புலிகளுக்கு அறவே இல்லை என்பது தெளிவாகிறது. இந்தியாவின் இறைமைக்கோ, தேசிய ஒருமைப்பாட்டுக்கோ ஊறு விளைவிக்கும் வகையில் விடுதலைப்புலிகளின் கொள்கைகள் எதுவும் அமைந்திருக்கவில்லை என்பதும் இதன் மூலம் பெறப்படுகிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அதற்கு ஆயத்தம் செய்தல், அதை ஊக்குவித்தல் அல்லது செயற்படுதல் போன்றவற்றில் ஈடுபடும் அமைப்புதான் பயங்கரவாத அமைப்பாகும். ஆனால் இந்தியாவில் விடுதலைப்புலிகள் அத்தகைய நடவடிக்கை எதிலும் ஈடுபட்டதில்லை. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் இந்தக் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தது தவறு என்றத் தீர்ப்பினை அளித்தது. இதற்கெதிராக இந்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விடுதலைப்புலிகள் இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் எத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள் என்பதற்காக எந்த நீதிமன்றத்திலும் இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதில்லை.

2009ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 30,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை உலக நாடுகள் பலவும் வன்மையாகக் கண்டித்தன. தமிழ்நாட்டிலும் மக்கள் கொதித்தெழுந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் எந்த இடத்திலும் தமிழர்களாலோ அல்லது விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களாலோ எத்தகைய வன்முறையும் நடைபெறவில்லை. மாறாக தமிழ்நாட்டில் 15 பேர் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர்.

விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டத் தடையை இந்திய அரசும் தமிழக அரசும் காலம் காலமாக அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும் எழுத்துரிமை, பேச்சுரிமை ஆகியவற்றைத் பறிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக தடா, பொடா, தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி அடிப்படை சனநாயக உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருகிறார்கள்.

செங்கல்பட்டு, புழல் ஆகிய உயர் பாதுகாப்புச் சிறைகளில் ஈழத் தமிழ் அகதிகள் பலர் சட்டவிரோதமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை புலிகள் என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இவர்களில் சிலர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் முடிவடையாமல் நீண்டுகொண்டே போகின்றன.

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டி பழ.நெடுமாறனின் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அவர் நடத்திய பல மாநாடுகள், கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் சென்று வழக்காடி தடையை செல்லாததாக்கி மாநாடுகளையும் மற்ற நிகழ்ச்சிகளையும் நடத்தும் நிலை இன்னமும் தொடர்கிறது.

பழ.நெடுமாறனின் பேச்சுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதின் மூலம் அவர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதன் மூலம் பழ.நெடுமாறனின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படும் எனவே பாதிக்கப்பட்ட நபர் என்கிற முறையில் இந்தத் தீர்ப்பாயத்தின் முன் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் அவரது மனுவைச் சமர்ப்பிக்க உரிமை உண்டு.

அன்புள்ள

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
http://meenakam.com/?p=9844

சிறையின் சீமெந்துத் தரையில் இரவுகளைக் கழிக்கும் சிறிலங்கா போரின் கதாநாயகன் பொன்சேகா

0 comments
ஒரு காலம் விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் படையினரை வழிநடாத்திய சிறிலங்கா போரின் கதாநாயகன் பொன்சேகா, தனக்கு அளவில்லாத கைதி உடையுடன் சிறையில் சீமெந்துத் தரையில் பாயில் படுத்து உறங்குகிறார்.
இந்தத் தீர்ப்புத் தொடர்பாக அதிபர் மகிந்த ராஜபக்ச தனது அங்கீகாரத்தை வழங்கியதைத் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பொன்சேகா வியாழனன்று வழமையான சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையை ஆதாரம் காட்டி ’டெக்கன் கரால்ட்’ [Deccan Herald] என்ற இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"தற்போது கைதி இல - 0/22032 உடைய பொன்சேகா, தனது தேசிய உடையிலிருந்து வழமையான சிறைக் கைதிகளுக்குரிய உடைக்கு மாறி, சீமெந்துத் தரையில் பாயில் படுத்துறங்கினார். அவருக்கு ஒரு தலையணை மட்டும் வழங்கப்பட்டது" என சண்டே ரைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.
59 வயதுடைய இந்த போர் கதாநாயகன் இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை அதிபர் ராஜபக்ச உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, கடற்படையத் தலைமையகத்திலிருந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
செப்ரெம்பர் 17 அன்று இரண்டாவது நீதிமன்ற அமர்வு இடம்பெற்றபோது, எதிர்க்கட்சியான சனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா, ஆயுதக் கொள்வனவின்போது கேள்வி அறிவித்தல் நடைமுறைகளை மீறியிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 3 வருடம்வரை சிறைத்தண்டனை விதிக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இராணுவ நீதிமன்றம் 3 வருடம் சிறைத்தண்டனையை பொன்சேகாவிற்கு விதித்திருந்தபோதும், சிறிலங்கா அதிபர் அதனை 30 மாதங்களாகக் குறைத்துள்ளார்.
”அதி உயர் பாதுகாப்பு நிறைந்த வெலிக்கட சிறையின் எஸ் பிரிவிற்கு சரத் பொன்சேகா மாற்றப்பட்டபோது வியாழக்கிழமை நள்ளிரவாகியிருந்தது” என சண்டே ரைம்ஸ் தெரிவிக்கிறது.
வெள்ளியன்று காலை 5 மணிக்கு ஏனைய தனது சகாக்களைப்போலவே எழுந்த பொன்சேகா அவரது அறையில் ஒரு கழிப்பறை இருந்தபோதும் அதன் நீர்ப் பம்பி வேலைசெய்யவில்லை என முறையிட்டார். ”அவர் தண்ணீருக்காக கட்டடத்திற்கு வெளியே செல்லவேண்டியிருந்தது. அங்கு கழுவுவதற்கு அல்லது குளிப்பதற்கு அவர் வாளியில் நீரை எடுக்கவேண்டும்.
பின்னர் காலை உணவைப் பெறுவதற்காக ஏனையவர்களுடன் அவரும் வெள்ளித் தட்டுடனும் மறுகையில் குவளையுடனும் காத்து நின்றார்.
”சோறும் சம்பலுமே காலை உணவு. சிறையின் வழமையான நடவடிக்கையாக ஒரு வைத்தியர் அவரைப் பரிசோதித்துள்ளார். தையல்காரர் அவருக்கு சரியான அளவில் உடையை வழங்குவதற்காக அளவெடுத்தனர்” என அப்பத்திரிகை தெரிவிக்கிறது.
”வெள்ளியன்று மதிய உணவுக்கு மீண்டும் வரிசையில் வந்துநின்றார். சோறு, நீர்ப் பூசணிக்காய், பருப்பு மற்றும் சிறிய மீன்துண்டுடன் சிறிதளவு குழம்பு ஆகியன வழங்கப்பட்டது. இதன் பின் உடனடியாக அவர் தனது அறைக்குத் திரும்பிவிட்டார்.

சரணடையும் புலிகளை சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்புச் செயலர் உத்தரவு பிறப்பித்தார் - பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் ஆசிரியர் சாட்சி

0 comments
திகதி:05.10.2010
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருகின்ற விடுதலைப்புலித் தலைவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் நேற்று நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
வன்னி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலித் தலைவர்களைச் சுட்டுக் கொன்றமை குறித்து சரத்பொன்சேகா தெரிவித்த கருத்துத் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை இடம்பெற்றது. இவ் வழக்கு விசாரணைக்கு சரத் பொன்சேகா அழைத்து வரப்பட்டிருந்தார்.
நீதவான் தீபாலி விஜயசுந்தர, டபிள்யூ.டி.எம்.பி.வாரவெல மற்றும் எம்.இசாட் ரசீம் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் சாட்சியமளித்தார்.அந்தச் சாட்சியில் அவர் பின் வருமாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அத்தேர்தலில் வேட்பாளரான சரத்பொன்சேகாவின் வாழ்க்கைக் குறிப்பைத் தொகுப்பதற்காக அவரைச் செவ்விகாணத் திட்டமிட்டேன்.அச் செவ்வியின் இறுதியில், போரின் கடைசிக் கட்டத்தில் என்ன நடந்தது? எனக் கேள்வி ஒன்றைக் கேட்டேன்.
அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் குழுவொன்று சரணடைய வருவதாகவும் அவர்களைச் சரணடைய விடாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்குப் பாதுகாப்புச் செயலாளர் தொலை பேசி மூலம் உத்தர விட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்தது எனப் பொன்சேகா கூறினார்.அது பரபரப்பான தகவல் என்பதால் அதை அவ்வாறே சண்டேலீடர் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக்குவதற்குத் தீர்மானித்தேன்.
அச் செய்தியை வெளியிடுவதற்கு முதல் நாள் சரத் பொன்சேகாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்துத் தெரிவித்தேன். அவர் பிரச்சினையில்லை என்றார்.இவ் விடயம் குறித்துப் பிரிகேடியர் சவீந்திர சில்வா மற்றும் அப்போதைய இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் இச் சம்பவத்தை நிராகரித்தனர் என்றார்.இவ் வழக்கு மீண்டும் நாளை விசாரிக்கப்படவுள்ளது.

லெப்.கேணல் குமரப்பா - லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

0 comments
திகதி: 05.10.2010
1987ம் ஆண்டு இலங்கை, இந்திய சமாதான உடன்படிக்கை காலத்தில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கடற்கண்காணிப்பு பணியில் விடுதலைப்புலிகளின் “கடற்புறா” ரோந்துப்படகு ஈடுபட்டிருந்த போது இந்திய கடற்படையினால் வலுகட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட வேளையில் இலங்கை - இந்திய கூட்டுச்சதியை முறியடித்து பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா - லெப்.கேணல் புலேந்திரன்,அப்துல்லா, ரகு, நளன், ஆனந்தகுமார், மிரேஸ், அன்பழகன், ரெஜினோல்ட, பழனி, கரன், தவக்குமார் ஆகிய வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இம் மாவீரர்களுக்கு எமது வீர வீரவணக்கம்

போர்க் குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் - ஒபாமா நிர்வாகம் தெரிவிப்பு

0 comments
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பிலான உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள் ளது.

பராக் ஒபாமாவின் இந்தச் செய்தியை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளின்டன், அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் றெபேட் ஓ பிளேக் ஊடாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகத் ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உதவி இராஜாங்கச் செய லாளர் றெபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளதாவது,கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு இதயசுத்தியுடன் தமது விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதையே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகக் குழு விரும்புகின்றது.

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் களையப்படுவதற்கு, முழுமையான விசாரணைகள் இடமளிக்கலாம். இந்த நிலையில் இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
வலம்புரி

சரத் பொன்சேகாவுக்கு சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர தொழில்

0 comments
சரத் பொன்சேகாவுக்கு சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர தொழில்
ஸ்ரீலங்காவின் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் ஆயுத ஊழல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்காக 30 மாத கால கடூழிய சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வெலிக்கடை சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர தொழில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவயின சிங்கள செய்திதாள் இந்த தகவலை வெலிக்கடை சிறைச்சாலையின் பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவரை மேற்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

இதன் அடிப்படையில் சரத் பொன்சேகா, சிறைச்சாலை அச்சகத்தில் பணியாற்ற பணிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமக்கு எதிரான தீர்ப்பை ஆட்சேபித்துள்ள சரத் பொன்சேகா, இந்த பணிகளை செய்ய மறுப்பாராக இருந்தால் இதனைவிட கடுமையான பணிகள் அவர் மீது சுமத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
pathivu

இலங்கையில் 160 ஆயிரம்பேர் கால்களை இழந்துள்ளனர்

0 comments
போர் முடிந்து 16 மாதங்கள் கடந்திருக்கும் நிலையிலும் கால்களை இழந்த ஆயிரக்கணக்கானோர் உதவிக்காகக் காத்திருக்கின்றனர்.
இலங்கையில் கால் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 60 ஆயிரம் ஆகும். இவர்களில் பலர் கண்ணி வெடிகள், வெடிபொருட்களினால் ஊனமுற்றவர்களாகும். பொருத்தமான செயற்கை அவயவங்கள் பற்றாக்குறையாக இருப்பதனால் 90 சதவீதமானவர்கள் இதற்காகக் காத்திருப்பதாக கம்போடியா நம்பிக்கையக அமைப்பான செயற்கை அவயவ சிகிச்சைக்கான இலங்கை பாடசாலை கூறுகிறது.

இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள்.

யுத்தத்தினால் நான் அவயவங்களை இழந்தேன். இப்போதும் துன்பப்படுகிறேன் என்று முல்லைத் தீவைச் சேர்ந்த ஜெகநாதன் சிவகுமாரன் (வயது 25) ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். அவர் தனது இரு கால்களையும் ஷெல் தாக்குதலில் இழந்துள்ளார். 2009 இன் முற்பகுதியில் அவர் கால்களை இழந்த போதும் இப்போதும் செயற்கைக்கால் இல்லாமலேயே காணப்படுகிறார். காசுக்காக வீதியில் பிச்சையெடுக்கும் விலங்கைப்போல நான் வாழ்கிறேன் என்று அவர் கூறினார்.

செயற்கைக்கால் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிடைக்கின்றன. உதவி வழங்குவோரின் ஆதரவு மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் பற்றாக்குறையினால் இவை போதியளவு கிடைக்காத நிலைமை காணப்படுவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிலையம் (யூ.எஸ்.எய்ட்.) தெரிவித்தது. இந்தத் துறையில் சேவை வழங்கக்கூடியவர்கள் போதியளவில் இல்லை. நாட்டுக்குத் தேவையான செயற்கைக்கால் தயாரிக்கக்கூடியவர்கள் அதிகளவுக்கு இல்லையென ஐவன் ராசையா கூறியுள்ளார். இவர் யூ.எஸ்.எய்ட்.டின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். போதியளவு வசதிகள் பயிற்சி பெற்றவர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் இச்சேவையை வழங்கக்கூடிய போதியளவிலான ஆற்றல் அரசாங்கத்திடம் இல்லையென அவர் கூறியுள்ளார். இந்த விடயம் வடபகுதியில் முக்கியமானதாக காணப்படுகிறது. இலங்கையில் இதுவே பாரிய கவலையாக இருப்பதாக சமூக சேவைகள் திணைக்களத்தின் பிரதிநிதி ரவீந்திர சொலமன் கூறியுள்ளார்.

பின்தங்கிய பகுதிகளில் வளங்கள் பாரிய பிரச்சினையாக உள்ளன. சிகிச்சையளிப்போர் போதியளவில் இல்லை. இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டது. இந்தத் துறையில் அதிகாரிகளுக்கும் தன்னார்வ தொண்டர்களுக்கும் நாம் பயிற்சியளித்து வருகிறோம் என்று சொலமன் கூறினார்.

5 வருடங்களுக்குள் சகல பொது இடங்களுக்கும் ஊனமுற்றவர்கள் செல்லக்கூடியதாக இருக்குமென அரசாங்கம் கூறுகிறது.

உடலுக்கு இசைவான பொருட்கள் மிகவும் விலையுயர்ந்தவையாக உள்ளன. அவை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியப் பொருட்கள் செலவு கூடியவை அல்ல. ஆனால், நோயாளிக்குப் பொருத்தமானவையாக இருப்பதில்லை என்று பணியாளரான லலித் கங்கேவா ஐ.ஆர்.ஐ.என்.க்குக் கூறியுள்ளார். உதாரணமாக அமெரிக்காவில் தயாரிக்கப்படும் செயற்கைக் கால் உபகரணம் 5 ஆயிரம்12 ஆயிரம் டொலர்களுக்கு இடைப்பட்டதாக உள்ளது. வருடாந்தம் 4500 டொலரை சராசரியாகச் சம்பாதிக்கும் இலங்கையர்கள் இவற்றைப்பெற்றுக்கொள்வது கடினமான விடயமாகும். அத்துடன், இந்த வருமானமானது நகர்ப்புறத்தில் உள்ளவர்களுக்கம் கிராமப் புறத்தில் உள்ளவர்களுக்கும் ஒரே அளவானதாக இருப்பதில்லை.

2007 இல் கண்ணிவெடி தனது வலது காலை இழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சங்கர் கமலராஜன் (வயது 41) காட்டிற்குள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்த போது அவர் காளை இழந்தார். அவரால் செயற்கைக் காலை பெற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த பெப்ரவரி மாதமே உள்ளூர் சமூகக் குழுவொன்று அவருக்கு அனுசரணை வழங்கியிருந்தது. உதவியளிப்பவர்கள் இல்லாவிடில் இதனைப் பெற்றுக்கொள்வது முடியாத காரியமாகவுள்ளது. 2 வருடங்களாக நான் பிச்சைக்காரனாக இருந்து வருகிறேன். எனது நிலைமையில் என்னால் எதனையுமே செய்ய முடியவில்லை. உணவில்லாமல் நான் இருந்த நாட்களும் உள்ளன. இப்போது சமாளித்துக்கொண்டு புதிய வாழ்வை ஆரம்பிக்க முயற்சி செய்கிறேன் என்று கமலராஜன் தெரிவித்தார்.

Eelanatham.Net

கே.பி. தயா மாஸ்ரர், கருணா சொகுசு வாழ்க்கை நாட்டின் போர்த்தளபதிக்கு சோறும் சம்பலும் - ஐ. தே. கட்சி குமுறல்

0 comments
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பவிருப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க பொன்சேகாவை விடுவிக்கும் போராட்டத்தை ஏனைய சகல கட்சிகளுடனும் இணைந்து முன்னெடுக்க கட்சி தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட கருணா, கே.பி.,தயாமாஸ்ரர் போன்றோர் சுதந்திரமாக சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டைக் காப்பாற்றிய தளபதி சிறையில் சோறும் தேங்காய்ச் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் செய்தியாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பது தொடர்பில் நாட்டில் பல்வேறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திருத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கமும் ஜனாதிபதியும் ஜனநாயக பாதையிலிருந்து விலகிச் செயற்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகவே காணமுடிகின்றது.

நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து காப்பாற்றிய இராணுவத் தளபதி இன்று சிறையில் சோறும் தேங்காய்ச் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். பௌத்த மகா சங்கத்தினரையும் அப்பாவி சிங்கள, முஸ்லிம், மக்களையும் கென்றுகுவித்த கருணா, கே.பி., தயாமாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் போன்றோர் சுதந்திரமாக விடப்பட்டிருப்பதோடு அவர்கள் சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரிப்பார் என்று இந்த நாட்டில் வாழும் எந்தவொரு பிரஜையும் எதிர்பார்க்கவில்லை. இந்தளவுக்கு சர்வாதிகாரப் போக்கில் அவர் நடந்து கொள்வார் என்று எவருமே நம்பவில்லை. அனைவருமே ஜனாதிபதி தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார். மன்னிப்பார் என்றே எதிர்பார்த்தனர். ஜனாதிபதியின் இந்த முடிவை நாட்டின் 5/6 பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர்.

போதாக்குறைக்கு இந்தத் தீர்ப்புக்கு எதிராகச் செயற்படுவோர் மீது அடக்கு முறையை பிரயோகிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. துண்டுப் பிரசுரம் விநியோகித்தால் கைது, சுவரொட்டிகள் ஒட்டினால் பொலிஸார் தாக்குதல் இதுதான் மகிந்த ஆட்சியின் ஜனநாயகம்.

ஆட்சியாளரின் இந்த சர்வாதிகார அடக்கு முறைகளைக் கண்டு நாம் ஒதுங்கப் போவதில்லை. மக்கள் பலத்தை அணிதிரட்டி நாடு பூராவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மத வழிபாடுகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம். அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் ஒன்றுபட்டு போராட்டத்திலீடுபடுவதென ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள 20 பிரதான மத வழிபாட்டுத் தலங்களில் சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக பூஜை வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் நடத்தவிருக்கின்றோம். தொகுதிகள், கிராமங்கள் தோறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பவிருக்கின்றார். அதில் தேசத்தைக் காப்பாற்றிய தளபதியை குற்றவாளியாக்கி சிறையில் தள்ளியிருப்பதைக் கண்டித்து அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தவிருக்கின்றார் எனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

தலவாக்கலையில் தொடரூந்து நிலையத்தில் வெடிப்பொருள் மீட்பு

0 comments
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010
நேற்று முற்பகல் 11.15 அளவில் தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் குப்பைகள் வீசப்படும் இடத்திலிருந்து வெடிமருந்துப் பை ஒன்று கைப்பற்றுபட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பை 14 கிலோ கிராம் நிறையினைக் கொண்டதெனவும், பையினுள் 25 அடி நீளம் கொண்ட 40 நூல் பந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும், கைப்பற்றப்பட்ட பை தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈழ நாதம்