Saturday, May 15, 2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிராகிரியுங்கள்! - ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா கோரிக்கை!!

0 comments
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என சிறிலங்கா அரசு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலைத்தேய நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அரசியல் ரீதியாகவோ அல்லது குறியீட்டு ரீதியாகவோ எவ்வித உதவிகளையும் வழங்க வேண்டாம் என பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பேர்க்குக்கான சிறிலங்காத் தூதுவரும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்காப் பிரதிநிதியுமான ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு இராஜதந்திர பாதுகாப்பு மற்றம் தீவிரவாத நிலைமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவது ஆபத்தானது என தனதுதரையில் குறிப்பிட்ட அவர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும், மேற்குலக நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த இலங்கைத் தமிழ் மக்களுமே ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
இலங்கையில் இயல்பு வாழ்க்கை நிலவுவதைக் காரணம் காட்டி தாங்கள் திருப்பி அனுப்பப்படலாம் என்ற காரணத்தினாலேயே, பிரச்சினையைப் பெரிதுபடுத்த சில தரப்பினர் முயன்று வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
'சிறிலங்காவின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளிலிருந்து இரண்டு விடயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். வலுப்பெற்றிருந்த ஆயுதப் போராட்டக் குழுவொன்று தோற்கடிக்கப்பட்டமை என்பதோடு அவர்கள் மிக வலுவான சர்வதேச வலைமைப்பையும் கொண்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகள் வலுவான சர்வதேச வலையமைப்பை கொண்டுள்ளதுடன், வௌ;வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் ஊடாக தமது செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகளிடம் இன்னமும் நிறைய பணம் இருக்கின்றது என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது. இணையம் ஊடாகவும் பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளுக்கும் ஐரோப்பிய நாடுகள் இடமளிக்கக்கூடாது' என அவர் தனதுரையில் தெரிவித்துள்ளார்..

0 comments: