Sunday, October 24, 2010

மீண்டும் சிங்கள கடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் நூலகம்

0 comments


ஏ9 சாலை திறக்கப்பட்டதில் இருந்து தென்பகுதி உல்லாசப் பயணிகள் யாழ்க் குடாநாடு வருவது அதிகரித்துள்ளது. இதனால் பல போக்குவரத்து நெரிசல், கலாச்சாரச் சீரழிகள் ஏற்படும் நிலையில் நேற்று அவர்கள் அடாவடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலையில் யாழ். நூலகத்தை முற்றுகையிட்ட தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தாம் உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது.

இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதனால் நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர்.

இது தொடர்பான அறிவித்தல் பதாகைகள் நூலகத்தில் மாட்டப்பட்டிருந்தன. வழக்கமாக மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரைக்கும் பார்வையாளர்கள் நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட நேரத்தில் பெருந்தொகையான தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் நூலகத்திற்கு வந்திறங்கினர்.

36 பஸ்களில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கானவர்களும் தாம் நூலகத்திற்குள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றனர். ஆனால் அவர்களைக் காவலர்கள் உள்ளே நுழைய அனுமதிக்காததால் முறுகல் நிலை ஏற்பட்டது.

நேற்றைய கூட்டம் குறித்து அங்கு எழுதித் தொங்கவிடப்பட்டிருந்த பதாகைகளைக் கிழித்தெறிந்து சுற்றுலாப் பயணிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். நிலைமையைச் சமாளிக்க அருகில் இருந்த யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உயரதிகாரி உட்பட பொலிஸார் வந்தனர்.

ஆனால் அவர்களைப் பார்த்த அங்கிருந்த ஒருவர் ”நான் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வந்திருக்கிறேன். இதில் நீங்கள் தலையிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என மிரட்டினார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே பொலிஸார் பின்வாங்கிவிட்டனர். அங்கிருந்த இராணுவமும் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டது.

எவர் சொல்லையும் கேட்காத சுற்றுலாப் பயணிகள் விடாப்பிடியாக தாம் உள்ளே நுழைய வேண்டும் என்றனர். இவர்களுடன் நூலக நிர்வாகிகள் பேச்சு நடத்தியதோடு, பாதுகாப்புத் தரப்பினர் யாழ். மாநகர முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசினர். நிர்ப்பந்தங்களும் அழுத்தங்களும் அதிகரித்ததை அடுத்து மாலை 5.30 மணியளவில் தென்னிலங்கைவாசிகள் நூலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

pathivu

0 comments: