Friday, April 23, 2010

இந்தோனேசியா அரசினால் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்கள் சிறையில்: ஏ.பி.சி

0 comments

இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து இந்தனேசியா அரசியால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்கள் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இந்தோனேசியா துறைமுகத்தில் தங்கியிருந்த ஈழத்தமிழ் மக்களை இந்தோனேசியா அரசு சில வாக்குறுதிகளை வழங்கி அழைத்துச் சென்றிருந்தது. ஆனால் அவர்கள் தற்போது சிறை போன்ற தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மெர்க் துறைமுகத்தில் உள்ள 150 மேற்பட்ட தமிழ் மக்கள் பேரூந்துகளில் ஏற்றப்பட்டு ஜகார்த்தாவிற்கு அண்மையாக உள்ள பிரதான விமான நிலையப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் தாம் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்த இருவர் எமது நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா அரசு தெரிவித்தது போல் அல்லாது அவர்கள் வழங்கிய தங்குமிடம் தடுப்பு முகாம் போன்று உள்ளது. ஒரு பெரிய அறையில் 45 மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர், குடும்பத்தில் உள்ள ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

குளிப்பதற்காக அவர்கள் தரும் நீர் மஞ்சள் நிறமாக உள்ளதுடன், செல்லிட தொலைபேசிகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசியா அரசு இவர்களை கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8444&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

0 comments: