Saturday, May 8, 2010

முத்துக்குமாருக்கு ஜாமீன் - சீமான் மாலை அணிவித்து வரவேற்பு

0 comments
முத்துக்குமாருக்கு ஜாமீன் - சீமான் மாலை அணிவித்து வரவேற்பு
திகதி: 07.05.2010 // தமிழீழம்
நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், முன்பு
தமிழர் மீட்சி படையில் இருந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக
இருந்தார் என்றும் அவர்களுக்கு ஆயுதம் கடத்தினார் என்றும், தமிழர்களுக்கு
எதிராக நடந்த போரின் போது தமிழர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்தார்
என்றும் முத்துக்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி தஞ்சாவூரில் நடந்த நாம் தமிழர்
இயக்கத்தின் கொடி அறிமுக கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய அவரை,
இரவு 11 மணிக்கு கந்தக்கோட்டை அருகே பின் தொடர்ந்து வந்த சென்னை
காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் முத்துக்குமார் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த
நீதிபதி நேற்று முத்துக்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை நேற்று (06.05.2010) நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர்
சீமான், வழக்கறிஞர் புகழேந்தி இருவரும் புழல் சிறையில் கொண்டு சென்று
சமர்ப்பித்தனர்.

இதையடுத்து சிறை அதிகாரிகளின் ஆய்விற்கு பின்னர் முத்துக்குமார் விடுதலை
செய்யப்பட்டார். சிறை வாசலில் நின்றிருந்த சீமான், தமிழ் முழக்கம் சாகுல்
அமீது, நாம் தமிழர் இயக்கத்தின் பிரமுகர்கள் ராஜா, ராஜீவ்காந்தி, அதியமான்
மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினர் முத்துக்குமாருக்கு மாலை அணிவித்து
வரவேற்றனர்.
http://www.sankathi....x.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8737&cntnt01origid=53&cntnt01returnid=51

0 comments: