Tuesday, May 11, 2010

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு

0 comments
முள்ளிவாய்க்காலில் அப்பாவிப் பொதுமக்கள் இன அழிப்புச் செய்யப்பட்டதை அங்கீகரித்து, அஞ்சலி செலுத்துமாறு உலகத் தலைவர்களுக்கு 'ஒபாமாவிற்கான தமிழர்கள்' என்ற அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கோரிக்கைக் கடிதங்கள் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மத்திய மற்றும் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக், அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்காலில் குறுகிய காலத்தில் பொதுமக்கள் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போதிலும், உலகத் தலைவர்களும், பன்னாட்டு சமூகமும் உரிய கவனம் செலுத்தத் தவறியிருப்பதையும் இந்தக் கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது

0 comments: