Sunday, May 9, 2010

கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்

0 comments
வவுனியா: போரில் விடுதலைப் புலிகளை ராணுவம் தோற்கடித்த கையோடு, வடக்கு இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து வரும் மே 18ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுறும் இந்தத் தருணத்தில், தமிழரின் சோகத்தை தங்களின் வெற்றி விழாவாகக் கொண்டாடி வருகிறது சிங்கள பேரினவாதம்.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின், தமிழரின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை சிங்கள ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக வல்வெட்டித் துறையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை குண்டு வைத்து தகர்த்தது. பிரபாகரன் கடைசியாக தங்கியிருந்த வீட்டையும் அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

விடுதலைப் போராட்டத்துக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்த திலீபன் நினைவிடம், பல ஆயிரம் புலிகளின் நினைவிடங்கள் என அனைத்தையும் புல்டோசர் வைத்து இடித்து தள்ளிவிட்டது ராணுவம்.

கடந்த மாதம் கிளிநொச்சி, யானைஇறவில் உள்ள நினைவிடங்கள் அழிக்கப்பட்டன.

தற்போது வன்னிப் பகுதியில் முள்ளியவளையில் உள்ள மிகப்பெரிய நினைவிடம் அழிக்கப்பட்டுள்ளது. வன்னி் பகுதி தமிழர்கள் இந்த நினைவிடத்தை புனித இடமாக கருதி வழிபட்டு வந்தனர். அந்த வழியாகச் சென்றால் கூட வணங்கி விட்டுத்தான் செல்வார்கள்.

முள்ளிய வளையில் இருந்த பெண் புலியின் நினைவுத் தூணும் நொறுக்கப்பட்டுவிட்டது.

thatstamil.com

0 comments: