Monday, December 20, 2010

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணை பிரித்தானியா மீண்டும் அழைப்பு

0 comments
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“ஸ்கை நியூஸ்“ தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றில் பிரித்தானியாவின் இந்தக் கருத்தை வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் வெளியிட்டுள்ளார்.

“ கடந்த காலங்களில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் இன்னும் அதிகமான அக்கறையைக் காண்பிக்க வேண்டும்.

சிறிலங்கா அரசுடனான உறவுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நாம் அவர்களைச் சந்தித்துப் பேசுவோம்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் லண்டன் வந்திருந்த போது அவரைச் சந்தித்துப் பேசியிருந்தேன்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.nerudal.c...udal.23882.html

0 comments: