Saturday, February 26, 2011

வடக்கில் வறுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழர் சமூகம்: உலோகங்களை விற்பதற்காக வெடிபொருட்களை தேடி ஆபத்தில் மாட்டும் பரிதாபம்

0 comments
வடக்கில் உலோகங்களை விற்பதற்காக வறியவர்கள் ஆபத்தான வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய முனைவதாக கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சுவிஸ் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சுவிஸ் பவுண்டேசன் என்ற அமைப்பின் இலங்கைக்கான முகாமையாளர் நைஜல் றொபின்சன் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில்

வடக்கில் அண்மையில் மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட பல பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் உள்ளன. இவற்றை வறியவர்கள் சிலர் உலோகத்தை விற்பதற்காக தேடுகின்றனர். இந்த வெடிபொருட்களை அவர்கள் செயலிழக்கச் செய்யும் போது ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

விடுதலைப் புலிகள் மறுசுழற்சி செய்யத்தக்க வெடிபொருட்களை பயன்படுத்தி உள்ளூரில் கண்ணிவெடிகளைத் தயார் செய்துள்ளனர்.இவற்றை அகற்றுவதற்கு விரைவில் இளம் தமிழ் பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

பெரியதம்பனை கிராமத்தில் சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் அமைப்பினால் 2311 மிதிவெடிகள், 18 டாங்கி எதிர்ப்புக் கண்ணிவெடிகள், 216 வெடிக்காத குண்டுகள் மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

பெரியதம்பனை தொடக்கம் ஓமந்தை வரையில் விடுதலைப் புலிகள் புதைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் 18 மாதங்கள் பிடிக்கும்.� என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments: