விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கரிகாலன் இறுதிப்போரின் போது கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்காவின் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் [கருணா] தெரிவித்துள்ளார்.
‘லக்பிம நியூஸ்‘ ஆங்கில வாரஇதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 17ம், 18ம் திகதிகளில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யோகி, பாலகுமாரன், கரிகாலன், லோறன்ஸ் திலகர், புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பலர் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்திருந்தனர்.
இவர்கள் சிறிலங்காப் படையினரால் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதை அவர்களின் உறவினர்கள் நேரில் கண்டுள்ளனர்.
அதன் பின்னர் இவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை.
ஆனால் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் இறுதிப்போரிலேயே கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தற்போது கூறி வருகிறது.
முன்னதாக யோகி, பாலகுமாரன் ஆகியோர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் தடுப்புக்காவலில உள்ளவர்களில் அவர்கள் இல்லை என்றும் அமைச்சர் டியு.குணசேகர கூறியிருந்தார்.
தற்போது அமைச்சர் முரளிதரன் கரிகாலனும் இறுதிப் போரில் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பெரும்பாலான புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்து விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
போரின் முடிவில், கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட புலிகளின் முக்கிய தலைவர்களின் பட்டியலில், படையினரிடம் சரணடைந்த புதுவை இரத்தினதுரை, கரிகாலன், யோகி, பாலகுமாரன், லோறன்ஸ் திலகர் போன்றோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
ஆனால் இப்போது சிறிலங்கா அரசாங்கம் அவர்கள் சரணடையவில்லை என்றும் போரிலேயே கொல்லப்பட்டதாகவும் கூறிவருகிறது.
பொட்டுஅம்மானின் சடலம் படையினரால் கண்டுபிடிக்கப்படாத போதும் அவரும் இறந்து விட்டதாக அறிவித்திருந்தது சிறிலங்கா அரசாங்கம்.
அதுபோலவே அரசாங்கம் கூறுவது போன்று பாலகுமாரன், யோகி, புதுவை இரத்தினதுரை, கரிகாலன் போன்ற முக்கிய தலைவர்களும் இறுதிப் போரிலேயே கொல்லப்பட்டிருந்தால், இவர்களின் பெயர்களை அந்தப் பட்டியலில் பாதுகாப்பு அமைச்சு சேர்க்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளளது.
அதேவேளை ‘லக்பிம நியூஸ்‘ வாரஇதழுக்கு அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அளித்துள்ள செவ்வியின் மேலும் கூறியுள்ளதாவது,
“ வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு.
சிங்கள மக்கள் ஏன் வடக்கில் குடியேறக் கூடாது.?
அங்கு 1983ம் ஆண்டுக்கு முன்னர் பல சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்தன.
அவர்கள் மீளக் குடியேற வேண்டும். அவர்கள் தம்மிடம் ஆவணங்களை வைத்திருந்தால் யாழ்ப்பாணம் திரும்ப முடியும்.
இது குடியேற்றம் அல்ல.
வடக்கு நோக்கி சிங்கள வர்த்தகர்கள் படையெடுப்பதாக சில தமிழ் ஊடகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
ஆனால் சிங்கள வர்த்தகர்கள் அங்கு சென்றுள்ளதால் தான் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.
விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக இனிமேல் தலையெடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால் அவர்கள் இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக தம்மை மீளமைக்க முனைகிறார்கள்.
லண்டனில் நடந்த போராட்டத்தில் புலிகளின் கொடிகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏந்தியிருந்தனர்.
புலம்பெயர் தமிழர்களைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கத்தை மிரட்டிப் பணிய வைக்க பிரித்தானியா முனைகிறது.
பிரித்தானியா தடைசெய்துள்ள 40 பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புலிகள் இயக்கமும் அடங்கியுள்ளது.
அல்கெய்டா ஆதரவாளர்கள் லண்டன் நகர மையத்தில் ஒசாமா பின்லேடனின் படத்துடன் ஆர்ப்பாட்டம் செய்வதை பிரித்தானியா அனுமதிக்குமா?
புலம்பெயர் தமிழர்கள் தனியரசு அமைப்பது பற்றிக் கொண்டிருப்பது விளையாட்டுத்தனமான கருத்து.
அவர்களுக்கு வடக்கு,கிழக்கின் உண்மையான களநிலவரம் பற்றிய எதுவும் தெரியாது.
அவர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒரு சதத்தைக் கூடச் செலவிடவில்லை.
புலம்பெயர் தமிழர்களை வெற்றி கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரதான தூதரகங்களுக்கும் பொருத்தமான தூதுவர்களை நியமிக்க வேண்டும்.
அவர்கள் தமிழர்களையும் புலம்பெயர்ந்தோரையும் இணைக்க வேண்டும்.
தற்போதுள்ள தூதுவர்கள் தகைமையுள்ளவர்களாக இருந்தாலும் புலம்பெயர்ந்தோருக்கும் தூதுவர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளது.“என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
December
(30)
- சிங்கள படையினருக்காக பெண் போராளிகளை விருந்தாக்கிய ...
- சென்னையில், இலங்கை தமிழர்கள் நால்வர் கைது
- படையினரிடம் சரணடைந்த கரிகாலனும் படுகொலை? - போரில் ...
- பொங்கல் நாளன்று தமிழீழ அரசாங்கம் தேசிய அட்டைகளை அ...
- புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் க...
- சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா
- பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம்
- சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக வ...
- காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நட...
- சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியே...
- பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றா...
- இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்...
- சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்...
- ஐநாவிடம் போர்க்குற்ற ஆவணங்கள்
- இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட ...
- தமிழக முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும்! ஹெ...
- அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த ப...
- அல்சீரிய விடுதலைப் போராட்டம் – வரலாறு கற்றுத் தரும...
- ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் த...
- அவுஸ்திரெலியாத் தமிழர்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள...
- ஐ. நா. பிரேரணை குழுவுக்கு "கிளிக்" செய்து விசாரணைக...
- ஆட்சிக்காக உருவாக்கப்படவில்லை நாம் தமிழர் இயக்கம்....
- தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட...
- தமிழில் தேசிய கீதம் பாட தடை இல்லை! அரசு அறிவிப்பு
- தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங...
- விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடு...
- பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்...
- தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?
- இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள...
- இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே...
-
▼
December
(30)
Monday, December 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment