Saturday, May 15, 2010

காணமல் போனோரை விடுவிக்கக் கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

0 comments
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணமல் போனவர்களை விடுவிக்கக் கோரியும் அவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில், கானமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரித்து வருகின்றோம்.

யாழ்ப்பாணம், மான்னார், வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து 300ற்கும் மேற்பட்டவர்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக முழமையான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் மாவட்ட ரீதியாக குழக்கள் அமைக்கப்பட்டு பனாங்கொடை, இரத்மலானை, வெலிக்கந்த போன்ற இடங்களில் உள்ள முகாம்களுக்கு காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்களை அழைத்தச் சென்று தேடவுள்ளோம்.

இது தவிர காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிந்து கொள்வதற்கும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுதலை செய்யுமாறும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடமாறும் அவ்வாறு எவ்விதமான பதில்களும் கிடைக்கப்பெறடின் ஐ_ன் மாதம் முதல் வாரம் தொடக்கம் கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

0 comments: