Sunday, December 19, 2010

ஐநாவிடம் போர்க்குற்ற ஆவணங்கள்

0 comments
புலம்பெயர் தமிழர்களின் ஒரு சாராரின் ஆதரவைப் பெற்றுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு என்று கூறி கொள்ளும் அமைப்பானது இலங்கையின் இறுதிப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணங்களை ஐ நா நிபுணர் குழுவிடம் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இறுதிப் போரின் போது நடந்த விடயங்கள் குறித்து வந்த ஊடகத் தகவல்களையும், இதுவரை வெளிவராத சில புகைப்படங்களையும் தாம் ஐ நா குழுவிடம் அளித்துள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசைச் சேர்ந்த டிலக்ஸன் மொரிஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை போர் குறித்து சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் என்று தமது அமைப்பு தொடர்ந்து கோருவதாகத் தெரிவித்த அவர், தம்மிடம் ஆதாரம் அளித்தவர்களின் விபரங்களை பாதுகாப்பு காரணங்களால் வெளியிட முடியாது என்றும் கூறினார்.

http://www.bbc.co.uk...crimecomp.shtml

0 comments: