Monday, December 20, 2010

சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா

0 comments
50,000 வீடுகள் அமைக்கும் பணி தடைப்படமாட்டாது பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவிப்பு
 கொழும்பு, டிசெ.20
வடக்கு, கிழக்கில் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் இடை நிறுத்தப்பட்டாலும் இந்தியாவின் உதவியுடனான 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுமெனப் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் நேற்று "உதயனு"க்குத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில்
தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்கும் நாடுகள் ஆகியவற்றின் உதவியுடனான கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தும்படி டிசம்பர் 9ஆம் திகதி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடொன்றுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் சார்பாக அந்த அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டட புனர் நிர்மாணப் பணிகளுக்கும் நெற் களஞ்சியக் கட்டடங்கள் மற்றும் உற்பத்திகளைக் களஞ்சியப்படுத்தும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுமென்றும் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புதிய கட்டடங்கள் நிர்மாணிப்பதை இடைநிறுத்துவதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது தான் கொழும்புக்கு வெளியே இருப்பதாகவும் இத விடயம் குறித்து விரிவாக எதுவும் தெரிவிக்க முடியாதெனவும் தெரிவித்த அவர் இந்திய உதவியுடனான 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் அப்பணிகள் தொடரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

uthayan

0 comments: