Saturday, May 15, 2010

கனேடிய நாடாளுமன்றத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவு நிகழ்வு

0 comments
கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கனேடிய நாடாளுமன்றத்தினுள்ளே ஈழத்தமிழர் படுகொலையை நினைவு கூரும் மே நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சமய வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் NDP கட்சியின் தலைவர் லிபரல் கட்சியைச் சேர்ந்த பொப் றே, பற்றிக் பிரவுண், பன்னாட்டு மனிதவுரிமைகள் அமைப்பின் உபகுழுவின் துணைத் தலைவர் ஜேன் டோறியன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.
இந்த நிகழ்வில் 30 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து முறையான விசாரணையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கனடிய தமிழர் உரையாற்றிய பேரவையைச் சேர்ந்த திரு சுபேஸ் நவா விரைவில் கனடாவிற்கு வர இருக்கும் ஐநா செயலாளர் நாயத்திடம் இலங்கையின் போர்க் குற்ற விசாரணை குறித்து கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8903&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

0 comments: