Wednesday, December 15, 2010

ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று ( 1995 திசம்பர் 15)

0 comments
இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார்.

இவ்வகையான சாவுகள் வரவேற்கப்படவேண்டியவையல்ல; போற்றப்பட வேண்டியவையுமல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை, நிறுத்தப்படவேண்டியவை.

இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய், பயன்பாடற்றதொரு சாவாய் பார்க்கும் நிலையே இருந்தது.

இம்மரணத்தைக் குறித்து தோழர் தியாகு ‘இனி’ என்ற பத்திரிகையில் எழுதிய பத்தி ஞாபகம் வருகிறது.“சாகச்செய்வானைச் சாகச்செய்யாமல் சாகின்றாய் தமிழா” என்ற கவிஞனொருவனின் வரிகளை மகுடமாக்கி எழுதப்பட்ட அப்பத்தி இவ்வகையான செயல்களைக் கண்டித்தது. எம் நிலைப்பாடும் அதுவே.

உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவோம் ..

பதிவு : பூராயம் வன்னியன்

0 comments: