Thursday, May 13, 2010

சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்?

0 comments
சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்?






விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் சுயநினைவை இழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.



யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வட்டித்துறைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் சுயநினைவை இழந்ததார் என்று வெளியாகி உள்ள செய்தி யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை.



பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புவதாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று தமிழக அரசு பரிந்துரை செய்ததால் மத்திய அரசும் பார்வதி அம்மாள் தமிழகம் வர அனுமதி அளித்தது.



தமிழகத்தில் மருத்தவச் சிகிச்சைக்காக 6 மாதம் மருத்துவமனையில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. வேறு சில நிபந்தனைகளும் கூறப்பட்டன.



இந்நிலையில் மலேசியாவில் விசா காலம் முடியும் தருவாயில் இருந்ததால், பார்வதி அம்மாள் திடீரென மலேசியாவில் இருந்து கொழும்பு சென்றார். அங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்தார். முன்னாள் எம்பியும், அவரது உறவினருமான சிவாஜி லிங்கம் பார்வதி அம்மாளை கவனித்து வருகிறார்.



பார்வதி அம்மாளுக்கு பக்கவாத நோய் தாக்கியிருப்பதால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக சிவாஜி லிங்கம் கூறினார். எனவே, பார்வதி அம்மாள் மகள்கள் மற்றும் உறவினர்கள் ஆலோசனைப்படி அவரை தமிழகம் கொண்டு செல்வதா? அல்லது இலங்கையிலேயே சிகிச்சை அளிப்பதா என்று முடிவெடுப்போம் என்று சிவாஜி லிங்கம் கூறினார்.



இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வல்வெட்டித்துறைக்கு சிகிச்சைக்காக பார்வதி அம்மாளை இன்று அழைத்துச் செல்வதாக சிவாஜி லிங்கம் கூறினார்.



யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வட்டித்துறைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் சுயநினைவை இழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த செய்தி யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நக்கீரன்

0 comments: