நவாலி, டிசெ. 13
வயல் நிலத்தில் தேங்கி இருந்த மழை நீர் திடீ ரெனப் பெருஞ் சத்தத்துடன் வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று சுழன்று பாய்ந்தது. இதனைப் பார்த்த மக்கள் "சுனாமி” அல்லது சூறாவளி ஏற்பட்டு விட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர்.
நவாலி மேற்குப் பகுதியில் நேற்று நண்பகல் நேரம் இந்த அச்சமூட்டும் சம்பவம் இடம்பெற்றது. இது மினிச் சூறாவளியாக இருக்கலாம் என வளிமண்டல வியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரிவித்தார்.
நவாலி மேற்கு களையோடை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் (பிட்டி அம்மன்) ஆம்பன் குளத்துக் கும் இடைப்பட்ட பகுதியில் இந்த அச்சுறுத்தும் இயற் கைச் சீற்றம் இடம்பெற்றது.
""நண்பகல் 12.50 மணியளவில், பெரும் உறிஞ்சு குழல் வைத்து உறிஞ்சுவது போன்ற போன்ற சத்தம் கேட்டது. வழக்கையாற்றுப் படுக்கைக்கு அருகில் இருந்த வயல் நிலங்களில் இருந்த நீர் திடீரென வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று பெருஞ் சுழலா கப் பாய்ந்தது. இதனால் வானத்துக்கும் நிலத்துக்கும் இடையில் கரும்புகை வடிவிலான ஒரு நூல் தொடுப்பு ஏற்பட்டது' என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
""வானில் றொக்கெட் சென்றால் ஏற்படும் அடையாளம் போன்று அது இருந்தது' என்றார்றொருவர்.
சுமார் அரை மணி நேரம் இவ்வாறு தண்ணீர் வான் நோக்கி உறிஞ்சப்பட்டது எனப் பிரதேசவாசிகள் கூறினர்.
சூறாவளி போன்று நீர் வான் நோக்கி இழுக்கப்பட்டதைக் கண்ட, வயல் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதற்றமடைந்து ஓட்டம் எடுத்தனர். அப்பகுதி வீடுகளில் இருந்தவர்களும் பயத்தில் வீதிகளுக்கு விரைந்தனர். சுனாமி ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் மக்கள் இடம்பெயர்வதற்கும் ஆயத்தமாகினர்.
எனினும் துணிச்சல் மிக்க இளைஞர்கள் சிலர் தண்ணீர் வான் நோக்கி இழுக்கப்படுவதை அருகில் சென்று தமது கமெரா மொபைல் போன்கள் மூலமாகப் பதிவு செய்தனர்.
விடயம் காட்டுத் தீ போலப் பரவியதில் சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுண்டாய் பகுதியில் கடல் உள்வாங்கிக் கொண்டதாகவும் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. கொழும்பில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இது குறித்த விசாரிப்புக்களும் வந்தன.
இதற்கு முன்னர் ஒரு போதும் இவ்வாறான இயற்கைச் சீற்றங்கள் இப்பகுதியில் இடம்பெற்றதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த விநோத இயற்கைச் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:
இவ்வாறான சம்பவம் சாதாரணமாகவே இடம்பெறக் கூடியது. இதனை மினி சூறாவளி என்று கூறலாம். கடலிலும் தரையிலும் இது ஏற்படலாம்.
வளிமண்டலத்திலுள்ள அமுக்க வேறுபாடு காரணமாக இவ்வாறான மினி சூறாவளிகள் ஏற்படுகின்றன. கடந்த இரு தினங்களாக அதிக வெப்பநிலை நிலவியது. அதனாலேயே இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம்.
சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான சூறாவளிகள் உயிர் மற்றும் உடைமைக்கும் சேதங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே மக்கள் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.
uthayan
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
December
(30)
- சிங்கள படையினருக்காக பெண் போராளிகளை விருந்தாக்கிய ...
- சென்னையில், இலங்கை தமிழர்கள் நால்வர் கைது
- படையினரிடம் சரணடைந்த கரிகாலனும் படுகொலை? - போரில் ...
- பொங்கல் நாளன்று தமிழீழ அரசாங்கம் தேசிய அட்டைகளை அ...
- புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் க...
- சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா
- பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம்
- சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக வ...
- காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நட...
- சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியே...
- பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றா...
- இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்...
- சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்...
- ஐநாவிடம் போர்க்குற்ற ஆவணங்கள்
- இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட ...
- தமிழக முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும்! ஹெ...
- அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த ப...
- அல்சீரிய விடுதலைப் போராட்டம் – வரலாறு கற்றுத் தரும...
- ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் த...
- அவுஸ்திரெலியாத் தமிழர்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள...
- ஐ. நா. பிரேரணை குழுவுக்கு "கிளிக்" செய்து விசாரணைக...
- ஆட்சிக்காக உருவாக்கப்படவில்லை நாம் தமிழர் இயக்கம்....
- தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட...
- தமிழில் தேசிய கீதம் பாட தடை இல்லை! அரசு அறிவிப்பு
- தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங...
- விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடு...
- பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்...
- தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?
- இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள...
- இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே...
-
▼
December
(30)
Monday, December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment