Monday, December 20, 2010

சென்னையில், இலங்கை தமிழர்கள் நால்வர் கைது

0 comments


சென்னையில், ஈச்சம்பாக்கம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்த இலங்கை தமிழர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஐந்து பேரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது தெரியவந்தது.
இவர்களிடம் மேலும் நடாத்தப்பட்ட விசாரணையின்போது, சென்னையைச் சேர்ந்த பிரகாஸ் என்பவர் ஆளுக்கு 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு தங்களை ஒரு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியதாகவும், அதற்கிணங்கவே தாங்கள் அங்கு வந்ததாகவும் கூறியுள்ளதாக தமிழகப் பொலிசார் தெரிவித்தனர்.

0 comments: