Saturday, April 24, 2010

நான் இருக்கும் வரை சிதம்பரம் சிவகங்கையை மறந்துவிட வேண்டும்:சீமான்

0 comments

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.



பின்னர் பொதுக்கூட்டமாக மாறியது இந்த ஆர்ப்பாட்டம். பொதுக்கூட்டத்தில் சீமான்,

’’இனி எந்த காலத்திலும் சிதம்பரம் சிவகங்கையை ஜெயிக்க முடியாது. நான் இருக்கும் வரை சிதம்பரம் சிவகங்கையை மறந்துவிட வேண்டியதுதான்.


கனடாவில் என்னை திருப்பி அனுப்பும் போது ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறாயா என்று சீக்கியன் கேட்டான்.



நியாயப்படுத்தவில்லை அமைதிப்படை என்ற பெயரில் என் உறவுகளை சீரழிக்க அனுப்பியவர் என்றுதான் கூறுகிறேன் என்று பதிலளித்துவிட்டு, இந்திராகாந்தி கொலையை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா என்று சீக்கியனிடம் கேட்டேன்.அமைதியாகிவிட்டான் அந்த சீக்கியன்.

இது எல்லாமே ப.சிதம்பரத்திற்கு தெரியாமலா நடந்தது. காங்கிரஸ் கட்சியை அம்பலத்துவதே என் நோக்கமும் அதுவே தமிழின விடுதலையாகும்.



என்னை சிறையில் அடைத்தால் கைதிகள் எல்லோரையும் நாம் தமிழர்கள் ஆக்கிவிடுவேன். இன்னும் 2 ஆண்டுகளில் தமிழர்கள் அனைவரையும் நாம் தமிழர்கள் ஆக்குவோம்’’என்று பேசினார்

0 comments: