Tuesday, December 14, 2010

தமிழில் தேசிய கீதம் பாட தடை இல்லை! அரசு அறிவிப்பு

0 comments
தமிழில் தேசிய கீதம் இசைக்கின்றமைக்கு தடை விதிக்கும் தீர்மானம் எதுவும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவே இல்லை அரசு இன்று அறிவித்து உள்ளது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயகார, பெற்றோலிய துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த ஆகியோர் இதனை அறிவித்து உள்ளார்கள்.

இது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று இவர்கள் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழில் தேசிய கீதத்துக்கு தடை விதிக்கின்றமை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டதா? என்று தமிழ்.சி.என்.என் அமைச்சர் வாசுதேவவிடம் வினவியது.

மேலதிகமாக எதுவும் சொல்ல முடியாது என்றார் இவர். இதே நேரம் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் தமிழில் தேசிய கீதம் இசைக்காமல் தடுக்கப்பட்டு இருக்கின்றனர் என்று மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வீ. ஆனந்தசங்கரி.

பொது வைபவம் ஒன்றில் தமிழில் தேசிய கீதம் பாட தயார் நிலையில் வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட பாடசாலை ஒன்றை சேர்ந்த மாணவர்களை இராணுவ அதிகாரி ஒருவரால் சில மாதங்களுக்கு முன் பாட விடாமல் தடுத்து விட்டார் என்று சங்கரி நினைவு கூர்ந்தார்.

கிளிநொச்சி தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் ஒன்று-இந்நிலையில் இங்கு சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று விடாப்பிடியாக இராணுவம் உள்ளது- இந்நடை முறை அங்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தார் இவர்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் நமோ நமோ தாயே என்று தமிழில் தேசிய கீதம் இருந்து வருகின்றது. 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசமைப்பில் சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தாலும் கூட நடைமுறையில் தமிழிலும் இசைக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்ப் பாடசாலைகளில் கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகள் எவையும் இல்லாமல் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்கிறார் அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன்.

ஆர் பிறேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றுக்கு வருகை தந்திருந்தார் என்றும் அவ்வைபவத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டது என்றும் இவர் தெரிவித்தார்.
tamilcnn.

0 comments: