Saturday, May 15, 2010

தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – அரசாங்கம்‐

0 comments




தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் மற்றும் தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் யுத்தத்தின் பின்னரான இலங்கை தொடர்பான புலம்பெயர் தமிழர்கள், சர்வதேச ஊடகங்களின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

தமிழ் புலம்பெயர் மக்களை விடுதலைப் புலிகள் பிழையான வழியில் இட்டுச் சென்றுள்ளதாகவும், இதன் காரணமாகவே புலம்பெயர் மக்கள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சில சர்வதேச ஊடகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரச்சாரம் செய்து வருவதாகவும், யுத்தத்தின் பின்னரான இலங்கையின் உண்மை நிலைமையை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உண்மை நிலைமை குறித்து புலம்பெயர் தமிழர்களுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச செய்தி ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments: