Friday, April 23, 2010

ஊடகவியலாளர்கள் படுகொலை : தண்டனை வழங்காத நாடுகளின் பட்டியலில் சிறீலங்கா

0 comments

பெருமளவான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட மற்றும் குற்றத்தை மேற்கொண்டவர்கள் தப்பித்த நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க்கை தளமாக கொண்ட ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

அதிகளவில் ஊடகவயலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளை மேற்கொண்டவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் உள்ளடங்கியுள்ளது.

ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அரசுகளுக்கு நாம் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசுகளும் எமக்கு உறுதிமொழிகளை வழங்கி வருகின்றன. ஆனால் அரசுகள் தமது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை இந்த இந்த வன்முறைகளை நிறுத்த முடியாது.

2000 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளை நாம் கருத்தில் எடுத்துள்ளோம். ஐந்துக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததை நாம் குறைந்த பட்ச அளவீடாக கணிப்பிட்டுள்ளோம்.

இந்த வருடம் நாம் 12 நாடுகளை பட்டியலிட்டுள்ளோம்.

ஈராக்: 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலையிட்டதில் இருந்து 88 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், ஆனால் எவரும் தண்டிக்கப்படவில்லை.

சிறீலங்கா: 10 ஊடகவிலலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் தண்டிக்கப்டவில்லை.

சோமாலியா: 9 ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

பிலிப்பைன்ஸ்: நவம்பர் மாதம் அங்கு 30 ஊடகவிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

கொலம்பியா: 13 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆப்கானிஸ்த்தான்: 7 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

நேபாளம்: 6 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ரஸ்யா: 18 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

மெக்சிக்கோ: 09 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

பாகிஸ்த்தான்: 12 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

பங்களாதேசம்: 7 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தியா: 7 13 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8445&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

0 comments: