தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வரும் தைத் திருநாள் [14.01.2011] முதற்கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்க உள்ளதாக அதன் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் முழுவிபரமாவது,
தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரது அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுத்தளத்தை விரிவுபடுத்தும் நோக்கோடும் தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வரும் தைத் திருநாள் [14.01.2001] முதற்கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்க உள்ளது என்ற செய்தியினை மக்கள் அனைவருக்கும் அறியத்தருவதில் மகிழ்வடைகிறோம்.
இவ் அடையாள அட்டையில் உரியவர்களது அவசியமான விபரங்களோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான இலச்சினையையும் [Logo] பொறிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான இலச்சினையைத் தீர்மானிப்பதில் மக்கள் மத்தியிலிருந்து கிடைக்கப் பெறும் வடிவமாதிரிகளையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான இலச்சினை எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிய தங்கள் எண்ணக்கருவை ஒரு இலச்சினையாக வரைந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்குப் பிந்தாத வகையில் [05.01.2011] எமது செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
இவ்வாறு கிடைக்கப்பெறும் வடிவமாதிரிகளிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலச்சினை அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப்படும் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகிறோம்.
தங்கள் இலச்சினை வடிவமாதிரியை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org
நன்றி.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
December
(30)
- சிங்கள படையினருக்காக பெண் போராளிகளை விருந்தாக்கிய ...
- சென்னையில், இலங்கை தமிழர்கள் நால்வர் கைது
- படையினரிடம் சரணடைந்த கரிகாலனும் படுகொலை? - போரில் ...
- பொங்கல் நாளன்று தமிழீழ அரசாங்கம் தேசிய அட்டைகளை அ...
- புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் க...
- சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா
- பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம்
- சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக வ...
- காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நட...
- சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியே...
- பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றா...
- இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்...
- சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்...
- ஐநாவிடம் போர்க்குற்ற ஆவணங்கள்
- இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட ...
- தமிழக முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும்! ஹெ...
- அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த ப...
- அல்சீரிய விடுதலைப் போராட்டம் – வரலாறு கற்றுத் தரும...
- ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் த...
- அவுஸ்திரெலியாத் தமிழர்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள...
- ஐ. நா. பிரேரணை குழுவுக்கு "கிளிக்" செய்து விசாரணைக...
- ஆட்சிக்காக உருவாக்கப்படவில்லை நாம் தமிழர் இயக்கம்....
- தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட...
- தமிழில் தேசிய கீதம் பாட தடை இல்லை! அரசு அறிவிப்பு
- தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங...
- விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடு...
- பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்...
- தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?
- இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள...
- இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே...
-
▼
December
(30)
Monday, December 20, 2010
பொங்கல் நாளன்று தமிழீழ அரசாங்கம் தேசிய அட்டைகளை அறிமுகம் செய்ய உள்ளது
at
7:39 PM
Posted by
Unknown
0
comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment