Monday, December 20, 2010

புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

0 comments
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான முறையில் இயங்கி வரும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திபடுத்தும் வகையிலும், பாதுகாப்பு படையினருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வரும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சினால் இந்த விசாரணைங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து தமிழ்,சிங்களம்,மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்படும் குறித்த இணைய தளங்களினால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த இணைய தளங்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது யார்? இணைய தளங்களை செயற்படுத்துவது யார்? இவர்களுக்கும் சர்வதேச புலிகள் வலையமைப்பிற்கும் காணப்படும் தொடர்பு என்ன போன்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக பத்திரிகை தனது பிரதான செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.

விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் சட்டவிரோதமாக செயற்படுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

sankamam.com

0 comments: