Thursday, December 16, 2010

அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த படகு விபத்தில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி மரணம்

0 comments
அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த படகு விபத்தில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி மரணம்

நேற்றுக்காலை அவுஸ்த்திரேலியாவுக்குச் சொந்தமான கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த அகதிகள் படகு விபத்தொன்றில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீர்ல் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து சுமார் 80 அகதிகளை ஏற்றிக்கொண்டு அவுஸ்த்திரேலிய நோக்கி வரும்போதே இந்த கோரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிறிஸ்த்துமஸ் தீவை நெருங்கிவிட்ட நிலையில் கடும் கடல்க் கொந்தளிப்புக் காரணமாக படகு பாறைகளுடன் மோதியதில் அது சிதறுண்டு அகதிகள் அனைவரும் கடலினுள் விழ்ந்ததாகவும் குழந்தைகள் பெண்கள் உற்பட 30 இற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழக்க ஏனையோரை அவுஸ்த்திரேலியக் கடற்படை காப்பாற்றியுள்ளது. படகிலிருந்த குழந்தைகள் அனைவரும் நீரில் மூழ்கிப் பலியாகியிருக்கிறார்கள்.

இச்சம்பவம் நடைபெற்ற வேளையில் எத்தேச்சையாக அப்பகுதியில் தனது விவரணப் படமொன்றை எடுத்துக்கொண்டிருந்த அவுஸ்த்திரேலியப் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த அவலத்தை முழுவதுமாக தனது வீடியோவில் பதிவுசெய்துள்ளார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்த அவலம் நடைபெற்றபோதும் கடும் கடல்க் கொந்தளிப்புக் காரணமாக பாறைகள் நிறைந்த அந்த ஆழ்கடல்ப் பகுதியை யாராலும் நெருங்கமுடியவில்லை. இறுதியில் அவுஸ்த்திரேலியக் கடற்படை சிறிய தரையிறங்குப் படகுகளில் அவ்விடத்தை அடைந்து நீரில் தத்தளித்தோரைக் காப்பாற்றியது.

தற்போதைய அரசின் கடுமையான அகதிகள் கொள்கையினால்த்தான் இந்த அவலம் ஏற்பட்டதாக அகதிகளுக்காக குரல் கொடுத்துவரும் பல அமைப்புக்கள் அரசைக் குற்றம் சாட்டியுள்ளன. ஆசிப் பிரதமரும் தனது வெளிநாட்டுப்பயணத்தை இடைநடுவே முறித்துக்கொண்டு அவசரமாக நாடு திரும்பியுள்ளார். வழக்கமாக அரசை அகதிகள் பிரச்சனையில் பிளந்து கட்டும் எதிர்க்கட்சியும் தற்போது அடக்கி வாசிப்பதோடு, விவாதம் செய்வதற்கு இது தருணம் அல்ல என்றும் சொல்லியிருக்கிறது.

0 comments: