Saturday, February 26, 2011

அடிப்படை வசதிகளின்றி கிளிநொச்சி மத்திய கல்லூரி!

0 comments
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஒரேயொரு மத்திய கல்லூரியான கிளிநொச்சி மத்திய கல்லூரி இதுவரை கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படாத காரணத்தால் எதுவித அபிவிருத்தியும் இன்றி சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது என கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் குடியிருந்த 28 குடும்பங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படாமல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியுள்ளன. இதன் காரணமாகவே இக்கல்லூரி கல்வி திணைக்களத்திடம் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இருந்தும் இக்கல்லூரியில் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றிக்காணப்படுகிறது. இயற்கை கடன்களைக் கழிக்கக்கூட இந்தப் பாடசாலையில் எதுவித வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments: