Monday, December 13, 2010

தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங்கள தேசிய கீதம் கனேடிய இணையத்தளம் கருத்து..

0 comments
தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங்கள தேசிய கீதம் - கனேடிய இணையத்தளம் கருத்து..!

[ பிரசுரித்த திகதி : 2010-12-13 05:34:19 AM GMT ]

இலங்கையின் தேசிய கீதம் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை, சிறுபான்மை மக்களான தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற பெரும்பான்மை அரசாங்கத்தின் வெறித்தனம் என கனேடிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன், ஜனநாயக இலங்கையில், பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பிரித்தானியாவில் பல்வேறு அவமானங்களின் பின்னர், இலங்கை வந்து நடத்திய முதலாவது அமைச்சரவை மாநாட்டின்போது இந்த தீர்மானத்தை அறிவித்தார்
.
இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியதாக த சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் இது கடந்த 1948-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4-ம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், சிறுபான்மை மக்களான தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற பெரும்பான்மை அரசாங்கத்தின் வெறித்தனம் என இதுவென அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் யுத்தம் நிறைவடைந்து தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகள் பேரம் பேசும் சக்தியை இழந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய கீதம் தனி சிங்களமொழியில் மாத்திரம் இசைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ள நிலையில், அது சர்வதேச ரீதியாக கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார். அமைச்சர்களான ராஜித சேனாரத்னவும், வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும்படி சட்டம் கொண்டு வருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக் கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்தி வைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினார்.

0 comments: