Wednesday, May 12, 2010

சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிராக போராட்டம் தொடரும்

0 comments
தமிழர்களின் உணர்வைப்புரிந்து iifaவிலிருந்து நடிகர் அமிதாப்பச்சன்
விலகியுள்ளார். அவரது இடத்தில் நடிகர் சல்மான்கான் இப்பொழுது புதிதாக
பொறுப்பேற்றுள்ளார். நடிகர் சல்மான்கானைக்கண்டித்தும் போராட்டங்கள்
தொடருமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை
அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2
முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப்
பச்சன்முக்கிய பங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழர்களின்இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும்
நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம்
தமிழர் இயக்கத்தினர் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன் சில
வாரங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அமிதாப் அவர்களைச்
சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில்
கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு
சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள
மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும் படி வற்புறுத்தியும் நடிகர்
அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்‌ஷா
வீட்டின் முன் நேற்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற
உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டத்தின் விளைவாக அது குறித்து பரீசீலித்த
அமிதாப் iifa விருது வழங்கும் கமிட்டியில் இருந்து,அதிலிருந்து
விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று புதன் கிழமை iifa விருது வழங்கும் கமிட்டியானது
அமிதாப் அவர்களை தூதர் பதவியில் இருந்து விடுவித்தது.ஐஸ்வர்யாராய்,அபிஷேக்
பச்சன் ஆகியோரும் விலகிக்கொண்டனர்.நடிகர் சல்மான் கான் அவர்களை புதிய
தூதராக இன்று காலை நியமனம் செய்துள்ளது.லாரா தத்தா,விவேக் ஓபராய்
ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து இன்று கருத்து தெரிவித்த
நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான்,தமிழர்களின் ஒப்பாரியும் மரண ஓலமும்
ஆட்சியில் இருக்கும் இந்தியர்களுக்கும் அவர்களை அண்டி இருக்கும்
திராவிடர்களுக்கும்,சில தமிழர்களுக்கும் புரியாத நிலையில் எங்கோ
உத்திரப்பிரதேசத்தில் பிறந்த நடிகர் அமிதாப் அவர்களுக்கு
புரிந்திருக்கின்றது.அதனை அவர் உணர்ந்து கொண்டு கொழும்பு சர்வதேச திரைப்பட
விழாவிற்கு செல்ல மறுத்திருக்கின்றார்.அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இனி புதிதாகப்பொறுப்பேற்றுள்ள சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய்
ஆகியோருக்கு எதிரான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்..

http://meenakam.com/?p=16044

0 comments: