இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நிபந்தனைபடி இன்று காலை வடக்கு கடற்கரை போலீஸ் நிலையம் சென்று கையெழுத்திட்டார்.
அங்கு சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வைக்க வேண்டும். இனி இதைவிட பெரிய ஊழல் வந்தால்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மறையும். சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை மீண்டும் தாக்குகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
நாங்களாக யாருடனும் கூட்டணிக்கு தூது போகமாட்டோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து போட்டியிடுவோம். இந்த இயக்கம் ஆட்சியில் அமர உருவாக்கப்படவில்லை. தமிழர்களுக்காக உருவானது. வரும் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
சிறையில் இருந்ததால் பயப்பட்டீர்களா? என்று கேட்கிறீர்கள். பயம் என்பது சீமானுக்கு கிடையவே கிடையாது. சிறையை கண்டு அஞ்சுபவன் நான் இல்லை. பயப்படுபவன் தமிழனே கிடையாது.
எங்களின் அடுத்த கட்ட போராட்டத்தை விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு சீமான் கூறினார்.
0 comments:
Post a Comment