Sunday, December 19, 2010

இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல்

0 comments
இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல்




இலங்கையில் தமிழ் பெண்களை டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்வுகள் குறித்து கடந்த 2007ம் ஆண்டு அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் பேசிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.


இதில், முகாம்களில் உள்ள தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளை கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் கடத்தி விற்றதாகவும், இலங்கை ராணுவத்திற்கு இறையாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை கடத்திக் கொன்றுள்ளனர் என்றும்
தெரிவித்துள்ளது.



குறிப்பாக கடந்த 2005ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தது இவர்கள் தான் என்றும், கருணா மற்றும் டக்ளசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டாம் என ராணுவத்தினருக்கு இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆணையிட்டதாகவும் விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது

0 comments: